மேலாங்கோடு





	


	



























	




 




	








 




8:55:24 AM         Friday, May 01, 2026

மேலாங்கோடு

மேலாங்கோடு
மேலாங்கோடு மேலாங்கோடு மேலாங்கோடு மேலாங்கோடு மேலாங்கோடு மேலாங்கோடு மேலாங்கோடு மேலாங்கோடு மேலாங்கோடு மேலாங்கோடு
Product Code: மேலாங்கோடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                            மேலாங்கோடு காலகாலர் கோவில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் புலியூர் குறிச்சியிலிருந்து வடக்கே 3 கி.மீ தொவைல் குமாரகோவில் செல்லும் பாதையில் வயல்களின் நடுவில் இத்தலம் உள்ளது புலியூர் குறிச்சிக் கோட்டைக்கு பின்னால் உள்ளது.

சிவாலய ஓட்டம் : மகா சிவராத்திரி தினத்தன்று கன்யாகுமரி மாவட்டத்தில், பன்னிரண்டு சிவாலயங்களை தரிசித்து வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ என்ற நிகழ்ச்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்துவதே இந்த சிவாலய ஓட்டம் என்று சொல்லப்படுகிறது. 

தல வரலாறு : இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படியோர் உருவம் ஏற்றார் என்றும் சொல்வார்கள். புருஷாமிருகத்துக்கு விஷ்ணுவைப் பிடிக்காது. தனது எல்லைக்குள் யாராவது திருமால் நாமத்தைக் கூறினால் அவரைத் தாக்கிவிடும்.

தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது என்று நம்பியவன் பீமன். பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் சிவனும் அரியும் ஒன்று என்பதை உணர்த்த வேண்டும் என்பது ஸ்ரீகிருஷ்ணரது விருப்பம். தர்மர் ஒரு முறை ராஜசூய யாகம் நடத்தத் திட்டமிட்டார். எனவே, யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனைப் பணித்தார். அவனும் சம்மதித்தான். ஆனால், வைணவத்தை வெறுக்கும் அந்த புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி எனத் தயங்கினான்.
இதுவே தக்க தருணம் என நினைத்த ஸ்ரீகிருஷ்ணர், ‘‘பயப்படாதே பீமா. நான் உனக்குப் பன்னிரண்டு ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்தவுடன் புருஷாமிருகம் பூஜிக்க ஆரம்பித்து விடும். அப்போது நீ எளிதில் தப்பித்து விடலாம்’’ என்று கூறினார்.

ஸ்ரீகிருஷ்ணர் அளித்த பன்னிரண்டு ருத்திராட்சக் கொட்டைகளுடன் காட்டுக்குச் சென்றான் பீமன். திருமலையில் ஒரு பாறைமீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். பீமன், ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்று உரத்துக் கூறினான். இதனால் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. அது கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே, பீமன் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அடுத்த கணமே அது சிவலிங்கமாக மாறியது. சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்று குரல் எழுப்பினான். புருஷா மிருகம் பீமனைத் துரத்த ஆரம்பித்தது. பீமன் மீண்டும் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. இந்த இடமே திக்குறிச்சி.

இப்படி பதினோரு இடங்களைத் தாண்டி பன்னிரண்டாவது இடத்தில் திருநட்டாலம் ருத்திராட்சத்தைப் போடும்போது புருஷாமிருகம் பீமனைப் பிடித்துவிட்டது. அப்போது பீமனின் ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன், ‘‘உனது எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு!’’ என்றான் புருஷாமிருகத்திடம். அப்போது அங்கு வந்த தர்மரிடம் இருவரும் நியாயம் கேட்டனர். அவர் பாரபட்சம் கருதாமல், ‘‘ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால் பாதி உடல் புருஷாமிருகத்துக்கே’’ என்று தீர்ப்பு வழங்கினார். இதைக் கண்டு மகிழ்ந்தது புருஷாமிருகம். அந்த நேரத்தில் ஒளிப் பிழம்புடன் அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் ‘அரியும் சிவனும் ஒன்றே’ என்கிற தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜசூய யாகம் நடக்க உதவியது புருஷாமிருகம்.
புருஷாமிருகத்திடம் இருந்து தப்பிக்க பீமன் ருத்திராட்சங்களைக் கீழே போட அவை அனைத்துமே சிவலிங்கங்களாக மாறி, ஆலயங்கள் எழும்பின என்பார்கள்.
சூண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந் தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன், ‘நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விட வேண்டும்’ என்ற வரத்தைக்கேட்டான். சிவனும் அந்த வரத்தைக் கொடுத்தார். உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதா? என்பதை அறிய சிவனின் தலையை தொடமுயன்றான். உடனே, சிவன் அங்கிருந்து, ‘கோபாலா, கோவிந்தா’ என்று அழைத்தவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார்.
இறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு, மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கனை அவன் கையால் அவனது தலையை தொடச் செய்து அழிக்கிறார், விஷ்ணு. இவ் வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சிவாலய ஓட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் அதிக பக்தர்கள் கலந்து கொள்வது மிகச் சிறப்பானதாகும். 
மகா சிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிவார்கள். அன்றிலிருந்து விரதம் இருப்பர். சிவராத்திரிக்கு முன் தினம் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல், காவி உடை அணிந்து புறப்படுவார்கள். ‘கோவிந்தா கோபாலா’ என்று கோஷமிட்டவாறு திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் துவங்குவர். அந்த தொடர் ஓட்டத்தில் பன்னிரு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள். பன்னிரண்டாவது ஆலயமான திருநட்டாலத்தில் சந்தனமும் மற்ற ஆலயங்களில் திருநீறும் பிரசாதமாக வழங்கப்படும். இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்.
சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர். சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருப்பவர்கள். இவர்கள் தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிட மாட்டார்கள். இளநீர், நுங்கு, வாழைப்பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை ‘கோவிந்தா! கோபாலா!!’ எனச் சொல்லி ஓடுவர்.
பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோயில், திற்பரப்பில் உள்ள குகைக் கோயில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாய் உள்ளது.
இது சைவ வைனவ ஒற்றுமக்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா. இந்த விழாவின்போது பக்த்தர்கள் மொத்தம் 12 சிவன் கோவில்களை வரிசையாக ஓடி சென்று தரிசிப்பது வழக்கம். முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து இந்த ஓட்டம் துவங்குகிறது. வழியெல்லாம் கோவிந்தா கோபாலா என்று கோஷமிட்டபடி ஓடிவரும் பக்தர்களுக்கு பொதுமக்கள் வழி நெடுகிலும்,மோர்,குடிநீர் அன்னதானம் என வழங்கியபடி இருப்பர். முன்சிறையில் துவங்கும் ஓட்டம் அங்கிருந்து திக்குறிசி மகாதேவர் ஆலயம், திற்பரப்பு மகாதேவர் ஆலயம், திருநந்திக்கரை சிவன் கோவில், பொன்மனை திம்பிலார்குடி மகாதேவர் கோவில், திருபன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர், மேலங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், கோழிப்போர்விளை பள்ளியாடி திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம் ஆகிய சிவாலயங்களில் வழிபாடு செய்து 12 வதாக நட்டாலம் சங்கர நயினார் கோவிலுக்கு வந்து தங்கள் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்வார்கள்.

மேலாங்கோடு : ஏழாவது ஆலயமான பத்மநாபபுரம் கோவிலில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. மேலாங்கோடு ஊரில் அக்கா, தங்கை என இரண்டு இசக்கிகளின் கோவில்கள் உள்ளன. அக்கா கோவிலின் அருகே சிவன் கோவில் உள்ளது. இந்த சிவனை தரிசிக்க  தனியாக பக்தர்கள் வருவதில்லை. இசக்கியை தரிசிக்க வருபவர்களே சிவனையும் தரிசிக்க வருகின்றனர். இதனால் சிவனுக்கு செவ்வாயும், வெள்ளியும் தான் உகந்தநாளாக இருக்கிறது.

இக்கோவில் சிவன், மார்க்கண்டேயன் கதையுடன் இணைத்து பேசப்படுகிறார். மிருகண்ட முனிவருக்கு குழந்தை இல்லை. சிவனிடம் தவமிருந்தார். சிவன் 16 வயது மட்டும் வாழும் அறிவுள்ள பக்தியுள்ள ஒரு ஆண் வேண்டுமா, அல்லது அறிவில்லாத பல குழந்தைகள் வேண்டுமா? என கேட்டான். மிருகண்டர் ஒரு குழந்தை போதுமென்றார். குழந்தை பிறந்தது. மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனது. எமன் அவனை நெருங்கிய போது சிவன் கோவிலினுள் நுழைந்து லிங்கத்தை பிடித்தான். சிவன் சூலத்தால் எமனை குத்தினான். மார்க்கண்டேயன் பிழைத்தான். எமன் சிறு பாசக்கயிற்றை வீசினான். லிங்கம் சரிந்தது. இதனால் இந்த சிவன் காலனின் காலன் எனப்பட்டான். கருவறை மூலவர் காலகாலர் என அழைக்கப்படுகிறார். பன்னிரு சிவாலயங்களில் நேர்ச்சையாக வெடிவழிபாடு உள்ள ஒரே கோவில் இதுதான். மேலாங்கோடு: சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலாங்கோடு இசக்கியம்மன் ஆலயம், பத்மனாபபுரம் கோட்டை ஆகியவையும் அருகில் உள்ளன. இதையடுத்து திருவிடைக்கோடு நோக்கி தொடருவார்கள் பக்தர்கள்.

