திரிம்பகேஷ்வர், மகாராஷ்டிரா
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகரிலிருந்து 28 கி.மீ தொலைவில் திரிம்பாக் என்னும் நகரில் திரிம்பகேஷ்வர் ஆலயம் அமைந்திருக்கிறது.
இறைவன் : திரிம்பகேஷ்வர்
இறைவி : ஜடேசுவரி
தீர்த்தம் : குசாவர்த்த தீர்த்தம் , கோடி தீர்த்தம்
ஜோதிர்லிங்கம் என்பது இந்து மதத்தில் சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. 12 ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள், திருவாதிரை நாள் ஜோதிர்லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 2 கோயில்கள் அமைந்துள்ளன. எஞ்சியுள்ள 6 ஜோதிர்லிங்க கோயில்கள் தமிழ்நாடு, ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஆந்திர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அமைந்துள்ளன.
தலச் சிறப்புகள் : திரிம்பகேஷ்வர் ஆலயத்தில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டு அழகிய சிற்பங்களுடன் இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறுதொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. திரியம்பகேஸ்வரர் எழுந்தருளியுள்ள கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளது. மேலேயுள்ள மண்டபத்திலிருந்து திரியம்பகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். மும்மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கப்பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே உள்ளது. ஆவுடையார் உரல் போன்று நடுவே பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளம் உள்ளது.
தல வரலாறு: மும்மூர்த்திகள் வழிபட்டு பரப்பிரும்மத்தின் அருள்பெற்ற திரியம்பகேஸ்வரத்தில் கவுதம முனிவர் வசித்து வந்தார். நாள்தோறும் புனிதக்குளத்தில் நீராடி திரியம்பகேஸ்வரரைப் பூஜை செய்து வேள்விகள் புரிந்தும் தவம் செய்தும் தூய வாழ்க்கை வாழ்ந்தார். ஒருமுறை நாட்டில் வறட்சியும், பஞ்சமும் உண்டாயின. எல்லா இடங்களிலும் நீர் வற்றிப்போய் தண்ணீர் பஞ்சம் உண்டாயிற்று. ஆனால் கங்காதரனை நினைந்து உள்ளன்போடு சிவசிவ என்றே வாழ்ந்த கவுதமரின் ஆசிரமத்தில் எந்தவிதமான பஞ்சமும் இல்லை. திரியம்பகேஸ்வரத்தில் இருந்த நீர்நிலைகளில் நீர்வளம் பெருகியிருந்தது. இதையறிந்து நாட்டின் பல பகுதிகளிலும் இருந்த முனிவர்கள் திரியம்பகேஸ்வரத்தில் குடியேறினர். உலகத்தை வலம் வருபவனுக்குத் தனது மகளை மணம் முடித்துக் கொடுப்பதாக அகல்யையின் தந்தை நிபந்தனை விதித்திருந்தார். கன்றுபோடும் நிலையில் உள்ள பசுவை அதாவது இரண்டு முகங்கள் கொண்ட பசுவை வலம் வந்தால் உலகத்தை வலம் வருவதற்கு ஒப்பாகும் என்று ஒழுக்க நூல்கள் உரைக்கின்றன.
இந்த சாத்திரப்படி கவுதம முனிவர் கன்று போடும் நிலையில் இருந்த தாய்ப்பசுவை வலம் வந்து வணங்கி அகல்யையைத் திருமணம் செய்து கொண்டார். அத்தகைய கவுதம முனிவரின் ஆசிரமத்தில் தாய்ப்பசு ஒன்று இறந்து கிடந்தது. அதைக் கண்ட கவுதம முனிவர் மனம் துடிதுடித்தார். இறந்த பசுவிற்கு எப்படியாவது உயிர் கொடுக்க வேண்டும் என்று முனிவர்கள் விரும்பினர். மற்ற உயிரினங்கள் எல்லாம் தமக்காக வாழ்கின்றன. ஆனால் மாடுகளோ உலக மக்கள் அனைவரையும் பாலூட்டி வளர்க்கின்றன. தேசத்தின் செல்வங்களாக இருந்து வருவாயைப் பெருக்குகின்றன.
புண்ணிய ஆத்மாவான இந்தப் பசுவை எப்படியாவது உயிர்பிழைக்கச் செய்ய வேண்டும் என்று முனிவர்கள் முடிவெடுத்தனர். கோடிலிங்கார்ச்சனை செய்து பரம்பொருளை வழிபட்டுக் கங்கை நதியைப் பசுவின் உடலில் பாயச் செய்தால் கோமாதா மீண்டும் உயிர் பெற்று எழுவார் என்று மாதவ முனிவர் ஆலோசனை கூறினார். அவர் வண்ண மகாமுனிவரான கவுதமர் கோடி சிவநாமம் ஓம் லிங்கார்ச்சனை செய்தார். கோடி சிவராமங்களை உச்சரித்து லிங்கப் பரம்பொருளைப் பூஜை செய்தார். கங்காதரனிடமிருந்து கங்கை நீரைப் பெறுவதற்காகக் கடுமையாகத் தவம் புரிந்தார்.
