ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு





	


	



























	




 




	








 




10:44:29 PM         Friday, May 15, 2026

ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு

ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு
ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு
Product Code: ஸ்ரீநித்யானந்த சுவாமி - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare


சுவாமி நித்தியானந்தர்

இருப்பிடம் : இந்தியாவின் கர்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டம், பிடதியில் நித்தியானந்த தீயான பீடம் ரயில்வே நிலையத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 

சுவாமி நித்தியானந்தர் என்றும் பரவலாக பரமஹம்ச நித்தியானந்தா எனவும் அறியப்படுபவர்.  இவர் பரமஹம்ச நித்தியானந்த தீயான பீடம் என்பதை தோற்றுவித்துள்ளார். இந்த பீடத்தின் தலைமை இடம் பெங்களூருவில் உள்ளது. இந்த பீடத்திற்கு கனடா முதலான 50 நாடுகளில் கிளைகள் உள்ளன. உலக அளவில் 10 மில்லியன் நபர்கள் பின்பற்றுபவர்களாக உள்ளனர்.  

இரண்டாயிரம் மைல்களுக்கு மேல் பாதயாத்திரையாக நடந்து சென்று இந்தியாவின் எல்லா ஆன்மீக நிறுவனங்களைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் ஆராய்ந்து  தேர்ந்தார். திபெத் வரை சென்ற நித்தியானந்தர் இமயமலையில் பல கடுமையான தவ நிலையின் பின்னர் ஞான அனுபூதி முக்தி இந்நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளிலும் பரந்து விரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை வரலாறு  : நித்தியானந்தா என்கின்ற ராஜசேகர் 1978ம் ஆண்டு ஜனவரி 1 தேதி திருவண்ணாமலையில் அருணாச்சலம் மற்றும் லோகநாயகி தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாவார்.  குடும்பம் சாதாரண விவசாயக் குடும்பம். அப்பா கூலித் தொழிலாளி. பிறந்த பத்தாம் நாளில் ராஜசேகருக்கு ஜாதகம் கணிக் கப்பட்டபோது ஜோதிடர், ராஜசேகரின் கிரகசாரங்களைப் பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாகத் திகழ்வார் என்று கூறினாராம். தனது 12ம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் ஒரு புத்த பூர்ணிமா அன்று (31 மே 1990), ‘உடல் தாண்டி அனுபவம்’ எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மிக அனுபவமாக இவர் அடைந்ததாக அறிவித்தார். பன்னிரெண்டாம் வகுப்புவரை அரசுப் பள்ளியில்தான் படித்த இவர், அதன்பின் அருணை பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி பரிவிராஜக வாழ்க்கையினைத் தொடர்ந்தார். ராம கிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீகக் குருவாகக் கொண்டு வளர்ந்த ராஜசேகர், மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். அங்கு சேர்ந்த கொஞ்ச காலத்திலேயே, மற்றவர்களை முந்திக் கொண்டு தனக்கு முன்னுரிமை தந்து, தத்கல் முறையில் தீட்சை தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ‘அப்படி ஒரு வழக்கம் இங்கு இல்லை  என்று பதில் கிடைக்கவே, அங்கிருந்து வெளியேறி திருச்செங்கோடு, ஈரோடு பகுதிகளில் தங்கி  பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தவர், பின்னர் இமயமலைக்குப் புறப்பட்டார். அங்கு பல கடுமையான தவ நிலைக்குப் பிறகு, ‘ஞானஅனுபூதி முக்தி’ என்னும் நிலையினை 2000ம் ஆண்டு ஜனவரி 1 அன்று அடைந்ததாகக் கூறிய இவர், தியான பீடம் என்ற சேவை நிறுவனத் தினை அதே நாளில் ஆரம்பித்தும் வைத்தார். இன்று இந்நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளில் கோடிக்கணக்கான சொத்துக்களுடன் பரந்து விரிந்துள்ளது. 

நித்தியானந்தா எந்த விஷயத்திலும் ஹைடெக் சமாச்சாரங்களைத் தான்விரும்புவார். மைக் முதல் லேப்டாப் வரை ஹைடெக் சாமியாராக வலம் வந்த நித்தியானந்தா கார் விஷயத்திலும் ஹைடெக் அம்சங்களைக் கொண்ட ஃபோர்டு எண்டெவர் பிரிமியம் எஸ்யூவி காரை பயன்படுத்தி வருகிறார். ஆண்டுக்கு ஒரு புதிய காரை மாற்றிவிடுவது நித்தியானந்தாவின் வாடிக்கையாம்.
மதுரையிலிருக்கும் மதுரை ஆதீனம் மடத்தில் நித்தியானந்தரை தனது வாரிசாகவும் 293 வது மதுரை ஆதீனமாகவும் அறிவித்தார். இதன்படி கடந்த ஏப்ரல் 29, 2012 அன்று மதுரை ஆதீனம் மடத்தில் ஆதீன வழக்கப்படி 292 வது ஆதீனமாக இருப்பவர் நித்தியானந்தருக்கு 293 வது மதுரை ஆதீனமாக நியமித்ததற்கு அடையாளமாக அவரது கழுத்தில் ஆதீனகர்த்தர்கள் அணியும் தங்க மாலை, தலைக்கவசம் போன்றவைகளை அணிவித்தார். 

பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் 32வது கிலோ மீட்டரில் இருக்கிறது பிடதி. அங்கே இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தியான பீடத்தின் நுழைவாயில் இருக்கிறது. நடந்து செல்லும் வழியில் பிரமாண்டமான சிவபெருமான் சிலை இருக்கிறது. ஒரு பெரிய குளத்துக்கு நடுவில் சிவன் இருப்பதைப் போன்று வடிவமைத்து இருக்கிறார்கள். நித்தியானந்தரின் பிறந்த நாள் மற்றும் பௌர்ணமி தினங்களில் இந்த இடம் விழாக்கோலத்துடன் இருக்கும். நித்தியானந்தர் பட்டாடை உடுத்தி வந்து, சிவனுக்குக் குடம் குடமாக பாலும் தேனும் ஊற்றி அபிஷேகம் செய்வார். விடிய விடிய ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடப்பதும் இங்கேதான். அதையும் கடந்து நடை போட்டால், முதலில் வருவது வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கான விடுதி.  ஈசனின் மடியில் இருக்கும் பார்வதி சிலைக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு இருக்கிறது. நித்தியானந்தர் பிடதியில் இருந்தால், தினமும் காலை 8 மணிக்கு இந்த வருவார். அங்கே உள்ள சிலைகளுக்கு சுமார் அரை மணி நேரம் பூஜை செய்வார். பூஜை முடிந்த பிறகு, நித்தி அங்கேயே அமர்ந்துகொள்வார். 

600 வருடங்கள் பழமையானதாகச் சொல்லப்படும் ஆலமரம் ஒன்று இருக்கிறது. இந்த ஆலமரமத்துக்கு அடியில்தான் நித்திக்கு ஞானம் கிடைத்ததாகச் சொல்வார்கள். ஆலமரமத்துக்குப் பக்கத்தில் தட்சிணாமூர்த்தி சிலை இருக்கிறது. அதிகாலை 5 மணிக்கெல்லாம் இந்த ஆலமரத்தைச் சுற்றி போவார். அதன்பிறகு அங்கேயே சற்று நேரம் தியானத்திலும் ஆழ்ந்து விடுவார். நித்திக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம், இந்த ஆலமரத்துக்கு அடியில் வந்து அமர்ந்து கொள்வார். ஆலமரத்துக்கு இடதுபுறத்தில் இருக்கும் ஒரு நீண்ட அறை முழுக்க, நித்தி சிறு வயதில் பயன்படுத்திய பொருட்கள், புகைப்படங்களை வைத்திருக்கிறார்கள். அதோடு நித்தி உட்காந்து ஆசி வழங்குவதைப் போன்ற ஒரு மெழுகுச் சிலையும் இருக்கிறது. சற்றுத் தள்ளி இருக்கிறது ஆனந்தக்கூடம். 

ஆசிரமத்தில் குடும்பத்தோடு வந்து தங்கி இருப்பவர்களுக்கு தனியாக ஒரு குடியிருப்பும், பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இன்னொரு பகுதியிலும் இடம் ஒதுக்கி இருக்கிறார்கள். குடும்பத்தோடு இருப்பவர்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாம். ஆனால், பகல் நேரத்தில் ஆசிரமத்தில் சேவை செய்ய வேண்டும்.
பிரம்மச்சரியத்தை ஏற்க விரும்புபவர்களுக்கு பல சோதனைகள் வைக்கப்படும். அந்தச் சோதனைகளில் வெற்றி பெறாதவர்களுக்கு பிரம்மச்சரியம் கொடுப்பது இல்லை. பிரம்மச்சரியம் ஏற்ற ஆண்களை 'மஹாராஜ்’ என்று அழைக்கிறார்கள். பெண்களை, 'ம்மா’ என்கிறார்கள். ஆசிரமத்தில் தங்கி இருக்கும் பிரம்மச்சாரிகளில், இன்ஜினீயர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள் என்று பெரும்பாலும் மெத்தப் படித்தவர்கள்தான் அதிகம். அவரவர் படித்த படிப்புக்கு ஏற்ப வேலைகள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.

திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து  இருக்கும்.

அருகிலுள்ள இரயில் நிலையம்:  பிடதி 4 கி.மீ.

அருகிலுள்ள விமான நிலையம்: பெங்களூரு 

தங்கும் வசதி : உண்டு 

பேருந்து வசதி: உண்டு 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×