119. திருமீய்ச்சூர்





	


	



























	




 




	








 




5:17:04 AM         Wednesday, April 15, 2026

119. திருமீய்ச்சூர்

119. திருமீய்ச்சூர்
119. திருமீய்ச்சூர் 119. திருமீய்ச்சூர் 119. திருமீய்ச்சூர் 119. திருமீய்ச்சூர் 119. திருமீய்ச்சூர் 119. திருமீய்ச்சூர் 119. திருமீய்ச்சூர் 119. திருமீய்ச்சூர் 119. திருமீய்ச்சூர் 119. திருமீய்ச்சூர் 119. திருமீய்ச்சூர் 119. திருமீய்ச்சூர் 119. திருமீய்ச்சூர் 119. திருமீய்ச்சூர் 119. திருமீய்ச்சூர் 119. திருமீய்ச்சூர்
Product Code: 119. திருமீய்ச்சூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                             மேகநாதசுவாமி கோவில், திருமீயச்சூர்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலத்தின் உள்ளேயே திருமீய்ச்சூர் இளங்கோயில் என்ற மற்றொரு பாடல்பெற்ற சிவஸ்தலம் உள்ளது.

சுவாமி : மேகநாதர்,  முயற்சிநாதர், அருணேஸ்வரர்

அம்பிகை : லலிதாம்பாள்,  சௌந்தர நாயகி

தலமரம் : வில்வம்

தீர்த்தம் : சூரிய தீர்த்தம்

பதிகம் : திருஞானசம்பந்தர் - 14

திருத்தலச் சிறப்புகள்:  சிவபெருமான் சாபத்தால் மேனி கருகிப் போன சூரியன் சாப விமோசனம் பெற திருமீயச்சூரில் 7 மாத காலம் கடுந்தவம் புரிந்தும் மேனி நிறம் மாறாததால் வாய்விட்டு அலறி இறைவனை அழைக்க இறைவனோடு தனித்திருந்த பார்வதி இக்கூக் குரலால் தம்முடைய ஏகாந்தத்திற்குப் பங்கம் விளைவித்த சூரியனுக்குச் சாபம் அளிக்க நினைத்தாள். முன்னரே சாபத்தால் வருந்திக் கொண்டிருக்கும் சூரியனை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அமைதி கொள்ளுமாறும் இறைவன் கூற, பார்வதி சாந்தநாயகி ஆனாள். இறைவன் வேண்டிக் கொண்டதற்கு இணங்கச் சாந்தநாயகியான அன்னையின் வாயிலிருந்து வெளிப்பட்ட 'வசினீ' என்ற வாக்தேவதைகள் வாழ்த்திப் பாடிய வாழ்த்துரைகளான ஆயிரம் திருநாமங்கள்தாம் லலிதா சஹஸ்ரநாமம் என்ற பெயர் பெற்றது. இச்சம்பவத்தைச் சித்தரிக்கும் விதமாகக் கோவில் விமானத்தின் கீழ் தெற்கில் ஷேத்திர புராணேச்வரர் பார்வதியின் முகவாயைப் பிடித்துச் சாந்தநாயகியாய் இருக்கச் சொல்லி வேண்டுவது போன்ற வடிவில் காணப்படும் சிற்ப அழகை வேறெந்தக் கோயிலிலும் காண்பது அரிது. இந்த சிற்பத்தை ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் அம்பாள் கோபமுடன் இருப்பதைப் போலத் தோன்றும். இதே சிற்பத்தை மறுபக்கம் சென்று பார்த்தால் அம்பாள் சாந்தசொரூபியாக நாணத்துடன் காணப்படுவாள். நேரில் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய சிற்பம் இது.

ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாதம் 21ந்தேதி முதல் 27ந்தேதி வரை உதய காலத்தில் சூரியன் மூலவர் மேகநாதரைச் சிறப்பாகப் பூஜிக்கின்றான் என்று கூறப்படுகின்றது. அந்த 7 நாட்களிலும் சூரியனது கிரணங்கள் கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது விழுவதை காணலாம். இங்குள்ள லிங்கத்தை எமன் 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டுப் பல நன்மைகள் அடைந்தான். எனவே தீராப் பிணியால் துன்பப்படுபவர் இங்குள்ள இறைவனை 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டால் எமன் அருள் பெற்று, பிணி நீங்கி நலம்பெறுவர் என்று நம்பப்படுகிறது.இத்திருத்தலத்தில் சூரியன் வழிபட்டுப் பேறு பெற்றார்.