கங்காதரனை நெஞ்சில் நிறுத்தி ஓம் நமச்சிவாயா மகா மந்திரத்தை உச்சரித்து திரியம்பகேஸ்வரரை தியானம் செய்து அன்ன ஆகாரம் இல்லாமல் தவம் புரிந்தார். நினைத்த காரியத்தை நினைத்தபடி முடித்து வைக்கின்ற தவத்தின் மகிமை உணர்ந்த தவ முனிவர்கள் எல்லோரும் கவுதம முனிவருக்கு உறுதுணையாக இருந்தனர். கடுகளவு புண்ணியம் செய்தாலும் மலையளவில் பலனை வாரி வழங்கும் அருள் வள்ளலாரை திரியம்பகேஸ்வரர் கவுதம முனிவருக்கு வெளிப்பட்டுத் திருக்காட்சி தந்தார். பலகாலங்கள் தேடித் திரிந்தாலும் பிரம்ம விஷ்ணுக்களால் காண முடியாமல் மறைந்து இருந்த பரஞ்சோதிப் பெருமானின் திருக்காட்சி கண்ட கவுதம முனிவர் அளவில்லா ஆனந்தம் அடைந்து விழுந்து எழுந்து போற்றித் துதி செய்து வணங்கினார்.
ராமாயண காவியத்தில் வரும் அனுமனின் பிறந்த இடமான அஞ்சனேறி மலை, இவ்வாலத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, குரு, சிம்ம ராசியில் வரும் போது, கும்பமேளா பெருவிழா இங்கே கொண்டாடப்படுகின்றது. இந்த நகரத்தில் வாழ்ந்த வேதப்ரியன் இரவும், பகலும் சிவபூஜையில் ஈடுபட்டிருந்தான். அவனுக்கு நான்கு புதல்வர்கள். தேவப்ரியன் மேதன், சுவிரதன், தருமவாதி என்ற பெயர்கள் கொண்ட அந்த நால்வரும் தந்தைக்கு அனுசரணையாக இருந்ததோடு அவர்களும் தீவிர சிவபக்தர்களாகத் திகழ்ந்தனர். அவந்திபுரி அருகில் ரத்தனமாலா என்ற பருவதம் உண்டு. அங்கு துஷணன் எனும் அரக்க அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான். அவன் பிரம்மனைக் நோக்கி கடும்தவம் செய்து அளவிலாப் பராக்கிரமத்தை அடைந்திருந்தான்.
இதனால் மிக்க கர்வம் அடைந்த அந்த அரக்கன், அப்பகுதியிலிருந்த அனைவரையும் இம்சை செய்தும், அடித்தும், துன்புறுத்தியும் வந்தான். கடவுளை வணங்குவோரை மிரட்டினான். பூஜைகளில் ஈடுபடுபவர்களை உடனே அவற்றை கைவிடுமாறு வற்புறுத்தினான்.அந்த அரக்கனை அடியோடு ஒழிக்க சகோதரர்கள் நால்வரும் முன்வரவேண்டும் என்று மக்கள் கண்ணீர் மல்க கூறி வேண்டினர். பிறகு மக்கள் அந்த நால்வருடன் சேர்ந்து அனுதினமும், தவறாமல், தீவிரமாக சிவபூஜையில் ஈடுபட்டு வந்தனர். இவர்களது செயல்களை அறிந்த தூஷணன், அவர்களைத் தாக்க தன் மந்திரிகளோடு அங்கு வந்து சேர்ந்தான். அவர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று தன்னுடன் வந்தவர்களுக்கு கட்டளை இட்டான் அப்போது ஒரு அதிசயம் நடந்தது. பார்த்திவ சிவலிங்கங்கள் செய்ய மண் எடுத்த இடம் பெரியகுளமாக இருந்தது. அக்குளத்தில் இருந்து கிளம்பிய கிடுகிடுக்கும் முழக்கம் ஈரேழு உலகங்களை அதிரச் செய்தது. பெரும் சப்தத்துடன் குளத்தின் மையத்தில் குபீரென்று ஒரு ஜோதி எழும்பி, பிழம்பாக மாறி படிப்படியாக பெரும் சிவலிங்கமாகத் தோன்றியது! இறுதியில் படாரென்ற விண்அதிரும் சப்தத்துடன் அச்சிவலிங்கம் இரு பிரிவாகப் பிளந்தது.
அந்த லிங்கத்தில் இருந்து ஜடாமகுட தாரியாக, புலித்தோல் போர்த்திய சூலாயுதபாணியாக பரமேஸ்வரன் கோபத்தோடு வெளிப்பட்டார். அரக்கன் தூஷணனையும், அவனோடு வந்த அனைவரையும் அவர் சம்காரம் செய்தார். இதனால் கண் இமைக்கும் நேரத்தில் அனைவரும் எரிந்து சாம்பலானார்கள். இந்த அபூர்வக் காட்சியை வானத்தில் இருந்து கண்டு களித்த தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அவந்தி மக்கள் பகவானை நோக்கி எங்களது இன்னல்களைத் தீர்த்த இறைவனே இங்கு வரும் பக்தர்களின் குறைகளையும் தீர்க்க தாங்கள் என்றென்றும் இங்கேயே இருக்க வேண்டும் என்று கூறி வீழ்ந்து வணங்கினர்.
