50. திருஊரகம்





	


	



























	




 




	








 




10:51:24 PM         Friday, May 01, 2026

50. திருஊரகம்

50. திருஊரகம்
50. திருஊரகம் 50. திருஊரகம் 50. திருஊரகம்
Product Code: 50. திருஊரகம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                    உலகளந்த பெருமாள், திருஊரகம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய காஞ்சிபுரம் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் இருக்கிறது. இத்தலத்தை உலகளந்த பெருமாள் என்று கூறுவர். காமாட்சி அம்மன் கோயிலுக்கு எதிர்புறம் உலகளந்த பெருமாள் கோயில் என்று அறியப்படும் தலம்.

மூலவர் : உலகளந்த பெருமாள், திரிவிக்கரமப் பெருமாள்
உற்சவர் : பேரகத்தான்
தாயார் : அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி
தீர்த்தம்:நாக தீர்த்தம்
விமானம்        :    ஸாரஸ்ரீகர விமானம்.

மங்களாசாசனம்    :    திருமழிசையாழ்வார் - 2 பாசுரங்கள், திருமங்கையாழ்வார் - 4 பாசுரங்கள்
 
தலச் சிறப்புகள்: உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். பெருமாள் சந்நிதிக்கு பக்கத்தில் பகவான், ஆதிசேஷனாகத் திருக்கோலம் கொண்டு சேவை சாதிக்கிறார். நான்கு திவ்ய தேசங்களுக்கும் ஒரே உற்சவர் இங்கு எழுந்தருளியுள்ளார்.
    
உலகளந்த பெருமாள் ஊரகம் இரண்டும் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. மிகப் பெரிய திருவுருவத்தை நிமிர்ந்து சேவிக்க முடியாமல் போன மஹாபலிக்காக உலகளந்த பெருமாள் சந்நிதிக்குப் பக்கத்தில் ஒரு சிறிய சந்நிதியில் எம்பெருமான் ஆதிசேஷனாய் திருக்கோலம் கொண்டு சேவை சாதிக்கிறார். இங்கு அனைத்து வசதிகளும் உள்ளது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருஊரகம்எனப்படும். இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே கொடிமரத்திற்கு எதிரே உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே திருநீரகம், திருக்காரகம்,திருகார்வனம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு.

ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் மிகவும் பிரம்மாண்டமானவர். 108 திருப்பதிகளில் இந்த அளவு பிரமாண்ட தரிசனத்தை எங்கும் காணமுடியாது. இதே போல் இங்கு ஆதி சேஷனும் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நடக்கிறது. இவருக்கு திருமஞ்சனம் செய்து, பாயாசம் படைத்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை.

தல வரலாறு : மகாபலி சக்ரவர்த்தி என்பவன் அசுர குலத்தை சேர்ந்தவன். இருந்தாலும் நல்லவன். தான தர்மங்களில் அவனை மிஞ்ச ஆள் கிடையாது. இதனால் அவனுக்கு மிகுந்த கர்வம் ஏற்பட்டது. நல்லவனுக்கு இந்த கர்வம் இருக்ககூடாது என்பதால், பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்கிறார். இதைக்கண்ட மகாபலி,””தாங்களோ குள்ளமானவர். உங்களது காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே என்றான். அவனது குல குருவான் சுக்கிராச்சாரியார், வந்திருப்பது பகவான் விஷ்ணு என்பதை அறிந்து அவன் செய்ய போகும் தானத்தை தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இதுவரை செய்த தானம் எல்லாம் வீணாகிவிடும் என்பதால் மூன்றடி நிலம் கொடுக்க சம்மதித்தான்.

பெருமான் தனது திருவடியால் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை பாதாளத்திலும் வைத்து மற்றொரு அடி நிலம் எங்கே? என கேட்டார். அகந்தை படித்த மகாபலி தலை குனிந்து, இதோ என் தலை. இந்த இடத்தை தவிர வேறு ஏதுமில்லை, என்றான். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி பாதாளத்திற்கு அனுப்பினார்.. பாதாளம் சென்ற மகாபலிக்கு, பெருமாளின் பாதம் பட்டு பாதாள லோகம் வந்து விட்டோமே, தன்னால் அவரது உலகளந்த காட்சியை காண முடியவில்லையே என வருந்தினான்.

எனவே பாதாள லோகத்திலேயே உலகளந்த கோலம் காட்ட வேண்டி பெருமாளை குறித்து, மகாபலி கடும் தவம் இருந்தான். இந்த தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், அவனுக்கு இத்தலத்தில் உலகளந்த திருக்கோலத்தை காட்டினார். இவனோ பாதாள உலகத்தில் இருந்தான். எனவே அவனால் பெருமாளின் திருக்கோலத்தை முழுமையாக தரிசிக்க முடியவில்லை. எனவே மீண்டும் பெருமாளிடம் மன்றாடினான். பெருமாள் இவனுக்கு காட்சி தருவதற்காக இதே இடத்தில் ஆதிசேஷனாக காட்சியளித்தார். இந்த இடமே தற்போது திருஊரகம் என அழைக்கப்படுகிறது. இது உலகளந்த பெருமாளின் மூலஸ்தானத்தின் இடது பக்கத்தில் உள்ளது.

கோவில் அமைப்பு :  இத்திருக்கோவில் தற்போது உள்ள பூமியின் மேல் மட்டத்திலிருந்து  சுமார் 6 அடி தாழ்ந்து அமைந்துள்ளது.  அதாவது இத்திருக்கோயிலின் நுழைவு வாயிலை  அடைந்தவுடன் சுமார் 8 படிகள் கீழ் இறங்கிச் சென்ற பின்பே திருக்கோயிலை அடையலாம்.  மூலவர் சுவாமி உலகளந்தபெருமாள் மேற்குப்பார்த்தவண்ணம், நின்ற திருக்கோலத்தில்  திரிவிக்கிரம (வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது) வடிவத்தில்  பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.

காலை 6.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு  8.00 மணிவரை நடைதிறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்

தங்கும் வசதி :  உண்டு

பேருந்து   வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×