071. திருவடமதுரை





	


	



























	




 




	








 




2:39:41 PM         Saturday, May 02, 2026

071. திருவடமதுரை

071. திருவடமதுரை
071. திருவடமதுரை 071. திருவடமதுரை 071. திருவடமதுரை 071. திருவடமதுரை 071. திருவடமதுரை 071. திருவடமதுரை 071. திருவடமதுரை 071. திருவடமதுரை
Product Code: 071. திருவடமதுரை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                கோவர்த்தநேசன், திருவடமதுரை (மதுரா)

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள உத்திரபிரசேம் மாநிலத்தில் இந்தியாவின் தலைநகரான டெல்லியிலிருந்து ஆக்ரா போகும் ரயில் பாதையில் மதுரா ஊர் இருக்கிறது. டெல்லியிலிருந்து பஸ் மூலமாகச் சென்றும் வரலாம். 10 கி.மீ தொலைவில் உள்ள பிருந்தாவனமும் 27 கி.மீ தொலைவில் உள்ள கோவர்த்தனகிரியும் இக்கோயிலுடன் சேர்ந்த திவ்ய தேசமாகும். இது திருக்கோயிலுக்கு வடக்கே யமுனை ஆற்றின் வடகரையில் ஆற்றை ஒட்டியவாறு அமைந்துள்ளது. ஏறக்குறைய இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பிருந்தாவனம் சுற்றுச்சுவர்களையும் இரண்டு கோபுரங்களையும் கொண்டுள்ளது. 

மூலவர்         :    கோவர்த்தனேசன், பாலகிருஷ்ணன்

தாயார்          :    சத்யபாமா நாச்சியார்

தீர்த்தம்        :    இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், யமுனா நதி

விமானம்    :    கோவர்த்தன விமானம்

மங்களாசாசனம் :    பெரியாழ்வார் - 15 பாசுரங்கள், ஆண்டாள் - 18 பாசுரங்கள், தொண்டரடிப்பொடியாழ்வார் - 1 பாசுரம்
திருமங்கையாழ்வார் - 4 பாசுரங்கள், நம்மாழ்வார் - 12 பாசுரங்கள்

தலச் சிறப்புகள்:  பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 100 வது திவ்ய தேசம். கிருஷ்ணர் அவதரித்த இடம்.  மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். கோயில் யமுனையின் கரைமேல் உள்ளது. யமுனைக்கு ஆரத்தி காட்டுவது விசேஷம், ஸ்ரீகிருஷ்ணன் வரலாறு நிகழ்ச்சிகள் இந்த மதுராவின் வரலாற்றில் கூறப்படுகின்றன. ஏகாதசி அன்று ராஜலீலை இன்றும் நடைபெறுகிறது.

தல வரலாறு : கிருஷ்ணன் பிறப்பிற்கு முன் வாசுதேவர் சிறை வைக்கப்பட்டது. தேவகியின் வயிற்றில் வரும் 7வது கெர்ப்பத்தில் தனக்கு மரணம் என்பதையறிந்த கம்சன் மற்ற குழந்தைகளை எல்லாம் கொன்றது. கிருஷ்ணன் பிறந்தவுடன் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர என்றார் போல் சிறைச்சாலையில் தேவகிக்குப் பிறந்து அன்று இரவே ஆயர்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டு நந்தகோபாலன் வீட்டில் யசோதை மகனாக வளர்ந்தது, அங்கு லீலா விநோதங்கள் புரிந்து கோபிகைகளின் இல்லங்களிலெல்லாம் ஆடிக்களித்து. அதன் பின் வாலிபனாகி மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம் செய்தது என்று இவ்வாறான வரலாறுகளுடன் துவாரகையில் கண்ணன் புதிய மாளிகை கட்டிச் செல்லும் வரை உள்ள கிருஷ்ணவரலாற்று நிகழ்ச்சிகள் இந்த மதுராவின் தல வரலாற்றாகப் பேசப்படுகிறது.

மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி சூரசேன வம்சத்தினரின் தலைநகராக இருந்தது இது. அந்த வம்சத்தினரில் குறிப்பிடத் தக்க மன்னன் கம்சன். இவன் கண்ணனின் ஒன்றுவிட்ட தாய்மாமன். ராமாயணத்திலும் மதுராவைப் பற்றிய குறிப்பு வருகிறது. ராமன் யமுனை நதிக்கரையில் அர்த்தசந்திர வடிவில் மாட மாளிகைகள், தடாகங்களுடன் மதுரா நகரை அமைத்தான். சத்ருக்னனுக்குப் பிறகு, மதுரா நகரம் யாதவர்கள் வசமானது. வசுதேவர் பரம்பரையினர் இந்த நகரை ஆண்டதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. புருரவாவுக்கும் ஊர்வசிக்கும் பிறந்த மூத்த மகனான ஆயுவினால் உருவாக்கப்பட்டதுதான் மதுரா என்றும் புராணங்களில் தகவல் காணப்படுகிறது. கி.மு 1600 களில் இப்பகுதியை ஆட்சி செய்த மது என்ற மன்னனின் பெயரால் இந்த நகர் மதுரா எனப் பெயர்பெற்றதாகச் சொல்வோரும் உண்டு. மெதோரா என்ற பெயரில் மதுரா அழைக்கப்பட்டதாக மெகஸ்தனிஸ் என்ற வரலாற்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார். ஏராளமான மரங்களைக் கொண்டு இருந்ததால் இந்தப் பகுதி மதுவனம் எனப்பட்டது. பின்னர் மதுபுரா என்று அழைக்கப்பட்டு அதுவே இப்போது மதுரா ஆனது.

மதுராவில் கோயில் முற்றத்தில் துளசிச் செடிகளுடன் யாக குண்டம் ஒன்று தென்படுகிறது. சிற்ப வடிவில் தேவகியும் வசுதேவரும் கையில் வாளோடு கம்சனும் நிற்கிறார்கள். விலங்கோடு வசுதேவரும் தேவகியும் உட்கார்ந்திருக்கும் சிற்பம். ஒரு குழந்தையைத் தலைகீழாகப் பிடித்திருக்கும் கம்சன் என மேலும் பல சிற்பங்களையும் பார்க்க முடிகிறது. சன்னதிக்கு வெளியே தசாவதாரக் காட்சிகளை வரைந்து தொங்கவிட்டு இருக்கிறார்கள். ஆஞ்சநேயர் சன்னதி ஒன்றும் அங்கே அழகுறக் காட்சி தருகிறது.

கண்ணன் அவதரித்த ஜென்ம தலம்தான் மதுரா. விரஜபூமி எனப்படும் புண்ணிய பூமியின் மையம்தான் இந்த நகரம். கண்ணன் பிறந்த மதுராநகர் பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் மொத்தம் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட திவ்ய ÷க்ஷத்திரமாகும். ஆழ்வார்களில் பாடல்பெற்ற கோயில்கள் தற்போது இல்லை. பிற்காலத்தில் கட்டப்பட்ட துவாரகாநாதர் மற்றும் மதுராநாதர் ஆலயங்கள்தான் இருக்கின்றன.

மதுராவை அரசாளும் கண்ணனை மனம் உருகிச் சேவித்தால், செய்த பாவம் எல்லாம் தீ முன் பஞ்சுபோல் வெந்துபோகும் என்ற மேற்படி பொருள் பொதிந்த திருப்பாவைப் பாடல் வரிகள் மனத்தில் ஒலித்தபடி இருந்தன. கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.  கோயில் மிகவும் விஸ்தாரமாக இருக்கிறது. செயற்கையாக ஒரு குன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். குன்றுக்குள் போய்ப் பார்த்துவிட்டும் வரலாம். சற்று உள்ளே போனால் கல்கோட்டை போன்ற ஒரு பகுதி. வலதுபுறம் இருக்கும் பெரிய கதவுகளை அடுத்து அமைந்திருக்கும் அறையில் ஒரு மேடை இருக்கிறது. எல்லோரும் அந்த மேடையைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு செல்கிறார்கள். சிலர் அங்கேயே தியானம் செய்கிறார்கள். அந்த மேடை தான் பகவான் கிருஷ்ணர் அவதரித்த இடம் என்கிறார்கள் அந்த மேடைக்கு உயரமான மேற்கூரை அமைத்திருக்கிறார்கள்.