கோவில் அமைப்பு: இத்தலத்து விமானம் தூங்கானை மாட அமைப்புடையது. யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள 'கஜப்ரஷ்ட விமானம்' மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும் இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சந்நிதி உள்ளது. மகாமண்டபத்தில் ரதவிநாயகர் உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், சப்தமாதர்கள் பூசித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூசித்த லிங்கங்கள் உள்ளன. 

இறைவன் மேகநாதர் சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். இறைவன் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி அமைந்துள்ள ஏகப்பட்ட மண்டபங்களும் துவார பாலகர்களாகச் செதுக்கப்பட்டுள்ள கணபதி சிலைகளும் கல் தூண்களும் சோழர்காலச் சிற்பக் கலை அழகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. கோயிலின் உட்பிரகாரத்தை விட்டு வெளியே வந்தால் வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் லலிதாம்பிகை கோயிலைக் காணலாம். இவளுக்கு சௌந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. உலகிலேயே இது போன்ற கலை அழகு மிக்க இறைவி உருவை வேறெந்தக் கோயிலிலும் காண முடியாது. அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சி அளிக்கும் அம்பாளின் இருப்பிடம் ஒரு ராஜ தர்பார் போன்ற உணர்வைத் தருகிறது. இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை

தல வரலாறு: காஷிப முனிவரின் புதல்வரான அருணன், சூரியனால் ஏமாற்றப்பட்டார். இதனால் காஷிப முனிவரின் சாபத்தினால் மேனி கருகிப் போன சூரியன் சாபவிமோசனம் பெற இத்தலத்தில் 7 மாத காலம் கடுந்தவம் புரிந்தும் மேனி நிறம் மாறாததால் கோபத்துடன் உரக்க கூச்சலிட்டு இறைவனை அழைக்க இறைவனோடு தனித்திருந்த பார்வதி இக்கூக்குரலால் தம்முடைய ஏகாந்தத்திற்கு பங்கம் விளைவித்த சூரியனுக்கு சாபம் அளிக்க நினைத்தாள். முன்னரே சாபத்தால் வருந்திக் கொண்டிருக்கும் சூரியனை மேலும் வருத்த வேண்டாம் என்று அமைதி கொள்ளுமாறு இறைவன் கூற, பார்வதி சாந்தநாயகி ஆனாள். இறைவன் வேண்டிக் கொண்டதற்கு இணங்கச் சாந்தநாயகியான அன்னையின் வாயிலிருந்து வெளிப்பட்ட 'வசினீ' என்ற 'வாக்தேவதைகள்' வாழ்த்திப் பாடிய வாழ்த்துரைகளான ஆயிரம் திருநாமங்கள் "லலிதா சஹஸ்ரநாமம்" என்று பெயர் பெற்றது. இச்சம்பவத்தைச் சித்தரிக்கும் விதமாக கோயில் விமானத்தின் கீழ் தெற்கில் ஷேக்ஷத்ர புராணேச்வரர் பார்வதியின் முகவாயைப் பிடித்துச் சாந்தநாயகியாய் இருக்கச் சொல்லி வேண்டுவது போன்ற வடிவில் காணப்படும் சிற்பம் மிகவும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பிரபல்யமான "லலித்தா நவரத்தினமாலா" என்ற திருநாமம் அகத்திய முனிவரால் இத்தலத்தில் இயற்றப்பட்டது.

பெங்களூரில் உள்ள ஒரு பக்தை, தன் கனவில் அம்பாள் வந்ததாகவும் தனது காலில் கொலுசு அணியுமாறு கூறியதாகவும், அந்த பக்தை கூற, அம்பாளின் கற்சிலையில் கால்பகுதியில் மட்டும் கொலுசு அணிகிற அளவிற்கு சிறு துளை இருந்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். பிறகு அந்த பக்தை கொலுசு செய்து அம்பாளுக்கு அணிவித்தார் என்றும் இது உண்மைச்சம்பவம் என்றும் அப்பகுதி மக்களால் அறியப்பட்ட உண்மை ஆகும்.

தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம்   : பேரளம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×