ஸ்ரீ மூர்த்தி பெருமாள் கோயில், சாளக்கிராமம்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் நேபாள நாட்டில், மஸ்டாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது . முக்திநாத் என்பது காத்மாண்டுவிலிருந்து பனி மூடிய இமயமலையில் 140 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு புனித யாத்திரை ஆகும், இது சாலக்ரமா கற்களால் புகழ்பெற்ற கண்டகி ஆற்றின் அருகே அமைந்துள்ளது. இந்த திவ்யதேசம் அமைந்துள்ள இடத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன.
காட்மாண்டுவிலிருந்து 170 மைல் தொலைவில் காணப்படும் முக்திநாத், கண்டகி ஆற்றின் கரையில் காணப்படும் சலகிரம க்ஷேத்ரம் என்று கூறப்படுகிறது. முக்திநாத் "முக்தி நாராயண க்ஷேத்ரம்" என்று அழைக்கப்படுகிறார். ஆனால், காட்மாண்டுவிலிருந்து சுமார் 65 மைல் தொலைவில், “தாமோதரா குண்ட்” என்ற பெயரில் ஒரு இடம் உள்ளது, இது கண்டகி ஆற்றின் கரையில் உள்ளது, இது சலக்ராம ஸ்தலம் என்று கூறப்படுகிறது.
மூலவர் : மூர்த்தி பெருமாள் (நிந்திரா திருக்கோலம்)
தாயார் : ஸ்ரீ தேவி நாச்சியார்
மங்களசாசனம் : பெரியல்வார் - 2 பாசுரங்கள், திருமங்கை ஆல்வார் - 10 பாசுரங்கள்
புஷ்கரணி : சக்கர தீர்த்தம்
இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள். நாங்குநேரி, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும்.
திருத்தல சிறப்புகள் : இந்த ஸ்தலம் சுயம்பூ ஸ்தலங்களில் ஒன்றாகும். சலகிராம் ஜீவனுடன் இருப்பதாகவும், விலைமதிப்பற்ற கற்களில் ஒன்றாக கருதப்படுவதாகவும் கூறப்படுகிறது. எப்படி, சிவன் கோவிலில் கொடுக்கப்பட்டுள்ள விபூதிக்கு எந்த தோஷமும் இல்லை, இந்த சலகிராமத்திற்கும் அதே தன்மை உண்டு.
தல புராணம் : சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர். இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
பலவித வடிவங்களில் உள்ள சாளக்கிராமங்கள் அவற்றில் பதிந்துள்ள உருவம், அமைப்பு இவற்றிற்கேற்ப திருமாலின் பல அவதாரங்களாக பெயரிடப்படுகின்றன. இவ்வாறாக கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், சிறீதரம், இரிசிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்சனம், பிரத்யும்னம், நரசிம்மம், சனார்த்தனம், அரி, கிருஷ்ணம், .சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராகமூர்த்தி, மத்ஸ்யமூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.
பண்டைய இந்தியாவில் சிறந்து விளங்கிய அவந்தி தேசம் எனப்பட்ட இன்றைய நேபாள பகுதியின் இமயமலை அடிவாரத்தில், ‘ஹரி பர்வதம்’ என்ற மலை உள்ளது. அங்கே சங்கர தீர்த்தம் என்னும் பகுதியில் பாயும், கண்டகி நதியில் சாளக்கிராம கற்கள் உற்பத்தியாகின்றன. சாளக்கிராமம், கண்டகி நதியில் தாமாக தோன்றுகின்ற ஒருவகை அழகிய தெய்வீக அம்சம் நிறைந்த கற்களாகும். அவை பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன. மகாவிஷ்ணுவே தங்க மயமான ஒளி பொருந்திய ‘வஜ்ரகிரீடம்’ என்ற புழுவாக வடிவம் எடுத்து, சாளக்கிராம கற்களை குடைந்து, அதன் மையத்திற்குச் சென்று, ஓம்கார சப்தம் எழுப்பியபடி, தனது முகத்தினால் பல்வேறு அடையாளங்களை உண்டாக்குவதாகச் சொல்லப்படுகிறது.
அவ்வாறு தோன்றிய சாளக்கிராம கற்களில், நாராயணனின் ஜீவ ஸ்வரூபம் ஐக்கியமடைந்து இருப்பதன் காரணமாக மகாவிஷ்ணுவின் அவதார வடிவமாகவே அவை பக்தர்களால் போற்றப்படுகின்றன. மேலும் சாளக்கிராம கற்களில் தோன்றக்கூடிய அடையாளங்கள் மற்றும் வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பெயர்களும், பூஜை முறைகளும் வித்தியாசப்படுகின்றன. சாளக்கிராமம் என்பது நெல்லிக்கனியின் அளவில் இருந்து ஆறு அடிக்கும் மேலான உயரம் கொண்டதாக இருக்கும்.
தல வரலாறு : வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பிரதானமாக கருதப்படும் 108 புராண திவ்ய தேச ஆலயங்கள் சிலவற்றில் சாளக்கிராம கற்கள் கொண்டே மூல மூர்த்தி சிலை அமைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகள் உச்சந்தலை தொடங்கி, நாபி வரையில் நீண்ட துளை உடையதாக இருக்கும். உட்புறத்தில் சங்கு, சக்கரம், தாமரை ஆகிய விஷ்ணுவின் சின்னங்களும் இருக்கும்.
