18. திருக்கண்ணங்குடி





	


	



























	




 




	








 




11:08:55 AM         Saturday, May 02, 2026

18. திருக்கண்ணங்குடி

18. திருக்கண்ணங்குடி
18. திருக்கண்ணங்குடி 18. திருக்கண்ணங்குடி 18. திருக்கண்ணங்குடி 18. திருக்கண்ணங்குடி 18. திருக்கண்ணங்குடி 18. திருக்கண்ணங்குடி
Product Code: 18. திருக்கண்ணங்குடி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                  லோகநாதப்பெருமாள, திருக்கண்ணங்குடி                                                                                                                     

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிக்கலுக்கு அடுத்துள்ள ஆழியூரின் தெற்கே சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ளது. 

மூலவர் : லோகநாதன்  சியாமள மேனிப்பெருமாள்

உற்சவர் : தாமோதர நாராயணன் (இடது கரம் இடுப்பில் வைத்து)

தாயார் : லோகநாயகி

உற்சவர்  : அரவிந்தவல்லி

தல தீர்த்தம் : சச்ரவண புஷ்கரிணி, நித்ய புஷ்கரிணி, எட்டு தீர்த்தக்கிணறுகள்

விமானம் : உத்பல விமானம்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்

தலச் சிறப்புகள் : இங்கே மூலவர் நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம் திருக்கண்ணமங்கை திருக்கண்ணபுரம் கபிஸ்தலம் திருக்கோவிலூர் திருக்கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண சேத்திரங்களை கிருஷ்ணாரண்யம் என்று அழைப்பர். ஆறு காடு நகரம் ஆலயம் தீர்த்தம் இந்த ஜந்தினாலும் புகழ்பெற்ற இடமாவதால் பஞ்சபத்ரா என்றும் புராணங்கள் கூறுகிறது. 

தல வரலாறு :  வசிட்டர் கிருஷ்ண பக்தியின் வெண்ணையில் கிருஷ்ணனைப் போல் விக்ரகம் செய்து தமது பக்தி மேலீட்டால் வெண்ணெய் இளகி திரவமாகாமல் கட்டி வைத்து திவ்ய மங்கள விக்கிரமாகச் செய்து தியானத்தில் ஈடுபட்டு வழிபடுவாராம். இவரது பக்தியை வெகு நாளாகக் கண்ட கண்ணன் ஒருநாள் சிறுக்குழந்தை கோபாலனாக வடிவங்கொண்டு வசிட்டர் ஆரதனைக்குச் செய்து கொண்டிருந்த வெண்ணையை எடுத்து விழுங்கிவிட்டு ஓட்டம் பிடிக்க இதைக் கண்ட வசிட்டர் விரட்டிக் கொண்டே பின்னால் சென்றார். இந்தக் கிருஷ்ணாரண்யத்தில மகிழ மரத்தின் அடியில் மகாவிஷ்ணுவைக் குறித்து எண்ணற்ற ரிஷிகள் தவஞ்செய்து கொண்டிருந்தனர். இப்பகுதியில் கண்ணன் ஓடிவருவதை ஞானதிருஷ்டியினால் பார்த்த ரிஷிகள் கண்ணனைப் பக்தி எனும் பாசக் கயிற்றார் கட்டுண்டச் செய்து நிறுத்தினர். அவர்கள் பக்திக்குக் கட்டுண்டக் கண்ணன் வசிட்டர் என்னை விரட்டி வருகிறார் விரைவில் என்ன வரம் வேண்டும் எனக் கேளுங்கள் என்று ரிஷிகளிடம் கேட்டான் அவர்களோ நீ இங்கேயே எழுந்தருள வேண்டும் என்றனர். வேண்டுதலுக்கு இணங்கி நின்ற வேணுகானனை ஒரு நிமிட நேரத்தில் ஓடிவந்த வசிட்டர் அவன் பாதாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டார். இப்படிக் கட்டுண்ட கண்ணன் இருந்து அருள் கொடுக்கும் சேத்திரமே திருக்கண்ணங்குடி ஆகும்.

