086. திருபட்டீச்சரம்





	


	



























	




 




	








 




10:27:23 PM         Thursday, June 25, 2026

086. திருபட்டீச்சரம்

086. திருபட்டீச்சரம்
086. திருபட்டீச்சரம் 086. திருபட்டீச்சரம் 086. திருபட்டீச்சரம் 086. திருபட்டீச்சரம் 086. திருபட்டீச்சரம் 086. திருபட்டீச்சரம் 086. திருபட்டீச்சரம் 086. திருபட்டீச்சரம் 086. திருபட்டீச்சரம் 086. திருபட்டீச்சரம் 086. திருபட்டீச்சரம் 086. திருபட்டீச்சரம் 086. திருபட்டீச்சரம் 086. திருபட்டீச்சரம் 086. திருபட்டீச்சரம்
Product Code: 086. திருபட்டீச்சரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                               தேனுபுரீஸ்வரர் கோவில், பட்டீச்சரம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - தஞ்சாவூர் ரயில் பாதையில் உள்ள தாராசுரம் ரயில் நிலையத்திலிருந்து தென் மேற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

சுவாமி : பட்டீச்சுரர்,  தேனுபுரீசுவரர்

அம்பிகை : ஞானாம்பிகை,  பல்வளை நாயகி

தலமரம் : வன்னி

தீர்த்தம் : ஞான தீர்த்தம்

பதிகம் : திருஞானசம்பந்தர் - 1

திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் காமதேனுவின் புதல்வி பட்டி பூசித்த தலம். அம்பிகை தவம்புரிந்த தலம். அதனால் தேவி வனம் எனவும் பெயர் பெற்றது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். பராசக்தி தனித்து தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர இறைவன் பராசக்தியின் தவத்திற்கு உவந்து தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடைய தலம். விசுவாமித்திர முனிவர் காயத்திரி சித்திக்கப் பெற்று பிரம்மரிஷி என்ற பட்டம் இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது. தர்மசர்மா என்ற மாளவ தேசத்து அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்திலுள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கப்பெற்றான்.வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை இராமர் இங்கு தன் வில்லின் முனனயால் கோடிதீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கிக் கொன்டார். இத்தலத்தில் இராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் இராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது.

திருஞானசம்பந்தருக்கு வெய்யிலின் கொடுமை தாக்காமல் இருக்க இத்தலத்து இறைவனை முத்துப் பந்தல் அளித்து அதன் நிழலில் சம்பந்தர் தன்னை தரிசிக்க வரும்போது நந்தி மறைக்காமல் இருக்க பட்டீஸ்வரர் நந்தியை விலகி இருக்கச் சொல்லி அருளிய சிறப்புடையது. இதன்பொருட்டு இங்குள்ள ஐந்து நந்திகளும் சந்நிதியிலிருந்து சற்று விலகி இருக்கின்றன.

இத்தலம் இராம பிரான் பூசித்த தலம். இங்கு இராமலிங்கமும், கோடி தீர்த்தமும் தனியாக உள்ளது. வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை இராமர் இங்கு தன் வில்லின் முனையால் கோடிதீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கிக் கொண்டார். இத்தலத்தில் இராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் உள்ளது. இங்கு வடக்குக் கோபுர வாயிலில் உள்ள துர்க்கை சந்நிதி தனிச் சிறப்புடையது. இத்தலத்தில் விநாயகர், முருகர், சப்தகன்னியர், ரேணுகாதேவி, மகாலிங்கர், மகாலட்சுமி, ஞானசம்பந்தர், பைரவர், நடராஜர் முதலிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் திருத்தல விநாயகராக அனுக்ஞை விநாயகர், மதவாரணப்பிள்ளையார் உள்ளனர்.

கிழக்கு மேற்காக 650 அடி நீளமும், தெற்கு வடக்காக 295 அடி நீளமும் உடையது. 5 பெரிய உயரமான கோபுரங்களும் 3 பிரகாரங்களும் உடையது. பிரதான கோபுரம் 7 நிலைகளையும் மற்ற கோபுரங்கள் 5 நிலைகளையும் உடையன. கோவிலின் முதல் பிரகாரத்தில் உள்ள நடு மண்டபத்தில் மூலவர் பட்டீசுவரர் சந்நிதி இருக்கிறது. அம்மன் சந்நிதியில் உள்ள மண்டபம் கலையம்சம் வாய்ந்தது. இம்மண்டத் தூண்களில் உள்ள யாளிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் நடுவில் மேலே கல்லாலான ஊஞ்சல் சங்கிலி உள்ளது. ஒரே கல்லாலான சக்கரம் சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கலையம்சம் பொருந்திய பல சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.வெளிப் பிராகாரத்தில் வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பட்டீஸ்வரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை. சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீஸ்வரம் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். பட்டீஸ்வரம் துர்க்கையை பக்தர்கள் ராகுகால நேரங்களிலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுதலைச் சிறப்பாக கருதுகின்றனர். துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்கள் கொண்டு அருள் பாலிக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள்.காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்மவாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும்.ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது.அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.

விழாச்சிறப்பு : வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில் காலையில் பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் ஊர்வலமாகப் புறப்பட்டு, திருமலைராஜன் ஆற்றிற்கு சென்று தீர்த்தம் கொடுத்து, அங்கிருந்து இரவில் மூர்த்திகள் விமானங்களில் புறப்பட்டுக் காட்சி கொடுத்து ஆலயத்திற்கு வந்து சேரும். மார்கழி அமாவாசை நாளில் பஞ்ச மூர்த்திகள் வாகனங்களில் புறப்பட்டு வீதிவலம் வந்து, கோடி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும். இராமருக்கு ஏற்பட்ட சாயஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற ஐதீகத்தின் காரணமாக இவ்விழா நடைபெறுகிறது. ஆனித்திங்கள் முதல் நாளில் ஞானசம்பந்தர் முத்துப்பந்தல் பெற்ற திருவிழா நடைபெறுகிறது.

தினந்தோறும் காலை 6.00 முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.


அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : தாராசுரம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×