இராஜ அண்ணாமலைபுரம் - சென்னை - தமிழ்நாடு





	


	



























	




 




	








 




5:24:27 PM         Saturday, May 16, 2026

இராஜ அண்ணாமலைபுரம் - சென்னை - தமிழ்நாடு

இராஜ அண்ணாமலைபுரம் - சென்னை - தமிழ்நாடு
இராஜ அண்ணாமலைபுரம் - சென்னை - தமிழ்நாடு இராஜ அண்ணாமலைபுரம் - சென்னை - தமிழ்நாடு இராஜ அண்ணாமலைபுரம் - சென்னை - தமிழ்நாடு இராஜ அண்ணாமலைபுரம் - சென்னை - தமிழ்நாடு இராஜ அண்ணாமலைபுரம் - சென்னை - தமிழ்நாடு இராஜ அண்ணாமலைபுரம் - சென்னை - தமிழ்நாடு இராஜ அண்ணாமலைபுரம் - சென்னை - தமிழ்நாடு இராஜ அண்ணாமலைபுரம் - சென்னை - தமிழ்நாடு
Product Code: இராஜ அண்ணாமலைபுரம் - சென்னை - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில், சென்னை

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் கடற்கரை வழியாக அடையாறு செல்லும் பாதையில் இத்தலம் உள்ளது.

தல சிறப்புகள் : இங்கு சபரிமலை போன்று கன்னி மூல கணபதி, மாளிகை புறத்து அம்மன், நாகராஜா சுவாமி சன்னதிகள் மற்றும் 18 படிகள் உள்ளன. கார்த்திகை வழிபாடு, மகர ஜோதி திருநாளில் உத்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்து 18 படிகளில் தீபம் ஏற்றி பூஜைகள் நடைபெறும். 40 அடி உயர கோடி மரமும்,1500 பேர் அமர்ந்து தரிசிக்கும் மிக பெரிய தியான மண்டபம் கொண்ட ஆலயம்.

சபரிமலை மலையை ஒத்த ஒரு மலையின் உச்சியில் இருப்பதற்கான உணர்வைக் கொடுப்பதற்காக இந்த கோயில் மூன்று தளங்களில் கட்டப்பட்டது.  இந்த கட்டிடக்கலை கேரள பாணியையும் பாரம்பரியத்தையும் பிரதான சன்னதி மற்றும் கருவறைக்கு 18 படிகளுடன் உள்ளது. இந்த கோயில் வாடா சபரி அல்லது வடக்கு சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. கன்னிமூல மகா கணபதி , மாலிகாயபுரத்து அம்மன் , நாகராஜா மற்றும் பிற  துணை ஆலயங்களுடன் உள்ளது. கோயிலுக்கு கீழே 125 அடி முதல் 100 அடி வரை உள்ள ஒரு தியான மண்டபம், மண்டலா பூஜை மற்றும் முக்கிய திருவிழாவின் போது யாத்ரீகர்கள் தங்க வைக்கப்படுகிறது. 

திருவிழா மற்றும் பிற முக்கியமான நாட்களில் இசை நிகழ்ச்சிகள், மத சொற்பொழிவுகள் மற்றும் பிற நிகழ்வுகள் மண்டபத்தில் நடைபெறும். ஸ்வாமிக்கு தினப்படி பூஜைகளும் இதர வழிபாடுகளும், சபரிமலை தேவசனத்தில் நடைபெறுவது போலவே நடைபெறுகின்றன. அனால் சபரி மலை கோயில், வருடத்தின் சில நாட்களில் மட்டுமே திறந்து இருக்கும். இந்த ஆலயமோ வருடத்தின் 365 நாட்களும் நடை திறந்து இருக்கும். கார்த்திகை மாத துவங்கியதும் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து, வெளி மாநிலத்தில் இருந்தும்  வருகை தருகின்றனர்.

தல வரலாறு :  செட்டிநாடு அரச பரம்பரை சேர்ந்த மற்றும் தொழிலதிபரும்  எம்.ஏ.எம் ராமசாமி , மகன் ராஜா சர் முத்தையா செட்டியார்  சபரி மலை கோயில்  யாத்திரை சென்று அய்யனின் பக்தி ஈர்ப்பால் 1973 ஆம் ஆண்டு சபரிமலை போன்றே இக்கோவிலை கட்டினார். பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட அய்யப்பன் சிலை, நாகர்கோயிலைச் சேர்ந்த சிற்பி ஸ்ரீ பட்டானாச்சாரியரால் செய்யப்பட்டது.காடு  மலை கடந்து ஐயனைத் தரிசிக்க இயலாமல் போகும் தமிழக மக்களுக்காக தமிழகத்தின் தலை நகரில் தருமமிகு சென்னையில். ஐயப்பனுக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்று அவன் சந்நிதியிலேயே என்னை எண்ண வைத்தவன் ஐயப்பன் என்றால் அது மிகையில்லை. என் உள்ளத்தில் தோன்றிய இக்கருத்தை என்னைச் சபரிமலைக்குச் அழைத்துச் சென்ற குருசாமி திரு. சம்பத்குமார் அவர்களிடமும் என்னுடன் அங்கு வந்தவர்களிடமும் கூறிய போது, அவர்கள் என் எண்ணத்தைப் பாராட்டி ஆமோதித்தனர்.

