இமையவரப்பன், திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் இத்தலம் செங்கண்ணூர் என்று பெரிய நகரமாக விளங்குகிறது. செங்கண்ணூர் ஸ்டேஷனிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. திருவல்லாவிலிருந்து தெற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தை ‘திருச்சிற்றாறு’ என்றும் ‘விஷ்ணு கோயில்’ என்றும் ‘பெருமாள் கோயில்’ என்றும் அழைப்பர். இந்த ஊர் திருவனந்தபுரம் எர்ணாகுளம் ரயில் பாதையில் உள்ளது.
மூலவர் : இமயவரப்பன்
தாயார் : செங்கமலவல்லி
தீர்த்தம் : சங்கு தீர்த்தம், திருச்சிற்றாறு
விமானம் : ஜெகஜோதி விமானம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு. மூலவருக்கு சங்கு சக்கரங்கள் இடம் மாறி உள்ளது. வெளிப் பிரகாரத்தில், கோபால கிருஷ்ணன், சாஸ்தா தெய்வங்கள் மிக அழகு. சிவனுக்கு இத்தல பெருமாள் தரிசனம் தந்துள்ளார்.
தல வரலாறு : பாரதப்போரில் தன் குருவான துரோணாச்சாரியாரை கொல்வதற்காக தர்மன் ஒரு பொய் கூறினான். அஸ்வத்தாமன் என்பவன் துரோணரின் மகன். இவன் இறந்து விட்டான் என சொன்னால், துரோணர் நிலை குலைந்து விடுவார் என்பது திட்டம். தர்மன் உண்மையை மட்டுமே சொல்வான் என்பதால், அவனை விட்டு அஸ்வத்தாமன் என்ற சொல்லை பலமாக சொல்லி (அஸ்வத்தாமன் என்ற) யானை இறந்து விட்டது என்ற சொல்லை மிக மெல்லிய சப்தத்தில் கூற செய்தனர். இதனால் போரில் துரோணாச்சாரியர் கொல்லப்பட்டார். தான் சொன்ன பொய்யினால் தான் துரோணர் கொல்லப்பட்டார். அவரது இறப்புக்கு தானே காரணம் என நினைத்து, நினைத்து தர்மன் மனம் வருந்தினான். பின் போர் முடிந்த பிறகு மன அமைதிக்காக இத்தலத்திற்கு வந்து தவம் இருந்ததாகவும், கோயிலை புதுப்பித்தாகவும் கூறப்படுகிறது. தர்மர் இத்தலம் வந்து வழிபாடு செய்வதற்கு முன்பே இமையவர்கள் (தேவர்கள்) இங்கு வந்து திருமாலைக்குறித்து தவம் இருந்தனர். இவர்களது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், தந்தைக்கு நிகராக தரிசனம் கொடுத்தார். இதனால் தான் இத்தல பெருமாள் “இமையவரப்பன்’ என அழைக்கப்படுகிறார்.
கோயிலின் சுற்றுப்பிரகாரங்களில் அமைந்துள்ள விளக்குகளில் வர்ணம் பூசப்பட்டு வரிசையாக இருப்பது பார்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இக்கோயில் அமைந்துள்ள நகரத்தின் பெயர் செங்குன்றூர். கோயிலின் அருகே பாயும் நதியின் பெயர் சிற்றாறு. பெருமாளின் திருநாமம் இமையவரப்பன். நம்மாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்யும் போது மூன்று பெயர்களையும் பாடலில் உபயோகித்துள்ளார்.
சூரன், பத்மன் என்றிருவர், சிவனிடம் வரம் பெற்று ஓர் உடலாய் சூரபத்மன் என்ற பெயர் பெற்று தேவர் உள்பட எல்லாரையும் இம்சை செய்ததால், சுப்ரமண்யன் இவர்களை சம்ஹாரம் செய்து, அவர்களைக் கொடியில் சேவலாகவும், மயிலாகவும் ஆக்கிக்கொண்டதாக வரலாறு. தன் குருவான துரோணரை யுத்தத்தில் கொல்வதற்கு “அச்வத்தாமா ஹத:” என்று உரக்கச் சொல்லி “குஞ்ஜர” என்று மெதுவாக சொன்னது தர்மபுத்ரர்pன் மனதை வருத்தியபடியால், இத்தலத்திற்கு வந்து ஆலய ஜீர்ணோத்தாரணம் செய்து, திருசிற்றாற்றில் ஸ்நானமும் பகவத் பூஜையும் செய்து, மன நிம்மதி அடைந்ததாக வரலாறு. தர்மபுத்ரர் ஜீர்ணோத்தாரணம் செய்ததால், தர்மபுத்ரர் ப்ரதிஷ்டை என்பர்.
காலை 5.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : எர்ணாகுளம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கண்ணூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு