219. திருத்தினைநகர்





	


	



























	




 




	








 




5:51:23 AM         Friday, May 01, 2026

219. திருத்தினைநகர்

219. திருத்தினைநகர்
219. திருத்தினைநகர் 219. திருத்தினைநகர் 219. திருத்தினைநகர் 219. திருத்தினைநகர் 219. திருத்தினைநகர் 219. திருத்தினைநகர் 219. திருத்தினைநகர் 219. திருத்தினைநகர் 219. திருத்தினைநகர் 219. திருத்தினைநகர்
Product Code: 219. திருத்தினைநகர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                               சிவக்கொழுந்தீசர் கோவில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. இத்தலம் தற்போது தீர்த்தன கிரி என வழங்கப்படுகிறது. கடலூரிலிருந்து வடமேற்கே 18 கி.மீ. தொலைவில் பெண்ணையாற்றின் வடகரைப் பகுதியில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் கடலூருக்கு செல்லும் ரயில் பாதையில் உள்ள புதுச்சத்திரம் என்னும் ரயில் நிலையத்திற்கு வடமேற்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

சுவாமி : சிவக்கொழுந்தீசர்  சிவாங்கரேசுவரர் திருந்தீசுவரர்

அம்பிகை : நீலாயதாட்சி  ஒப்பிலா நாயகி கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்

தலமரம் : கொன்றை

தீர்த்தம் : ஜாம்பவதீர்த்தம்

பதிகம் : சுந்தரர் - 1

திருத்தலச் சிறப்புகள் : இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் நோய் நீங்கும். சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். தொழுநோயை தீர்க்கும் தாமரைக்குளம் ஒன்று உள்ளது.

கோயில் அமைப்பு: இவ்வாலயத்தின் இராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி விளங்குகிறது. கோபுர வாயில் வழி உள் நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம். நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. மேலும் இந்த பிராகாரத்தில் நால்வர், விநாயகர், சுப்பிரமணியர், வீரசேன மன்னன் ஆகியோரின் சந்நிதிகளும், தலமரமாகிய கொன்றையும், பைரவர், சூரியன் திருமேனிகளும் உள்ளன. பிரகார வலம் முடித்து, தெற்கிலுள்ள பக்கவாயில் வழியாக உள்ளே சென்றால் நேரே நடராச சபை உள்ளது. நடராச மூர்த்தியின் கீழே பீடத்தில் மகாவிஷ்ணு, சங்கை வாயில் வைத்து ஊதுவது போலவும், பிரம்மா பஞ்சமுக வாத்யம் வாசிப்பது போலவும், சிறிய மூர்த்தங்கள் உள்ளன. திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். இந்த தரிசனம் விசேஷ பலன்களை தரக்கூடியது. நடனம், இசை பயில்பவர்கள் இச்சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. உள் மண்டபத்தில் இடதுபுறம் நோக்கினால் மூலவர் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி விழுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். லிங்கோத்பவருக்கு இருபுறமும் பிரம்மா, விஷ்ணு நின்று தரிசிக்கும் இறைவனை தரிசிக்கும் கோலத்தில் காணப்படுகின்றனர். சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது.

தல வரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு சமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணி, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றான். ஆனால் அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். அப்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க, விவசாயி வீட்டிற்குச் சென்று உணவு எடுத்து வருவதாகக் கூறினான். அடியவராக வந்து இறைவன் அவனிடம் "நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்" என்றார். விவசாயியும் ஒத்துக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினான். இறைவன் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் அன்று விதைக்கப்பட்டிருந்த திணைப் பயிர்கள் அனைத்தும் நன்கு விளைந்து, கதிர்கள் முற்றி, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆச்சர்யமடைந்த விவசாயி சந்தேகத்துடனே அடியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் அன்னமிட்டான். அடியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் "ஒரே நாளில் திணைப்பயிர் விளைந்தது எப்படி?"' என தன் சந்தேகத்தை கேட்டான். அடியவராக வந்த முதியவர் மறைந்து, சிவகெருமானாக அவனுக்கு காட்சி தந்து, தானே அடியவராக வந்ததை உணர்த்தினார். சிவதரிசனம் கண்டு மகிழ்ந்த விவசாயி இறைவனை அங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். இறைவனும் சுயம்பு லிங்கமாக அவ்விடத்தில் எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது.

பெரியான் என்னும் பள்ளன் வயலில் உழுது கொண்டிருந்தபோது சிவபெருமான் அடியவராக வந்து பசிக்கு உணவு கேட்க அவன் தன் மனைக்குச் சென்று உணவு கொண்டு வந்தான். அதற்குள் அந்த நிலத்தில் தினை விளைந்திருக்குமாறு செய்து இறைவன் அவனுக்குக் காட்சி தந்தார். இதனால் தினைநகர் என ஆயிற்று. இறைவனுக்குத் தினையமுது படைக்கப்படுகிறது. இத்தலத்தில் விநாயகர் சுப்பிரமணியர் நால்வர் வீரசேன மன்னன் பைரவர் சூரியன் நடராஜர் நவக்கிரகம் தட்சிணாமூர்த்தி பிரம்மன் திருமால் துர்க்கை சண்டேசுவரர் முதலிய சந்நிதிகள் உள்ளன. பெரியான் வழிபட்ட சிவலிங்கம் அம்மன் கோவிலில் உள்ளது. பெரியான் அடியார்களின் திருவுருவங்கள் திருக்கோயில் சுவரில் அமைந்துள்ளன. 

தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கடலூர் - சிதம்பரம் பிரதான சாலையில், கடலூருக்கு சுமார் 18 கி.மீ. தொலைவிலுள்ள ஆலப்பாக்கம் தாண்டி மேட்டுப்பாளையம் என்ற கிராமம் வரும். அங்கிருந்து தீர்த்தனகிரிக்குச் செல்லும் சாலை பிரிகிறது. பிரியும் சாலையில் சுமார் 4 கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

ரயில் நிலையம்   : புதுச்சத்திரம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×