60. திருவல்லிக்கேணி (சென்னை)





	


	



























	




 




	








 




12:01:15 AM         Sunday, May 03, 2026

60. திருவல்லிக்கேணி (சென்னை)

60. திருவல்லிக்கேணி (சென்னை)
60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை) 60. திருவல்லிக்கேணி (சென்னை)
Product Code: 60. திருவல்லிக்கேணி (சென்னை)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                          பார்த்தசாரதி ,  திருவல்லிக்கேணி

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில்  சென்னையின் கடல் ஓரத்தில் அருள் செழிக்க நம் பெருமாள் இருக்கும் தலம்.

மூலவர்    :    வேங்கடகிருஷ்ணன், ருக்மிணி (பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், ப்ரத்யும்னன்) 

உற்சவர்    :    பார்த்தசாரதி

மூலவர்    :    ரங்கநாதன்

தாயார்    :    வேதவல்லி (தனிக்கோயில்)
 
மூலவர்    :    சீதா, லட்சுமணன், பரதசத்ருக்ன, ஹனுமாருடன் ஸ்ரீராமர் (நின்ற கோலம்)

மூலவர்    :    வரதராஜன், தேவப்பெருமாள் (கருடன் மீது அமர்ந்த திருக்கோலம்)

மூலவர்    :    தெள்ளிய  சிங்கர் (நரசிம்மர்) (வீற்றிருந்த திருக்கோலம்) வடமேற்கு பக்கம் தனி ஆண்டாள்சந்நிதியும் உண்டு

தீர்த்தம்    :    கைரவினி (அல்லிக்கேணி) (இந்த்ரை ஸோம, மீன, அக்னி, விஷணு சூழப்பட்டது)

விமானம்    :    அநந்த விமானம், ப்ரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவிக விமானம்.

மங்களாசாசனம்    :    திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள், பேயாழ்வார் - 1 பாசுரம், திருமழிசையாழ்வார் - 1பாசுரம்

தலச் சிறப்பகள் : இக்கோவிலில் எங்கும் இல்லாத சிறப்பாக மூலவர் மீசையுடன்  காணப்படுகிறார்.   திரண்ட புஜங்களோடு வலது கையில் சங்கு ஏந்தி, இடது கை பாதத்தைச் சுட்டிக்காட்ட, உயரமாய்  அகலமாய், கம்பீரனாய் பெரும் விழிகளோடு முகத்தில் வெள்ளை மீசையோடு இடுப்பில்  கத்தியோடு சலக்கிராம மாலையணிந்து ஆதிசேஷன் தலையில் நின்றவாறு காட்சியளிக்கிறார்.  வேங்கடவர் சுட்டிக் காட்டிய கிருஷ்ணர் என்பதால், வேங்கடகிருஷ்ணன் என்று பெயர். 

இக்கோவிலின் மூலவரான பார்த்தசாரதி பெருமாளின் சிலை 9 அடி உயரம் கொண்டது. இங்கு பார்த்தசாரதி பெருமாள் தன் மனைவி மற்றும் சகோதரர் என குடும்பம் சகிதமாக இருக்கிறார். பொதுவாக எல்லா பெருமாள் விக்கிரகங்களும் கையில் ஏதேனும் ஒரு ஆயுதம் ஏந்தியிருப்பதை காணலாம். ஆனால் இத்தல கடவுளான பார்த்தசாரதி பெருமாள் தனது கையில் ஆயுதம் ஏதும் இன்றி இருப்பது கூடுதல் சிறப்பு.

தல வரலாறு : சுமதி என்கின்ற மன்னன் பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான்.  பாரதப்  போரில் பஞ்சபாண்டவர்களை வழிநடத்திய ஸ்ரீ கிருஷ்ணர் மீது அவனுக்கு மிகுந்த பிரியம் உண்டு.   ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனம் வேண்டும் என்று இறைஞ்சிக் பெருமாளை கேட்டுக் கொண்டான்.  ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த இடத்திற்கு போக வேண்டுமானால் பல மலைகள், பல காடுகள் தாண்டி செல்ல  நேரிடும் என்பதை நினைத்து வருந்தினான்.