இச்செயலை அறிந்த என் தந்தையார் செட்டி நாட்டு அரசர் முத்தையவேள் அவர்கள் கோயில் அமைப்பதற்கு வேண்டிய இடத்தை நன்கொடையாக தந்து உதவினார்கள். ஒரு நல்ல நாளில் கோயில் அமைக்கக் கால்கோள் விழாவும் நடைபெற்றது. கேரளச்சபரியில் உள்ள 18 படிகளைப் போலவே இங்கும் 18 படிகளுடன் திருக்கோயில் அமைக்கப் பெற்று ஐயப்பன் சந்நிதியுடன் கன்னிமூலை கணபதி நாகராசன் மஞ்சமாதா சின்னக்கடுத்தசாமி கருப்பாயி பெரிய கடுத்தசாமி ஆகிய தெய்வச் சந்நிதிகள் முறையுடன் அமைக்கப்பட்டன. சபரிமலைக் கோயிலைப் போலவே தோற்றமளிக்க வேண்டும் என்கிற நோக்கில் இதற்காகப் பல முறை சபரிக்கு சென்று ஆராய்ந்தும் அளவு எடுத்தும் இவ்வாலயம் சபரிக்கோயிலை மறுபதிப்பாக உருவாக்கப்பட்டது.

ஐயப்பன் மூல விக்கிரகத்தை நாகர்கோயிலில் உள்ள சிறந்த சிற்பியான திரு. பட்டன் ஆசாரி என்பவர் ஐம்பொன் உலோகத்தால் சிறப்பாகச் செய்து தந்தார். இத்திருஉருவம் தென்தமிழகத்தின் வழிபாட்டுத் தலங்கள் வழியாக வலம் வந்து அப்பகுதி மக்களால் ஆராதனையும், வழிபாடும் செய்யப்பட்டு சென்னைக்கு 9.02.1981 அன்று வந்து சேர்ந்தது. 29.01.1982 அன்று சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு மகாசந்நிதானம் ஸ்ரீ சந்நிதானம் ஆகியோரின் முன்னிலையில் முதல் குடமுழுக்கு வழா இனிது நடைபெற்றது. ஆண்டுதோறும் சபரிமலைக்குச் சென்று வரும் நான் ஊரிலில்லாத நாட்கள் தவிர மற்ற நாட்களில் வடசபரி ஐயனைத் தரிசிக்க தவறியதில்லை.

இத்திருக்கோயில் மண்டலபூஜை, மகரஜோதி தரிசனம், பிரம்மோத்சவம், விஷுகனி தரிசனம் ஆகியவை சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி தாங்கி 18 படியேறி நெய்யபிஷேகம் செய்து ஐயப்பனைத் தரிசித்து வருகிறார்கள். மற்ற பக்தர்களும், பெண்களும் ஐயப்பனைத் தரிசித்து அவனருள் பெற 18 படிகள் தவிர தனிப்படி வழி ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் அமைந்து பன்னிரண்டாண்டுகள் நிறைவு பெற்றதால் மீண்டும் திருப்பணி செய்யப்பட்டு 27.03.1994 ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் குடமுழுக்கு விழா நடைபெறுகின்றது. இவ்வாலயத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள வெள்ளிரதம் இந்த இரண்டாம் குடமுழுக்கு விழாவின் சிறப்பம்சமாகும்.

இங்கும் விரதம் இருந்து இருமுடி தாங்கிவரும் பக்தர்கள் இந்த படிகள் மூலம் வந்து அண்ணாமலைபுரம் ஐயப்பசாமியைத் தரிசிக்கலாம். கன்னிமூல மகாகணபதி, நாகராஜா மாளிகைபுரத்து அம்மன் ஆகிய பரிவார தேவதைகளுக்கும் இங்கே தனித்தனியாக கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. நம்முன்னோர்கள் தில்லையம்பலத்து இறைவன் கோயில் கோபுரத்திற்குப் பொன் வேய்ந்ததுபோல இந்த ஆலயத்துக் கோபுரங்களுக்குச் செம்பொன்னால் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் மூன்று தளங்களாக அமைக்கப்பட்டிருப்பதால் மூலஸ்தானம் மலைமேல் இருப்பது போன்றே தோன்றுகிறது. இந்த ஆலயத்தைப் பார்த்தால் சபரி ஆலயத்திற்கு வந்துவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றும் வகையில் சகல அம்சங்களும் நிறைந்து அமைந்துள்ளன. விரதம் இருந்து இருமுடி தாங்கி பதினெட்டுப் படி வழியாக வரும் பக்தர்கள் தவிர மற்ற பக்தர்கள் ஒருபுறம் ஏறிச்சென்று ஐயப்பசாமியை வழிபட்டு மறுபுறம் வரும் வகையில் இரு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 6.00 மணிக்கு திறக்கப்பட்டு 10.00 மணி வரையிலும், மாலையில் 5.00 மணியில் இருந்து இரவு 8.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்னை

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×