உஜ்ஜயினி





	


	



























	




 




	








 




5:05:54 AM         Sunday, May 17, 2026

உஜ்ஜயினி

உஜ்ஜயினி
உஜ்ஜயினி உஜ்ஜயினி உஜ்ஜயினி உஜ்ஜயினி உஜ்ஜயினி உஜ்ஜயினி உஜ்ஜயினி உஜ்ஜயினி உஜ்ஜயினி உஜ்ஜயினி உஜ்ஜயினி உஜ்ஜயினி
Product Code: உஜ்ஜயினி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                      உஜ்ஜைனி (ஷிப்ரா)

அமைவிடம் :  உஜ்ஜையினி, மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பழைய புனித நகரமாகும். 

உஜ்ஜைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் விழா நடைபெறுகின்றது. சிவனுடைய 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம் இங்கேயே உள்ளது. முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் உஜ்ஜைனும் ஒன்றாக உள்ளது.

இந்த மகா கும்பமேளா ஜனவரி 14ம் தேதி மகரசங்கராந்தி தினத்தன்று தொடங்கி மகா சிவராத்திரி நாள்வரை 55 நாட்கள் நடைபெறுகிறது. பூர்ண கும்ப மேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், ஆர்த கும்ப மேளா 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கும்பமேளா ஹரித்துவாரில் முதலில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பிரயாக், நாசிக், உஜ்ஜயினி நகரில் நடைபெறுகிறது. கும்பமேளா திருவிழா ஹரித்துவார், பிராயாக், நாசிக், உஜ்ஜயினி, ஆகிய மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 

உஜ்ஜைனில் கும்ப பர்வா 'உஜ்ஜைன்' அவந்திகா என்றும் அழைக்கப்படுகிறது, அவந்திகாபுரி என்பது மத்திய பிரதேசத்தில் கிஷிப்ரா ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஒரு பழங்கால நகரம்.  இது மத்திய பிரதேசத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. உஜ்ஜைன் இந்தியாவின் புனிதமான நகரங்களில் ஒன்றாகும். முற்காலத்தில் இது உஜ்ஜயினி என்று அழைக்கப்பட்டது. மகாபாரதத்தின்படி உஜ்ஜயினி அவந்தி அரசின் தலைநகரமாகும். 

உஜ்ஜைன் கும்பமேளா ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் ஒரு இடைவெளியில் புனித ஷிப்ரா நதிக்கரையில் நடைபெறுகிறது. மிகவும் புனிதமான இந்த காலகட்டத்தில், பக்தர்கள் ஷிப்ரா நதிக்கரையில், ராம் காட், நரசிங்க காட் மற்றும் பல்வேறு தொடர்ச்சி மலைகளில் குளிக்கின்றார்கள். பக்தர்கள் இங்கு கொண்டாடும் கும்பமேளாவில் ஏராளமான சடங்குகள் மற்றும் பாரம்பரிய மத நடைமுறைகள் உள்ளன. ராம் காட், மற்றும் நர்ஷிங்கா காட் ஆகியவை மிகவும் பழமையானவை. 

ஷிப்ரா ஆற்றின் கரையில்  கும்பமேளா, 18 ஆம் நூற்றாண்டில் நாசிக்-திரிம்பகேஸ்வர் சிம்ஹஸ்தாவின் தழுவலாகத் தொடங்கப்பட்டது. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டு வரை, இந்த திருவிழாவின் பெயர் இங்கே “கும்பமேளா” அல்ல, அதற்குப் பின்னர் பெயர் வந்தது. வேறு சில வரலாற்று ஆதாரங்களின்படி, மராட்டிய மன்னர் ரனோஜி ஷிண்டேவின் காலத்திலிருந்தே திருவிழா இங்கு தொடங்கியது. நாசிக் நகரில் ஒரு உள்ளூர் திருவிழாவிற்கு பல்வேறு அகரா புனிதர்களை அழைத்தார். அப்போதிருந்து, இந்த திருவிழா இங்கே தொடங்கியது. பிரிட்டிஷ் சகாப்தத்தில், உஜ்ஜைன் மட்டுமே ஒரு சுதேச மாநிலத்தில் கும்பமேளா இடமாக இருந்தது. 

மகா காளேஷ்வர் பெரிய அளவு லிங்க ரூபமாக காட்சியளிக்கிறார். தென்னிந்தியா போல் அல்லாமல் மூலவர் கருவறைக்குள் சென்று, மூலவரை தொட்டு நாமே நம் கைகளால் அபிஷேகம் செய்யலாம். வட மாநிலத்தவர் பாலாபிஷேகம் செய்வதோடு நில்லாமல் லிங்க சொரூபத்தை அப்படியே கட்டி தழுவி ஆராதிக்கின்றனர். ஸ்ரீ மஹா காளேஷ்வரர் தினமும் மூன்று வேளையும் பூஜை நடந்து வருகிறது. அரசித்தி தேவியாக மகாகாளி தோன்றிய இடத்தில், சிப்ரா நதிக்கரையில், ஒரு கோயில் கட்டி மக்கள் வழிபட்டு வருகின்றனர். முழங்கை பகுதி விழுந்த இடமே ஹர்சித்தி ஆலயமாயிற்று. 