அவர்களது ஆசையைப் பூர்த்தி செய்ய ஈசனும் மீண்டும் லிங்கத்தினுள் ஐக்கியமாகி மகாகாலர் என்ற நாமம் ஏற்று அவந்திபுரி எனும் உஜ்ஜைனி நகரத்தின் நடுவில் இன்றும் ஜோதிர்லிங்கமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அவந்தி நாட்டின் தலைநகரான உஜ்ஜைனியில் அரசு புரிந்த ராஜா விக்ரமாதித்யன் காலத்திலும், தார் நகரிலிருந்த போஜராஜன் புத்திரன் உதயாதித்யன் காலத்திலும் மகாகாலேஸ்வரர் ஆலயம் மிக உன்னத நிலையில் இருந்தது. பொன்னும் மணியும், ஆலய சுவர்களைப் பலவாறு அலங்கரித்தன. ஆலயத்தின் சொத்து பல கோடிகளாக இருந்தது. ஆலயமணியும், அதனைச் சார்ந்த சங்லியும், கோபுர கலசங்களும் பொன்னால் செய்யப்பட்டு ஜொலித்தன. அங்கிருந்த ஆள் உயர விக்ரமாதித்யன் சிலையும் தங்கத்தால் வடிக்கப்பட்டு, நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
ஜோதிர்லிங்கமான மகாகாலேஸ்வரரைப் பெயர்த்து ஆலயத்தினுள் இருந்த கோடி தீர்த்தம் என்ற புஷ்கரணியில் வீசி எறிந்து விட்டனர். அடிக்கடி அன்னிய மதத்தினரின் படையெடுப்புகளால் உஜ்ஜைனி நகர் பெருமளவில் பாழடைந்து விட்டது. மகாகாலேஸ்வரர் ஆலயம்: மிக்க கீர்த்தி பெற்ற மராட்டா சேனைத் தலைவன் ரானோனி சிந்தியா தன் புஜ பலத்தால் மாளவ நாட்டைக் கைப்பற்றி உஜ்ஜைனியைத் தலைநகராக்கி தானே ஆளத் தொடங்கினான்.
அவனது அவையில் திவானாக இருந்த ராமசந்திரராவ் ஷேண்பாய் என்பவர், ரானோனி சிந்தியா கட்டளைப்படி ஆலயம் இருந்த இடத்தைத் தேடிக் கண்டு பிடித்து புது ஆலயம் நிர்மாணித்தார். நகரின் பண்டித குடும்பங்களில் பரம்பரையாக பேசப்பட்டு வந்த வாய்ச் சொல்லை ஆதாரமாகக் கொண்டு குப்பைகளை அகற்றி, நன்கு சுத்தப்படுத்திய போது கோவில் புஷ்கரணியில் புதைந்திருந்த ஜோதிர்லிங்கம் கண்டு பிடிக்கப்பட்டது. அதை வெளியில் எடுத்து மீண்டும் கோலாகத்துடன் பழைய இடத்திலேயே பிரதிஷ்டை செய்தனர். அதன் பயனாக ஒரு புது ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது. ருத்ரசாகர் எனும் ஏரியை ஒட்டி கம்பீரமாக விளங்கும் மகாகாலேஸ்வரர் ஆலயத்தின் பிரதான வாயில் கிழக்கில் உள்ளது. ஐந்து தளங்களுக்கும், ஐந்து சபா மண்டபங்களும், கோபுரத்தில் பல கலசங்களைக் கொண்ட இவ்வாலயத்தின் உயரம் 88 அடிகளாகும். கோவிலைச் சுற்றி வலம் வர அகண்ட பிரகாரம் உள்ளது. மகாகாலேஸ்வரரைக் காண நம் மேற்கு வாயில் வழியாக நுழைந்தால், தெற்கு நோக்கியுள்ளள சன்னதியில் இரண்டு அடி உயரமுள்ள ஜோதிர்லிங்கமாக தரிசனம் தருகிறார்.
விசேஷ தினங்களில் பலப்பல அலங்காரங்களோடு கண் குளிரக் காட்சி அளிக்கிறார். இக் கருவறையில் 24 மணி நேரமும் இரண்டு நெய்விளக்குகள் எரிகின்றன. வட இந்திய பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்ச சதுர்தசி காலையில் ஜோதிர்லிங்கத்திற்கு பாங் எனும் அபினை அரைத்து காப்பாக அமைத்திருப்பார்கள்.இக்காப்பு காலை 10 மணி வரை சார்த்தப்பட்டிருக்கும். இதன் பின் லிங்கத்திற்கு வெந்நீரினால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு நாள் தான் இவ்வித விசேஷ காப்பும் அபிஷேகமும் நடைபெறுகின்றன. அன்றுதான் நமக்கு நரக சதுர்த்தி எனும் தீபாவளிப் பண்டிகை.
அருகிலுள்ள விமான நிலையம் : நாசிக்
அருகிலுள்ள ரயில் நிலையம் : இக்கட்புரி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு