முறப்பநாடு





	


	



























	




 




	








 




9:38:51 PM         Saturday, May 16, 2026

முறப்பநாடு

முறப்பநாடு
முறப்பநாடு முறப்பநாடு முறப்பநாடு முறப்பநாடு முறப்பநாடு முறப்பநாடு முறப்பநாடு
Product Code: முறப்பநாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                              கைலாசநாதர் திருக்கோவில், முறப்ப நாடு

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரான திருநெல்வேலியிலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது. 

மூலவர் : ஸ்ரீகைலாச நாதர்

அம்பாள் : ஸ்ரீசிவகாமி

நட்சத்திரம் : புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

தீர்த்தம் : தாமிரபரணி 

தலவிருட்சம் :  பலா

சிறப்புகள் : நவகைலாயத்தில் ஐந்தாவது இடத்தை பெறுவது முறப்பநாடு ஆகும். இந்த கோயில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது. நவகாலயத்தின் எந்த கோயிலுக்கும் இல்லாத தனிச் சிறப்பு சிவா பெருமான் குருபாகவனாக அருள் பாலிக்கும் முரப்பாணத்திட்கு மட்டுமே உண்டூ. 

வியாழ பகவானின் அருள் பெற இத்தலத்து கைலாசநாதரை வணங்க வேண்டும். இத்தலத்து இறைவனை வழிபட்டால் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருஆலக்குடி சென்று குருவினை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பர். காசியில் கங்கை நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. அதேபோல முறப்பநாட்டிலும் தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இதை“தெட்சிணகங்கை” என்கிறார்கள். இங்கு குளித்தால் கங்கையில் குளித்ததற்கு ஈடானது. இப்பகுதி காசிக்கட்டம் , சபரித் தீர்த்தம் எனப்படுகிறது. ஆடி மற்றும் தை மாத அமாவாசை நாட்கள், மாதாந்திர கடைசி வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் இங்கு நீராடி , கைலாசநாதரை வழிபடுவது மிகுந்த பலனுடையது.

கோவிலுக்குள் தென்கிழக்கில் சூரியனும், வடக்கு நோக்கி அதிகாரநந்தியும் உள்ளனர். கருவறை சுவர் அருகே பஞ்சலிங்கங்களும், கோவிலின் தென்மேற்கு மூலையில் கன்னி விநாயகரும், வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் உள்ளனர். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருமாலின் பத்து அவதார உருவங்களையும் நாம் கண்டு வணங்களாம். கோவிலின் வெளிச்சுற்றில் சுரத்தேவர் அஷ்டலட்சுமிகள், 63 நாயன்மார்கள் உள்ளனர். வடக்குப் பிரகாரத்தில், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், காலபைரவர் ஆகியோரை வணங்கலாம்.

சனீஸ்வரர் மற்றும் தட்சிணாமூர்த்தியை ஒன்பது முறை சுற்றி வந்து வழிபாடு செய்தால், நவக்கிரகங்களை வழிபட்ட பலன் உண்டு. உரோமச முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத்தைச் சுற்றி வல்லாள மகாராசா இக்கோவிலின் ஒரு பகுதியை கட்டியுள்ளார். சோழ மகாராசா ஒருவர் தனது மகளின் குதிரை முகம் இங்கு வந்து வழிபட்டதால் மனிதமுகமாக மாறியதால், இக்கோவிலின் மறுபகுதியைக் கட்டியுள்ளார். இங்கு ஸ்ரீராமர் வந்து வழிபட்டுள்ளார். காஞ்சனமாலை மோட்சம் பெற்ற இடம் இதுவாகும். பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன. அனுமன் , கண்ணப்பர் , யானை , கோமாதா, மயில் ஆகியோர் சிவலிங்க பூஜை செய்யும் அற்புதமான சிற்பக் காட்சியை நாம் கண்டு மகிழலாம். இவ்வூருக்கு அருகில் முரம்பேஸ்வரர் கோவில் ஒன்று உள்ளது. பருக்கை கற்கள் நிரம்பிய முரம்பு நிலமாக உள்ளதால் இவ்வூர் முறப்பநாடு எனப் பெயர் பெற்றது.

அகத்தியரின் சீடரான உரோமச மகரிஷிக்கு சுவாமி இத்தலத்தில் குருவாக காட்சி கொடுத்தார். இக்கோயிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. மன்னன் மகளின் குதிரை முகம் மாறியபோது, அவளுக்கான முற்பிறவி பாவத்தை இந்த நந்தி ஏற்றுக்கொண்டதாம். எனவே இந்த நந்தி குதிரை முகத்துடன் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். ஒரு பைரவர் வழக்கம்போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை. நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை காலபைரவர் என்றும், வாகனம் இல்லாதவரை வீரபைரவர் என்றும் கூறுகின்றனர்.

இக்கோயில் தாமிரபரணியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. ஒன்பது கைலாய தலங்களில் இத்தலம் நடுவில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, “நடுக்கைலாயம்” என்கின்றனர். இங்கு கைலாசநாதர் குரு அம்சமாக இருப்பதால் இவருக்கு மஞ்சள் ஆடை சாத்தி, கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வழிபடும் வழக்கம். சிவகாமி அம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள்.விநாயகருக்கு சன்னதி இருக்கிறது. இவரது சன்னதிக்கு முன்புறத்தில் துவாரபாலகர்கள் போல இரண்டு விநாயகர்கள் இருக்கிறார்கள். விநாயகரை இத்தகைய அமைப்பில் காண்பது அபூர்வம்.

சூரபத்மனும் மற்ற அரக்கர்களும் செய்த கொடுமையைத் தாங்க முடியாத முனிவர்கள் இறைவனிடம் முறையிட்ட இடம் என்பதால் முறப்பநாடு என்ற பெயர் வந்ததாம். பிரகாரத்தில் சூரியன், அதிகார நந்தி, ஜுரதேவர், சப்தகன்னி, நாயன்மார், பஞ்சலிங்கம்,கன்னிவிநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சனீஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சோழ மன்னன் ஒருவனுக்கு குதிரை முகத்துடன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனால் மனம் வருந்திய மன்னன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிய அவரும் அந்த மன்னன் முன் தோன்றி இந்த ஊர்த் தீர்த்தக்கட்டத்தில் நீராடும்படி பணிக்க மன்னனும் தன் மகளோடு இங்கு வந்து நீராட, மகளின் முகம் மனித முகமானதாம். இதனால் மனமகிழ்ந்த சோழ மன்னன் இந்தக் கோயிலைக் கட்டினார்.

விஜயநகரப் பேரரசின் தமிழ்நாட்டுப் பிரதிநிதி விட்டலராயன் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. கோயில் பிரகாரத்தில் மாறவர்மன், சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. திருவைகுண்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் உள்ள கலியாணகுறடு என்ற மண்டபத்தில் நவகைலாயங்கள் பற்றிய செய்திகளும், ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி கோயிலிலும் நவகைலாயம் குறித்த கல்வெட்டுகள் உள்ளது. விஜயநகர பேரரசின் தளபதி விட்டலராயன் இத்திருகோயிலுக்கு வந்து வழிபட்டதை விட்டிலாபுரம் கல்வெட்டு கூறுகிறது. 

தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகில் உள்ள விமான நிலையம் : மதுரை

அருகில் உள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×