திருநெய்த்தானம்





	


	



























	




 




	








 




8:47:02 AM         Saturday, May 16, 2026

திருநெய்த்தானம்

திருநெய்த்தானம்
திருநெய்த்தானம் திருநெய்த்தானம் திருநெய்த்தானம் திருநெய்த்தானம் திருநெய்த்தானம் திருநெய்த்தானம் திருநெய்த்தானம் திருநெய்த்தானம் திருநெய்த்தானம் திருநெய்த்தானம் திருநெய்த்தானம் திருநெய்த்தானம் திருநெய்த்தானம் திருநெய்த்தானம்
Product Code: திருநெய்த்தானம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                     நெய்யாடியப்பர் கோவில், திருநெய்த்தானம்

திருத்தல இருப்பிடம்  : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு திருக்காட்டுப்பள்ளி சாலையில் திருவையாற்றில் இருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.

சுவாமி  : நெய்யாடியப்பர்

அம்பாள்  : இளமங்கையம்மை, பாலாம்பிகை

தல மரம்  : வில்வம்

தீர்த்தம்  :  காவிரி

பதிகம்  :  திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

சிறப்புக்கள் : தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 52வது தலமாகும். சரஸ்வதி, காமதேனு, கௌதம முனிவர் வழிபட்ட தலம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனுக்கு நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு வெந்நீர் அபிஷேகம் நடப்பது தலத்தின் சிறப்பம்சமாகும். திருநெய்த்தானம் திருவையாற்று சப்தஸ்தான தலங்களில் ஏழாவது தலம். திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய தலம். திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. 

கோவில் அமைப்பு : ஆலயம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் இருக்கிறது. இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தியைத் தாண்டி உள் வாயில் வழியாகச் சென்றால் மூலவர் நெய்யாடியப்பர் சந்நிதி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள் பிரகாரம் சுற்றி வலம் வரும்போது சூரியன், ஆதிவிநாயகர், சனி பகவான், சரஸ்வதி, மகாலட்சுமி, காலபைரவர், சந்திரன், ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். தட்சினாமூர்த்தி இங்கு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையில் மூலவர் நெய்யாடியப்பர் சற்றே ஒல்லியான மற்றும் உயரமான லிங்கத் திருமேனியுடன் நமக்குக் காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் பாலாம்பிகை நின்ற கோலத்தில் நமக்கு அருட்காட்சி தருகிறாள். காமதேனு, சரஸ்வதி மற்றும் கெளதம முனிவர் இங்கு சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார். மூலவர் கருவறை பிரகாரத்தில் மூலவருக்கு நேர் பின்புறம் மேற்குச் சுற்றில் இவர் சந்நிதி உள்ளது. முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் மயிலுடன் காட்சி தருகிறார். இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர்.

தினந்தோறும் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம்   : திருவையாறு, தஞ்சாவூர்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×