203. திருப்பூவணம்





	


	



























	




 




	








 




3:47:49 PM         Thursday, April 30, 2026

203. திருப்பூவணம்

203. திருப்பூவணம்
203. திருப்பூவணம் 203. திருப்பூவணம் 203. திருப்பூவணம் 203. திருப்பூவணம் 203. திருப்பூவணம் 203. திருப்பூவணம் 203. திருப்பூவணம் 203. திருப்பூவணம் 203. திருப்பூவணம் 203. திருப்பூவணம் 203. திருப்பூவணம்
Product Code: 203. திருப்பூவணம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. திருப்பூவனம் மதுரைக்குக் கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

சுவாமி : பூவணநாதர் , புஷ்பவனேஸ்வரர்

அம்பிகை : சௌந்தரநாயகி, மின்னனையாள்

தலமரம் : பலா

தீர்த்தம் : மணிகர்ணிகை  வைகை நதி

திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 2
சுந்தரர் - 1

திருத்தலச் சிறப்புகள்: பிரம்மன் வழிபட்ட தலம். இத்தலம் பொன்னனையாள் என்னும் நடனமாதின் பக்திக்காக இறைவன் சித்தராக வந்து அருளிய தலம். இவ்வம்மையாரின் இல்லத்திலுள்ள ஈயம், செம்பு, இரும்பு போன்ற பொருட்களை இரசவாத முறையால் செம்பொன்னாக்கி அருளினார். அம்மையாரும் அச்செம்பொன்னால் சிவபெருமானின் சிலை செய்தார். பின் அதனை வழிபட்டுக் கன்னத்தை அள்ளி முத்தம் கொடுத்தார். முத்த நகக்குறி அடையாளம் இன்றும் காணலாம். தமிழ்நாட்டு முடியுடைவேந்தர் மூவர்களும் ஒருங்குகூடி வழிபட்ட தலம் இத்தலம். மூவர் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலம்.

கிழக்கு நோக்கிய சந்நிதி. இது காசிக்கு நிகரான தலம். வைகையாற்றின் கரையில் உள்ள தலம். இத்திருத்தலத்தில் மூவர் பெருமக்களுக்கும் வைகையாற்றின் மணல் சிவலிங்கமாகக் காட்சியளித்ததால் அவர்கள் மிதித்துச் செல்ல அஞ்சி ஆற்றின் எதிர்க் கரையிலிருந்து இறைவனைத் தரிசித்தனர். அதனால் நந்தி சற்று சாய்ந்துள்ளதைக் காணலாம். இத்தலத்தில் வைகையாறு உத்தர வாகினியாக வடக்கு நோக்கிச் செல்கிறது. பிரகாரத்தில் பாஸ்சர விநாயகர், முருகர், சூரியன் சயன பெருமாள் நால்வர் அறுபத்து மூவர் சப்த மாதர்கள் மகாலட்சுமி தட்சிணாமூர்த்தி பதஞ்சலி முனிவர் வியாக்கிரபாதர் நடராஜர் நவக்கிரகம் சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன. 

தமிழ் நாட்டு அரசர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் மூவராலும் வழிபட்டு போற்றப் போற்றதென்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். மதுரை சோமசுந்தரக் கடவுள் செய்த 64 திருவிளையாடல்களுள், சித்தராக வந்து திருப்பூவணத்தில் வாழ்ந்து வந்த பொன்னையாளுக்கு தங்கம் கொடுத்து இரசவாதம் செய்ததும் ஒரு திருவிளையாடல் என்பதால் இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது வைகை ஆற்றைக் கடந்து தான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்கு தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் சிவலிங்கங்களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார். ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது. இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. இக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.

கோவில் அமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. அம்மன் சௌந்தரநாயகி சந்நிதியும் தனிக்கோவிலாக ஒரு சிறிய கோபுரத்துடன் உள்ளது. பெரிய கோபுரம் கடந்து உள்ளே சென்றவுடன் வரிசையாக கம்பத்தடி மண்டபம், நளமகராசன் மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆறுகால் மண்டபம் ஆகியவை உள்ளன. ஆறுகால் மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும் அதையடுத்து அர்த்தமண்டபத்துடன் கூடிய கருவறையும் உள்ளது. மூலவர் புஷ்பவனேஸ்வரர் சுயம்புலிங்கத் திருமேனி உருவில் காட்சி தருகிறார். லிங்கத் திருமேனியில் திரிசூலமும், சடைமுடியும் காணப்படுகின்றன. மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பினபுறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி ஆலயத்தினுள் ஒர் தனிக் கோவிலாக அமைந்துள்ளது. இரண்டு சந்நிதிகளும் ஆலயத்தின் ஒரே மதிற்சுவரின் உள்ளே சுற்றுப் பிரகாரங்களுடன் அமையப் பெற்றுள்ளன.

கோவிலின் தலவிருட்சமாக பலாமரம் விளங்குகிறது. மணிகர்ணிகை தீர்த்தம், வைகைநதி, வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகியவை இவ்வாலத்தின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. உள்பிரகாரத்தில் பாஸ்கர விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சயனப்பெருமாள், நால்வர், 63 மூவர், சப்தமாதர்கள், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் நடராஜர் சபையிலுள்ள நடராசமூர்த்தம் அற்புதமான வேலைப்பாடுடையது. கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த மூர்த்தம் பெரியதாகவும், அழகாகவும் உள்ளது. அருகே பதஞ்சலி முனிவரும், வீயாக்ரபாத முனிவரும் காட்சியளிக்கன்றனர். உலோகத்தாலான உற்சவ நடராஜரும், சிவகாமியும் இச்சபையிலுள்ளனர்.

மதுரை - மானாமதுரை சாலை வழித்தடத்தில் மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் திருப்பூவணம் உள்ளது. மதுரையில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திருப்பூவணம் செல்லலாம். திருப்பூவணம் ரயில் நிலையம் மதுரை - மானாமதுரை ரயில் பாதையில் இருக்கிறது.

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

ரயில் நிலையம்   : மதுரை

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×