072. திருவாய்ப்பாடி





	


	



























	




 




	








 




7:47:58 AM         Saturday, May 02, 2026

072. திருவாய்ப்பாடி

072. திருவாய்ப்பாடி
072. திருவாய்ப்பாடி 072. திருவாய்ப்பாடி 072. திருவாய்ப்பாடி 072. திருவாய்ப்பாடி
Product Code: 072. திருவாய்ப்பாடி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                          நவமோகன கிருஷ்ணன், ஆயர்பாடி (திருவாய்ப்பாடி)

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் இந்தியாவின் தலைநகரான டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது.

மூலவர்       :    நவமோஹன கிருஷ்ணன்

தாயார்         :    ருக்மணி, சத்யபாமா

தீர்த்தம்        :     யமுனா நதி

விமானம்    :    ஹேமகூட விமானம்

மங்களாசாசனம் :    பெரியாழ்வார் - 10 பாசுரங்கள், ஆண்டாள் - 5 பாசுரங்கள், திருமங்கையாழ்வார்- 7 பாசுரங்கள்

தலச் சிறப்புகள்: மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். கண்ணன் வெண்ணெய் உண்டு விளையாடித் திரிந்த இடம். கண்ணன் மண்ணைத் தின்னும் போது யசோதை வாயைத் திறந்து காட்டச் சொன்னதும், உலகத்தை காட்டிய இடம், பூதனையின் முலை உண்டு அவள் உயிர் பிரிந்த இடம். நந்தகோபாலனாக வளர்ந்து மாடு மேய்த்து பலவித லீலைகளை நடத்திய இடம் கண்ணனின் பல பருவ நிகழ்ச்சி நடந்தது, இந்த கோகுலததில்தான். ஆயர்பாடி என்றும் ஆய்ப்பாடி என்றும் கோகுலம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

தல வரலாறு : இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. இந்து தொன்மப்படி துவாபரயுகத்தில் திருமாலின் ஒரு அவதாரமான கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.

இங்கு யமுனை நதி ஓடுகிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் உள்ள இடம் தான் உண்மையான கோகுலப் பகுதி என்று சொல்லப்படுகிறது. புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை நதிக்கரையில் ஒரு தலம் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை, பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோருக்கு மரத்தினால் செய்யப்பட்ட மூர்த்திகள் உள்ளன.
 
பகவான் கண்ணன் அவதரித்த ஊர் மதுரா, அங்கிருந்து தென்கிழக்கில் ஐந்து கி.மீ.  தொலைவில் ஓடுகிறது யமுனா நதி மீது கட்டப்பட்ட பாலத்தைக் கடந்துசென்றால்  கண்ணன் வாழ்ந்த கோகுலத்துக்குச் செல்லலாம். கோகுலம், சிறிய ஊர்தான். அங்கிருக்கும் கோயிலில்தான் நவமோகன கிருஷ்ணன்’ என்ற பெயரில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் கண்ணபிரான் காட்சி தருகிறார். பகவான் கண்ணனுடன் பாமா ருக்மிணியும் காட்சி தருகிறார்கள். பக்தர்கள் இக்கோயிலில் பக்தி பரவசத்தில் ஆழ்ந்திருப்பதைக் காணலாம்.

மகாகவி சூர்தாஸ், வல்லபாசார்யரின் மாணவர். இவர் பிறவியிலேயே பார்வை  குறைபாடு கொண்டவர். அவர் கோகுலத்தில் அருள்பாலிக்கும் பகவான் கண்ணனின்  பெருமைகளைக் கேள்விப்பட்டதும், அங்கே செல்ல வேண்டுமென்று விரும்பினார்.  கண்ணனை நேரில் தரிசிக்க முடியாவிட்டாலும் கண்ணனாவது தன்னைப் பார்ப்பானே என்ற முழு நம்பிக்கையில் தன்னை அங்கு அழைத்துச் செல்லும்படி உறவினர்களை  வற்புறுத்தினார். அவர்களும் அவரை அந்தக் கோயிலுக்குள் அழைத்துச்சென்று பகவான்  கிருஷ்ணனின் விக்ரகத்தின் முன் நிறுத்தினார்கள். கிருஷ்ணன் முன் நின்ற சூர்தாஸ்  கவிபாட ஆரம்பித்தார். தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார். கிருஷ்ணனின் அரு ளால் அவரது பார்வைக் குறை நீங்கியது. தெய்விக ஒளி அவருக்குப் பார்வையைத் தந்தது என்பது வரலாறு. கண்ணனுக்குப் பிடித்த வெண்ணெயும் அவலும் இங்கே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பானது.

 

சிறைச்சாலையில் தேவகி மைந்தனாகப் பிறந்த கண்ணன் இந்த ஆயர்பாடியில் உள்ள நந்த கோபர் வீட்டிற்கு வந்த நாளை ஆண்டுதோறும் இங்கு விழாவாக நந்தோற்சவம் என்ற பெயரில் இன்றும் கொண்டாடுகின்றனர். இன்றும் ஜன்மாஷ்டமியின் மறுநாள் (கோகுலாஷ்டமியின் மறுதினம்) இதே பெயரில் இந்த உற்சவம் வடநாட்டிலும், பிற முக்கிய தலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கௌடில்யா மடத்தில் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் மிக்க சிறப்புடன் தற்போதும் நடத்தப்பட்டு வருகிறது.
 
அருகிலுள்ள விமானதளம் : டெல்லி, ஆக்ரா
 
அருகிலுள்ள ரயில் நிலையம் :  ஆக்ரா மதுரா
 
பேருந்து  வசதி :   உண்டு
 
தங்கும் வசதி    :     இல்லை
 
உணவு வசதி  :     இல்லை
Mail this page Printable view
×
×
×
×
×
×
×