சுமதி மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள் பிருந்தாரண்யம் (திருவல்லிக்கேணி) என்ற  துளசிக்காடு (பிருந்தா - துளசி, ஆரண்யம் - காடு) இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வேடத்தில் தான் காட்சி  அளிப்பதாக கூறினார். சுமதி மன்னன் இங்கு வந்து பாரதப் போரில் அர்ஜுனனுக்கு சாரதியாய்  இருந்த ஸ்ரீ கிருஷ்ணனை கண் குளிர தரிசனம் செய்தான்.  பின் கோவிலும் எழுப்பியதாக வரலாறு.

ஆதிகாலத்தில், மூன்றுமுறை இந்த பார்த்தசாரதி ஸ்வாமியை உலோகத்தில் வார்த்தும், முகம்  மட்டும் பருக்கள் நிறைந்து காணப்பட்டது.  என்ன இப்படி ஆகிவிட்டதே என்று சிற்பி கவலைப்பட,  ‘பாரதப் போரில் என் முகம் அம்பால் காயப்பட்டது.  அதை நினைவுறுத்தும் வண்ணமாகவே இந்த  இடத்தில் நான் இப்படி எழுந்தருளியிருக்கிறேன்’ என்று சிற்பிக்கு, வேங்கடகிருஷ்ணன் கனவில்  ஆறுதல் சொன்னதாக செவிவழிச் செய்தி உண்டு.

ஒயில் நிறைந்த இந்த பார்த்தசாரதி சிலையில் மற்ற அங்கங்கள் மிக சுத்தமாக இருக்க, முகத்தில்  மட்டும் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.  அது மட்டுமல்லாது இடதுகால் பெருவிரலுக்கு அடுத்த  விரலில் நகம் இருக்காது.  பாரதப் போரில் பீஷ்மர் சரணாகதிக்காக அம்புவிட, அந்த அம்பு  கிருஷ்ணரின் அந்த விரல் நகத்தைக் கீறியது என்றும் சொல்கிறார்கள்.  பார்த்தசாரதியின் இடுப்பில்  யசோதையால் கயிறு கட்டப்பட்ட தழும்பு இருக்கிறதென்றும் கூறுகிறார்கள்.

பார்த்தசாரதியுடன் ரங்கநாதர், ராமர், வரதர், நரசிம்மர் என 5 மூர்த்திகள் ஒருங்கே எழுந்தருளியுள்ளனர். பிரிகு, அத்திரி, மாரிஷி, மார்க்கண்டேயர், சுமதி, ஜாபலி மற்றும் சப்தரோமர் ஆகிய ஏழு முனிவர்களும் (சப்த ரிஷிகள்) தவம் செய்துள்ளமையால் இத்தலம் “ப்ரிந்தரண்யஸ்தலம்” என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்கு “பஞ்ச வீரத்தலம்” என்ற பெயரும் உண்டு. எம்பெருமான் ஸ்ரீ பார்த்தசாரதியாக தோன்றி தொன்டைமானுக்கு காட்சியளித்தார்.

இக்கோவிலானது வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் வேங்கடவன், தொண்டைமானுக்கு பார்த்தசாரதியாக சேவை அளித்த தலமும் ஆகும். கோவிலில் ஐந்து சந்நிதிகள் இருக்கின்றன. மூலசந்நிதியில் உள்ள மூலவரின் நாமம் வேங்கட கிருஷ்ணன் ஆகும். இவருடைய ஒரு புறத்தில் ருக்மணி தாயாரும் பலராமரும் மறுபுறத்தில் சாத்தகி, பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக மூலவர் சேவை தருகின்றார். தன்னுடைய மனைவி, தமையன், இளையோன், புதல்வன், பேரன் என்று முத்தலைமுறையினருடன் சேவை தருவது தனிச் சிறப்புடையது ஆகும்.