ஒரு சமயம் திருமங்கையாழ்வார் திருவரங்கம் கோயிலுக்கு திருப்பணி செய்யும் பொருட்டு நாகப்பட்டினத்திலிருந்து தங்கமயமான ஒரு புத்த விவரத்தை எடுத்து வந்தார்.  நள்ளிரவில் ஓய்வெடுக்க விரும்பிய பொழுது,  இத்தலத்தில் உள்ள புளியமரத்தின் அடியில் புதைத்துவிட்டு நான் அயர்ந்து உறங்கினாலும் நீ உறங்க விடாமல் இந்த விவரத்தை பார்த்துக்கொள் என்று புளிய மரத்தைப் பார்த்து சொன்னார்.  புளிய மரமும்,  திருமங்கையாழ்வார் சொன்னபடி கேட்டு உறங்காமல் அந்த விவரத்தை காத்தது.  அதனால் இன்றுவரை இங்குள்ள புளிய மரத்திற்கு ‘உறங்காப் புளிய மரம்’  என்ற பெயரும் உண்டு.  இன்னொரு அதிசயம் இங்குள்ள கிணறுகளில் தண்ணீரை தென்படுவதில்லை.  இந்த ஊரில் என்ன வழக்கு நடந்தாலும் அது இன்றுவரை முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

கோவில் அமைப்பு : ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம்,  இரண்டு பிரகாரங்களுடன் பக்த உலா மண்டபம், சோபன மண்டபம்,  மகா மண்டபம், அர்த்தமண்டபமும் கொண்டு  மூலவர் ஸ்ரீ லோகநாதப் பெருமாள்,  சியாமள  மேனிப் பெருமாள்  நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.  தாயார் லோகநாயகி,  உத்சவர் அரவிந்தவல்லி. தீர்த்தம்ராவண புஷ்கரணி.  கோவிலுக்குள் எட்டு தீர்த்தக் கிணறு உண்டு.  உற்சவர் தாமோதர பெருமாள்.  இடது கரத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு தரிசனம் தருகிறார். விமானம் உற்பலாவதகம். ‘தல விருட்சம் மகிழமரம்.  காயா மகிழ்;  உறங்காப்புளி;  தோலா வழக்கு ஊறாக்கிணறு திருக்கண்ணங்குடி என்று என்று பல்வேறு அதிசயங்களை கொண்டு இத்தலம் விளங்குகிறது.

இத்தளத்தில் நடைபெறும் திருவிழாக்களில் ‘ திருநீர்’  அணிந்துகொண்டு பெருமாள் காட்சியளிப்பது ஆச்சரியமான செய்தியாகும்.  கருடன்  இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு தரிசனம் தருகிறார்.  தாயார்  சன்னதியிலுள்ள மூலவரும்,  உற்சவரும் ஒரே ஜாடையில் இருப்பது,  வேறு எந்தக் கோயிலிலும் காண முடியாத அதிசயம்.  திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

பரம்பரை பரம்பரையாக வந்த சொத்துக்கள் கைவிட்டு போகாமல் இருப்பதற்கும் நம் குலமக்கள் வழி தவறி நடக்காமல் குடும்பப் பெருமையை நிலைநாட்டுவதற்கும் தெரியாத்தனமாக தவறுகள் செய்து வம்பில் மாட்டிக் கொண்டு அவர்களுக்கும், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் தத்தளிப்போர்க்கும் கடன் சுமையால் வாடுபவர்களுக்கும் இந்த தலம் நன்மையைச் செய்யும். இங்குள்ள பெருமாளை சேவித்து, அபிஷேகம் ஆராதனை செய்து வந்தால் போதும். பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பஞ்சாக பறந்துவிடும். குழந்தை பாக்கியம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் கண்ணனுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் : சிக்கல்

பேருந்து  வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×