அந்த திவ்ய இடத்தை தரிசித்துவிட்டு வெளியே வந்தால், கோயில் கட்டடத்தை ஒட்டியே இன்னொரு பெரிய கட்டடம் தென்படுகிறது. விலாசமான படிகளின் வழியாக ஏறினால். அதற்குள் செல்லலாம், எதரே மிகப் பெரிய ஹால் அங்கே எக்கச்சக்கமான தூண்கள். அவை சதுர வடிவில் அமைந்திருக்கின்றன. தூண்களில் மகாபாரதம் மற்றும் ராமாயணக் காட்சிகள் சித்திரிக்கப்பட்டு இருக்கின்றன. சன்னிதியில் பளிங்கினால் ஆன கடவுள் திரு உருவங்கள் காணப்படுகின்றன. மதுராவின் சரித்திரத்தை புரட்டினால் பல காலங்களில் வேறு வேறு வகையில் அங்குள்ள கோயில் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.

இந்திர பூசை செய்து ஆயர்பாடியில் ஆண்டுதோறும் இந்திரனை வழிபடுவர், ஸ்ரீகிருஷ்ணன் இந்திரனுக்குப் படைத்த உணவு வகைகளை உண்டு தீர்க்க இந்திரன் கோபங்கொண்டு நகரம் அழியும் அளவிற்கு மழை பெய்யச் செய்தான். கண்ணன் கோவர்தனமலையைக் கொடையாக பிடித்து நகர மக்களையும், பசுக்களையும் காப்பாற்றினார். இறுதியில் இந்திரன் பணிந்தான். மதுராவில் கண்ணனின் பிறப்பு, வளர்ப்பு மற்றும் கம்சனை அழித்தது தாய் தந்தையரை சிறையில் இருந்து மீட்டு துவாரகையில் புதிய மாளிகைகட்டி தன் பெற்ற தாய் தந்தையருடன் வாழ்ந்தான்.

கிருஷ்ண ஜென்மாஷ்டமி இங்கே மிகவும் விசேஷம். அந்த விழாவின் முதல் ஒரு வாரம் வரை கிருஷ்ண சரிதம் முழுவதையும் நாடகமாக நடிக்கிறார்கள். பல லட்சம் மக்கள் அதைக் கண்டுகளிப்பார்களாம். செய்த பாவம் நீங்கவும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். கிருஷ்ணருக்கும், பாமாவுக்கும் அர்ச்சனை செய்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். காலை 5.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். 2 கி.மீ தொலைவில் ஜன்ம பூமி என்ற புதிய கோயில் உள்ளது. இது ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலையாக கருதப்படுகிறது. ப்ருந்தாவனத்தில் ரங்கமந்திர் என்ற விசாலமான கோயில் உள்ளது. இங்கு தங்குவதற்கும் சாப்பாட்டிற்கும் மற்றும் கைங்கர்யம் செய்பவர்கள் தமிழ்நாட்டு வைஷ்ணவர்களே, மேலும், துவாரக் நாத்ஜீ, மதுராநாத்ஜீ என்ற இரண்டு ஆலயங்கள் உள்ளன.

அருகிலுள்ள விமானதளம் : டெல்லி, ஆக்ரா

அருகிலுள்ள ரயில் நிலையம் :  ஆக்ரா

பேருந்து  வசதி :   உண்டு

தங்கும் வசதி    :     உண்டு

உணவு வசதி  :     உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×