பாரதப் போருக்கு முன்பாக கவுரவரின் தலை மகனான துரியோதனனுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது இல்லை என்ற வாக்கிற்கு ஏற்ப இவரது வலது கரத்தில் சக்கராயுதம் காணப்படவில்லை. ஆனால் இடது கையில் இருக்கும் சங்கானது வலது கரத்தில் இருக்கிறது.  ஆனால் முகத்தில் விழுப்புண்கள் உள்ளன. இவை பாரதப் போரின் போது ஏற்பட்டவை ஆகும். இடைப் பகுதியில் வாள் ஒன்று தொங்குகிறது. இன்னொரு கையில் சாட்டை காணப்படுகின்றது. இவ்வாறாக தேரின் முன்பாக நின்ற கோலத்தில் தோன்றுகின்றார்.

இரண்டாம் சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு மூலவர் அரங்கநாதன் கிடந்த கோலத்தில் சேவை தருகிறார். இவருக்கு மனநாதன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. தாயாருக்கு வேதவல்லி என்று பெயர். திருவல்லிக்கேணியில் முன்பொரு காலத்தில் துளசிச்செடிகள் மண்டிக் கிடந்தனவாம். இப்பகுதி அடர்ந்த காட்டுப்பகுதியாகவும் இருந்திருக்கிறது. இங்கு ஒரு வந்தன மரத்தின் அடியில் தாயார் குழந்தை வடிவெடுத்துத் தோன்றியதாகவும் அக்குழந்தையை முனிவர் எடுத்துச் சென்று வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்ததாகவும் நாராயணன் ராஜ குமாரனாஉருவெடுத்து வந்து தாயார் வேதவல்லியை மணம் புரிந்து தலத்திலேயே தங்கி விட்டதாகவும் கூறப்படுகின்றது.

மூன்றாவது சந்நிதியில் தனது வாகனமாகிய கருடன் மீது அமர்ந்தபடி வரதராஜ பெருமாள் சேவை தருகின்றார்.இவரது மறுபெயர் தேவப்பெருமாள் ஆகும். கிழக்கு நோக்கிய சந்நிதியாகும். நான்காவது சந்நிதியில் மேற்குப்புறமாக நோக்கியபடி அழகிய சிங்கரான நரசிம்மர் வீற்றிருக்கும் கோலத்தில் மூலவர் சேவை தருகிறார். நரசிம்மரின் சந்நிதிக்கு அடுத்த படியாக ஆண்டாள் சந்நிதி உள்ளது. ஐந்தாவது சந்நிதியில் தெற்கு நோக்கியபடி சக்ரவர்த்தி திருமகனாக ராமர் நின்ற கோலத்தில் சேவை அளிக்கின்றார். மூலவருடன் சீதாப் பிராட்டியார், பரதன், லட்சுமன், சத்ருக்கன், அனுமன் ஆகியோரும் சேவை தருகின்றனர். இந்த ஐந்து சந்நிதிகளிலும் உள்ள மூலவர்கள் ஐந்து பேரும் மங்களாசாசனம் பெற்றிருப்பதால் தலத்திற்கு பஞ்சமூர்த்திதலம் என்ற பெயரும் உண்டானது.

திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்களாலும் பேயாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். கோவிலில் உள்ள அல்லிக்கேணி புஷ்கரணி தீர்த்தத்தில் இந்திர, கோம, மீன அக்னி, விஷ்ணு தீர்த்தங்கள் ஐந்தும் சூழ்ந்திருப்பதாக கூறப்படுவது உண்டு. கோவில் குளத்தில் அல்லி மலர்கள் அதிகமாய் இருந்தபடியால் அல்லிக்கேணி என்ற பெயர் பெற்றது. கோவிலில் முன் மண்டபங்கள் முதலில் உள்ளன. அடுத்து மகா மரியாதை மண்டப வாயில் உள்ளது. இதன் மீது ராஜகோபுரம் அமைந்துள்ளது.