ஹர்சித்தி கோவில், கோவில் நகரமான உஜ்ஜைன்னில் முக்கிய பங்கு வகிப்பதால், இது ஒரு விசேஷ கோவிலாக பார்க்கப்படுகிறது. இந்த கோவில் அன்னபூர்ணி தேவிக்காக கட்டப்பட்டதாகும். கருமையான செந்நிறத்தில் அன்னபூர்ணி தேவியின் ஓவியம் இங்கு தீட்டப்பட்டுள்ளது. மேலும் அன்னபூர்ணி தேவியின் சிலை மஹாலக்ஷ்மி மற்றும் சரஸ்வதி தேவியின் சிலைகளுக்கு நடுவில் நிறுவப்பட்டுள்ளது. சக்தியின் அடையாள சின்னமாக விளங்கும் ஸ்ரீ யந்த்ராவையும் இங்கு காணலாம். சிவபெருமான் சதி தேவியை உடம்பை தூக்கிச் செல்லும் போது, தேவியின் முழங்கை இங்கே விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மராத்தர்கள் ஆட்சி காலத்தில் இந்த கோவில் புதுபிக்கப்பட்டதால், மராத்தா கலையை இங்குள்ள விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு தூண்களில் காணலாம். இந்த கோவில் வளாகத்தில் பழமை வாய்ந்த கிணறு ஒன்று உள்ளது. மேலும் இங்குள்ள ஒரு அழகிய தூணை கோவிலின் உச்சியில் காணலாம். இங்குள்ள கடவுளும் சக்தி வாய்ந்தவர் என்று உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது. 

 

தல வரலாறு : முன்னொரு களத்தில் சிவபெருமானின் மனைவியான பார்வதி தட்ஷா யாகத்தின்போது தற்கொலை செய்து கொள்ள அவளை தூக்கிக் கொண்டு அனைத்து இடங்களிலும் சென்ற சிவபெருமானின் தோளில் இருந்தவளை விஷ்ணு துண்டு துண்டமாக வெட்டித் தள்ளி சிவனின் கோபத்தை அழித்தாராம். அப்போது அவள் உடல் விழுந்த இடங்களில் எல்லாம் ஒரு சக்தி ஆலயம் எழுந்ததாம். அதில் அவளுடைய முட்டி எலும்பு விழுந்த இடமே உஜ்ஜயினியில் ஹர்சித்தி மாதா ஆலயம் ஆயிற்றாம். இரண்டு ஆலயங்களுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம்.

சாந்த் மற்றும் பிரசாந்த் என்ற இரு அசுரர்கள் தேவலோகத்தில் அட்டகாசம் செய்து கொண்டு அனைவரையும் துன்புறுத்தியபடி இருந்தனர். சிவனும் பார்வதியும் தாயக்கட்டை ஆடிக்கொண்டு இருந்த இடத்துக்குப் போய் அவர்களையும் தொந்தரவு செய்ய அவனுக்கு தானே கொடுத்த வரத்தினால் அவளை அடக்க முடியாமல் போன சிவன் பார்வதியிடம் அவனை அழிக்குமாறு வேண்டிக்கொள்ள அவள் விஷ்ணுவும் காளியும் சேர்ந்த உருவை எடுத்து அவர்களை அழிக்க, அவள் அனைத்து தீமைகளை அழிக்கும் சக்தி வாய்ந்த தேவி ஹர்சித்தி என்ற பெயர் பெற்று உஜ்ஜயினியில் ஹர்சித்தி மாதாவாக அமர்ந்தாளாம்.

ஒரு சமயம் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் கைலாயத்தில் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, மும்மூர்த்திகளாலேயே தங்களை வெல்ல முடியாது என்ற வரம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்ற இரு அசுரர்கள் தேவர்களை துன்புறுத்தியதோடு அல்லாமல், மமதையினாலும் ஆணவம் தலைகேறிப் போனதினாலும், கைலாயத்தில் புகுந்து சிவபெருமானுக்கே இடையூறு செய்யத் தலைபட்டனர். சிவனையே போருக்கு அழைத்தனர். சிவபெருமான், பார்வதிதேவியாரை அவ்வசுரர்களை வதம் செய்யும் வல்லமை தேவியாருக்கே உள்ளது

எனக்கூறி அவர்களை வதம் செய்யக் கேட்டுக் கொண்டார்.தாங்கொணா சினம் கொண்ட தேவியாரும், தன்னுடன் நவசக்திகளையும் இணத்துக் கொண்டு மகாகாளியாக உருக்கொண்டு அவர்களை வதம் செய்ய தலைப்படும்பொழுது அன்னையின் மகா காளியின் உருவத்தைக் கண்டு அவர்கள் பயந்து காட்டிற்குள் சென்று ஓடி ஒளிந்தனர். காளிதேவியும் அவ்வசுரர்களை காட்டிற்குள் விரட்டிச் சென்று போரிட்டாள். அரக்கரிருவரும் எருமைக்கடா உருவம் எடுத்து தேவியைப் பலமாகத் தாக்கினர். நவசக்தியுடன் தேவி சிங்கவாகனம் ஏறிவந்து, அவ்வரக்கர்களை வதம் செய்தார்.

ஹர என்றால் சிவன், சித் என்றால் சித்தம் என்பதாகும். அரன் என்னும் சிவபெருமான் சித்தத்தைப் பூர்த்தி செய்தமையால், மகாகாளிக்கு அரசித்தி தேவி எனப்பெயர் வழங்கலாயிற்று என்றும் அசுரர்களை அழித்ததினால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் ’ அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெற்றுத் தருபவள் எனும் விதமாக ஹர்சித்தி தேவி  அழைக்கப்படுவாள் எனப் வழங்கலாயிற்று. 

அருகிலுள்ள விமான நிலையம் :  இண்டோர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் : உஜ்ஜைனி  

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×