கெளரிகுண்ட்





	


	



























	




 




	








 




5:17:20 PM         Sunday, May 03, 2026

கெளரிகுண்ட்

கெளரிகுண்ட்
கெளரிகுண்ட் கெளரிகுண்ட் கெளரிகுண்ட் கெளரிகுண்ட் கெளரிகுண்ட் கெளரிகுண்ட் கெளரிகுண்ட் கெளரிகுண்ட் கெளரிகுண்ட் கெளரிகுண்ட் கெளரிகுண்ட் கெளரிகுண்ட் கெளரிகுண்ட் கெளரிகுண்ட் கெளரிகுண்ட் கெளரிகுண்ட்
Product Code: கெளரிகுண்ட்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

கௌரிகுண்டம்

அமைவிடம்  : இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் ரிஷிகேசத்திலிருந்து 209 கி.மீ தொலைவில் பேருந்து நிலையத்திற்கு அருகில் மாதா கௌரிக்கு அமைந்த பழமையான கோவிலாகும். இந்த இடம் வரை தான் பேருந்து வசதி உள்ளது. இதற்கு மேல் நடந்து தான் செல்ல வேண்டும்.
இறைவன் : அருள்மனேஸ்வரர் 
இறைவி : மனோன்மணி 
பிறசன்னதிகள் : தலையில்லாகணேசர் 
தீர்த்தம் : வெந்நீர் ஊற்று
பாடல் : ஞானசம்பந்தர் 
வழிபட்டோர் : சந்திரன்,சூரியன்
கௌரி குண்ட்: கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியை கேதார்நாத்தின் நுழைவாயில் என்றே சொல்லலாம். இந்தப் பெயரில் உள்ள கௌரி என்பது பார்வதிதேவியின் இன்னொரு திருநாமம்தான். இங்கே வெந்நீர் குளம் ஒன்றும் குளிர்நீர் குளம் ஒன்றும் இருக்கிறது. இவற்றில் நீராடினால் பாவங்களும் துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. கௌரிதேவிக்கு ஓர் ஆலயமும் இங்கே உண்டு. இங்குள்ள குளத்தில் பார்வதி நீராடிக்கொண்டிருந்தபோது, விநாயகர் காவல் இருந்தாராம். அப்போது சிவபெருமான் அங்கே வர, விநாயகர் அவரைத் தடுத்தாராம். இதில் கோபமுற்ற சிவன், விநாயகரின் தலையைக் கொய்துவிட்டாராம். பின்னர், தவறுதலாக யானையின் தலை விநாயகருக்குப் பொருத்தப்பட, ஆனைமுகக் கடவுள் ஆனார் விநாயகர். மேலும், இந்த இடத்தில்தான் பார்வதிதேவி தவம் இருந்து சிவனின் அன்பைப் பெற்றார் என்றும் தலபுராணம் சொல்கிறது.
சிவனும் பார்வதியும் திரியுக் நாராயண்  என்ற இடத்தில் இருக்கும் விஷ்ணு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் என்றும், மகாவிஷ்ணுவே திருமண விழாவில் கலந்துகொண்டு நடத்தி வைத்தார் என்றும் தல வரலாறு சொல்கிறது. அத்துடன், திருமணத்தின்போது மூட்டப்பட்ட வேள்வித் தீ இன்று வரை ஆலயத்தின் முன் தொடர்ந்து எரிந்து வருவதாகவும் ஐதீகம். இதனால் இந்தக் கோயிலை அஹண்ட் தூனி ஆலயம் என்று அழைக்கிறார்கள். அஹண்ட் தூனி என்றால் 'நிரந்தரமான நெருப்பு’ என்று அர்த்தம். மூன்று யுகங்களாக அணையாமல் நெருப்பு எரிவதால்தான் திரியுக் நாராயண் ஆலயம்  என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் இந்த அக்னிகுண்ட சாம்பலைப் புனிதப் பொருளாகச் சேகரித்துச் செல்கின்றனர்.
கோயிலின் கர்ப்பக்கிரஹத்தில் 2 அடி உயரம் உள்ள நாராயணர் விக்கிரகமும், அவருக்கு இடதுபுறம் லட்சுமி, வலதுபுறம் சரஸ்வதியும் காட்சி தருகிறார்கள். பத்ரி நாராயணர், சீதாராமர், குபேரர் திருவுருவங்களும் இருக்கின்றன. மணக்கோலத்தில் சிவனும் பார்வதியும் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்கள். கிடந்த கோலத்தில் அருள்பாலிக்கும் நாராயணரும் இருக்கிறார். இங்கு மூலஸ்தானத்தில் சிவபெருமான் இலிங்கவடிவில் அமைந்துள்ளார். 1 அடி உயரம்.  இங்கும் ஒரு சிறுகுளம் உள்ளது. பார்வதி தேவி நின்ற கோலத்தில் சுவாமி சன்னதிக்கு வெளியில் அம்பாள் ஒற்றைக் காலில்  தபசு செய்யும்  காட்சி அழகாய் வடிக்கப்பட்டு இருக்கிறது. கௌரி ஏரி, பார்வதி சரோவர் அல்லது இரக்கத்தின் ஏரி எனவும் அறியப்படுகிறது. இது பார்வதி தேவியான விநாயகர் மீது உயிர் மூர்த்தியாக இருந்த ஏரி. இந்துக்கள் இந்த ஏரி புனிதமான இடமாக கருதுகின்றனர். 
இரண்டு வெந்நீர், குளிர்நீர் உற்று  பக்தர்கள் குளிக்க ஆண்களுக்குத் தனியாகவும், பெண்களுக்குத் தனியாகவும் உள்ளன. 
ராம்பாரா: கௌரி குண்ட்லிருந்து 7 கி.மீ மேல ஏறும் பாதையில் உள்ளது. கெருடசட்டி என்ற இடத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள  கேதார் உட்சி நன்கு தெரியும். 
2013 இல் வெள்ளப் பெருக்குக்குப் பிறகு, இரண்டு இடங்களை இணைப்பதற்கு ஒரு புதிய மலையேற்ற வழி கட்டப்பட்டது. புதிய பாதை மிகவும் பாதுகாப்பான அனைத்து தேவையான வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த பாதை 8-10 அடி அகலமும் அதன் விளிம்பில் இரும்பு கம்பியையும் கொண்டுள்ளது. 
பயணிக்க உகந்த காலம் : மார்ச் முதல் நவம்பர் வரை  
அருகிலுள்ள விமான நிலையம் : டேராடூன் 239 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : ரிஷிகேஷ் 220 கி.மீ
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×