ஐந்து நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட கோபுரம் சில வருடங்களுக்கு முன்பாக புதுப்பிக்கப்பட்டது. கோவிலில் உள்ள ஐந்து விமானங்கள் ஆனந்த விமானம், பிரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவிக விமானம் ஆகியவை ஆகும்.மகாபாரத யுத்தத்தின் போது பஞ்ச பாண்டவர்களில் “பார்த்தனாகிய” “அர்ஜுனனுக்கு” அவனின் ரதத்தை செலுத்தும் “சாரதியாக” பகவான் கண்ணன் சேவை புரிந்தார். அந்த கண்ணனே இங்கு கோவில் கொண்டுள்ளதால் இந்த இறைவனுக்கு “பார்த்தசாரதி” பெருமாள் என பெயர் ஏற்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக இது இருந்தாலும் இக்கோவிலை 7-ம் நூற்றாண்டில் முதன் முதலாக நன்கு வடிவமைத்து கட்டியவர்கள் “பல்லவ” மன்னர்கள் ஆவர். பின்னாளில் “சோழர்களும், விஜயநகர பேரரசர்களும் இக்கோவிலை மேம்படுத்தி கட்டியிருக்கின்றனர்.

ஆழ்வார்களில் “திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் ஆகும். இது 108 திவ்ய தேசங்களில் முக்கியமான கோவில்களில் ஒன்றானதாகும். புகழ் பெற்ற மனிதர்களான சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் போன்றோர் அவர்களின் காலத்தில் இக்கோவிலில் வந்து வழிபட்டுள்ளனர்.

அத்திரிமுனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் அழகிய சிங்கராகக் காட்சியளிக்கிறார். இதனைத் தெள்ளிய சிங்கர் எனச் சாற்றப்படுகிறது. இவர் நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். துளசிங்கர் என மருவிற்று. பிருகு முனிவருக்காக ஸ்ரீரங்கநாதர், மன்னாதன் புஜங்கசயனத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தாயார் வேதவல்லி. மதுமான் மகரிஷிக்காக ஸ்ரீராமர் சீதாப்பிராட்டி, லட்சுமணன், பரதன், சத்துருக்கன், ஆஞ்சநேயர் ஆகியோருடன் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். சப்தரோமர் ரிஷிக்காக வரதராஜர், தேவப்பெருமாள் கருட வாகனத்தின் மீது கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.

கோவிலில் உள்ள நரசிம்மர் சந்நிதியில் வழிபட்டு அந்த நரசிம்மருக்கு உரிய சங்கு தீர்த்தத்தை நமது முகத்தில் தெளித்து, அத்தீர்த்ததை அருந்தினால் நம்மை பீடித்திருக்கும் துஷ்ட ஆவிகள், செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், தேவையற்ற பயங்கள் போன்ற பாதிப்புகள் நீங்கும். பார்த்தசாரதி பெருமாளை வணங்குவதால் ஒருவரின் ஆளுமை திறனும் மேம்படும். கல்வியில் சிறப்பு, நல்ல இல்வாழ்க்கை துணை அமைய இக்கோவிலில் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு சர்க்கரை பொங்கலை நிவேதனமாக அளித்து வழிபடுகின்றனர்.

வேங்கடகிருஷ்ணனுக்கு அருகே அதே கம்பீரத்தோடு, கூர்மையான நாசியும் புன்சிரிப்பு தவழும் உதடும் வலது கையில் குமுத மலரும் கொண்டு ருக்மணி தேவி இருக்கிறார். ருக்மணி தேவியின் வலப்பக்கத்தில் உழு கலப்பையோடு பலராமர் காட்சி தருகிறார். வேங்கடகிருஷ்ணரின் இடப்பக்கம் தம்பி சாத்யகியும், அவருக்கு அருகே தெற்கு நோக்கி மகன் பிரத்யும்னனும், பேரன் அநிருத்தனும் காட்சி தருகிறார்கள். குடும்பத்துடன் இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினால் குடும்ப ஒற்றுமை பெருகும்.

பெருமாளுக்கு நைவேத்தியத்தில் கடலை எண்ணை, மிளகாய் சேர்ப்பதில்லை. இதற்கு பதிலாக நெய் மற்றும் மிளகு சேர்க்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, பகல் பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் மீசை இல்லாமல் தரிசிக்கலாம். உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக்கிழமைகளில் விசேஷ அபிஷேகம் நடக்கும் போது மட்டும் மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர்.

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்ட்ரல், திருவல்லிக்கேணி

தங்கும் வசதி :  உண்டு

பேருந்து   வசதி    :    உண்டு

தங்கும் வசதி    :    உண்டு

உணவு வசதி     :    உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×