திருத்தல அமைப்பு : இத்தலம் 12 சிவாலயங்களில் எட்டாவது சிவாலயம் ஆகும். இங்கு ஒரு சிவன் கோவில் உள்ளது. ஒரு பிரகாரம் உள்ளது கோவிலின் முன்பக்கம் வயல்கள், மலையும் நிறைந்து, குறிஞ்சியும், மருதமும் மயங்கிக் கிடக்கும். இங்கு ஒரு சிறிய கோயிலும், தலவிருட்சமும் காணப்படுகிறது. நாகர் வழிபாடும் நடைபெற்று வருகிறது. குமாரகோவிலுக்கு செல்லும் மக்கள் இந்த சிவன் கோவில்களுக்கும் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கமாகவும். இத்தலத்தின் அருகில் மேலாங்கோடு இசக்கி அம்மன்களான அக்கா, தங்கச்சி கோயில்கள் உள்ளன. இரண்டு இசக்கியம்மன் கோயில்கள், சிவன்கோயில் என் மூன்று சந்நிதிகள் ஒரே இடத்தில் தனித்தனி கோயில்களாக உள்ளதால் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாதாமாதம் சிவராத்திரியன்று சிவராத்தி ஓட்டம் ஓடும் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். கூட்டம் நிறைந்து காணப்படும்.

பழங்கதை : பத்மநாபபுரத்தில் அந்தணர் வகுப்பைச் சார்ந்த கன்னிப்பெண் தனியாக வசித்துவந்தாள். கொஞ்சம் வசதியும் உண்டு. அவளை ஒரு அந்தணர் வஞ்சகமாக திருமணம் செய்து கொண்டார். அப்பெண் கருவுற்றார். பிரசவத்திற்கு அந்தணர் தன் வீடான சுசீந்தரத்திற்கு வருமாறு கூறினார். அப்பெண்ணும் சம்மதித்தாள். தன் சொத்துக்களை விற்று அந்த பணத்தோடு சுசீந்தரத்திற்கு தன் கணவனோடு நடந்து சென்றாள். கள்ளியங்காடு வந்தபோது சோர்வுற்ற அப்பெண் ஓய்வெடுக்க விரும்பினாள். கள்ளிகள் நிறைந்த அக்காட்டில் கணவனின் தொடைமீது தலை வைத்து படுத்தாள். அந்தணன். ஒரு கல்லை எடுத்து தலையணையாக வைத்துவிட்டு எழுந்து இன்னொரு கல்லை அப்பெண்ணின் தலையில் போட்டான். கதறியபடி கண்விழித்த அப்பெண் கணவனின் செயலை பார்த்து "கள்ளி நீயே சாட்சி" என்று கூறியபடி இறந்துவிட்டாள். ஈசனை வேண்டி மீண்டும் பிறப்பெடுத்து அழகிய ஒரு பெண்ணாக உருவெடுத்து கள்ளியங்காட்டிற்கு வந்து வழிப்போக்கர்களை பழிவாங்கிக்கொண்டு அந்தணருக்காக காத்திருந்தாள். அந்தணன் இறந்து விட்டான். மறுபிறவியில் ஒரு செட்டியார் குடும்பத்தில் பிறந்து வாணிபம் செய்து வந்தான். 

ஒருநாள் நள்ளிரவு அவ்வழியாக செட்டியர் வருவதைக் கண்ட அப்பெண் ஒரு கள்ளியை எடுத்து குழந்தையாக மாற்றி தன் இடுப்பில் வைத்துக் கொண்டு நின்றாள். அவள் அழகில் மயங்கிய செட்டியார் அவளிடம் வெற்றிலை கேட்டான். வெற்றிலை கொடுப்பது போல அவனைப் பிடித்து கொன்று உதிரம் குடித்தாள். மீண்டும் வழிப்போக்கர்களை பழிவாங்கினாள்.

இதையறிந்த ஈசன், பார்வதியை அனுப்பி சாந்தப்படுத்துமாறு பணித்தார். பார்வதியைக் கண்ட அப்பெண் கோபம் நீங்கி தேவியை வணங்கினாள். அப்பெண்ணிடம் மக்களை துன்புறுத்துவதை நிறுத்திவிடு என்று கூறினாள். அப்பெண் பார்வதியை நோக்கி அக்கா நீயும் என்னோடு தங்கிவிடு என்று வேண்டினாள். தேவியும் சம்மதிக்க இருவரும் சென்று தங்கிய இடம் மேலாங்கோடு. அக்காள் தங்கை என்று இருவரும் அழைக்கப்படுகின்றனர். அக்காள் - சென்பகத்தம்மாள் (பார்வதி) தங்கை  நீலி  என்று அழைக்கப்படுகின்றனர்.

கோயில் காலை 5.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்

அருகிலுள்ள ரயில் நிலையம் :  நாகர்கோயில்

பேருந்து வசதி  : உண்டு 

உணவு வசதி : இல்லை

தங்கும் வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×