அப்படிப்பட்ட சாளக்கிராம சிலைகள் மூலவராக இருக்கும் ஆலயங்கள், பக்தர்களுக்கு விரைவில் பலன் தருவதாக நம்பப்படுகிறது. நேபாளத்தில் உள்ள முக்திநாத் என்னும் சாளக்கிராம தலம், தாமே சுயம்புவாக தோன்றியதால் ‘ஸ்வயம் வியக்தம்’ என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. அங்கு இறைவன் நிரந்தரமான நிலையில், நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்று வைணவ பெரியோர்களால் குறிப்பிடப்படுகிறது. மேலும், பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராம மாலைகளும் அணிவிக்கப்படுவது வழக்கம். கோவில்களில் இருக்கும் சாளக்கிராம மூர்த்திக்கு பூஜை முடிந்த பிறகு, மூலவர் மற்றும் இதர தெய்வங்களுக்கு அன்றாட பூஜைகள் நடப்பது வழக்கமாகும். மேலும், கருட புராணமானது ‘மரண காலத்தில் சாளக்கிராமத்தை மனதால் நினைத்து வணங்குபவன் பாவங்களில் இருந்து விடுபட்டு வைகுண்டம் அடைகிறான்’ என்றும், ‘இறக்கும் தருணத்தில் சாளக்கிராம தீர்த்தத்தை அருந்திய பின்னர் இறப்பவர்கள் ‘வைவஸ்வதம்’ என்ற எமதர்மராஜனின் நகரில், அவரால் மரியாதை செய்யப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.
சாளக்கிராமம் பற்றிய தனித்தன்மைகளை அறிந்தவர்களிடம், அவற்றின் வண்ணம், ரேகைகள், குறிகள் ஆகியவை பற்றி நன்றாக ஆராய்ந்த பிறகு, அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது என்பதே பல நன்மைகளை தரக்கூடியதாகும். சாளக்கிராமம் பூஜிக்கப்படும் இடத்தில் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வதாகவும், அங்கே சகல செல்வங்களும் விருத்தியாவதாகவும் ஐதீகம்.
பொதுவாக விக்கிரகங்கள் சேதம் அடைந்து விட்டால், அதை நீர் நிலைகளில் சேர்த்து விடுவார்கள். அதற்கு பதிலாக வேறு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுவது நியதி. ஆனால், சாளக் கிராம கற்கள் பின்னப்பட்டிருந்தாலோ, அல்லது விரிசல்கள் இருந்தாலோ அதை செப்பு, வெள்ளி கம்பிகள் வைத்து கட்டி, பூஜைக்கு பயன்படுத்தலாம். அபிஷேகமும், ஆராதனைகளும் செய்யலாம். வீட்டில் ஆண்களும், பெண்களும் தினமும் சாளக்கிராமத்தை பூஜிக்க வேண்டும்.
முழுவதும் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியவை, நரசிம்ம அம்சம் உள்ளவையாக கருதப்படுகிறது. மோட்ச பிராப்தியை தரக்கூடியதாக இருப்பதால், இவற்றை பெரும்பாலும் வீடுகளில் வைத்து வழிபடுவது இல்லை. சக்கர வடிவத்தில், கருப்பு வண்ணத்தில் இருக்கும் சாளக்கிராம கற்கள், ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை தரக்கூடியதாகும். முன் பக்கத்தில் பாம்பு போன்ற தோற்றத்துடன், தங்க நிற ரேகைகள் அமைந்த கற்கள், வாமதேவ அம்சமாகும். இவற்றை வழிபட்டால் பல நன்மைகள் வந்து சேரும்.
இடப்புறமாக பச்சை நிறம் பொருந்திய கற்கள், சகல பாவங்களையும் போக்கக் கூடியதாக கருதப்படுகிறது. வட்ட வடிவத்தில் இருக்கும் சாளக்கிராம கற்களை, வீடுகளில் வைத்து வழிபடுபவர்களுக்கு செல்வ வளம் குறையாமல் இருக்கும். குடை போன்ற வடிவம் உடைய கல்லை வைத்து வணங்கி வருபவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும். சக்கர அமைப்பு அல்லது பாம்பு தலை போன்ற அடையாளங்களுடன் உள்ள சாளக்கிராம கற்களானது, பல்வேறு நிறங்களில் இருந்தால் அது ‘லட்சுமி காந்தம்’ எனப்படும். அத்தகைய கற்களை வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும். நீல நிறமாக உள்ளவை ஸ்ரீகிருஷ்ண அம்சம் பொருந்தியவையாக இருப்பதால், அதை வணங்குபவர்கள் செல்வமும், சுகமும் அடைவார்கள். பச்சை நிறத்தில் இருக்கும் சாளக் கிராமமானது ஸ்ரீநாராயண அம்சத்துடன் இருப்பதோடு, வழிபடுவோருக்கு பலத்தை யும், தைரியத்தையும் வழங்கக்கூடியது. வாசு தேவ அம்சம் கொண்டதாக இருக்கும் கற்கள் வெண்மையாக இருப்பதோடு, ஞானம், பக்தி மற்றும் மோட்சம் ஆகிய பேறுகளை தருவதாக ஐதீகம். கருப்பு நிறத்தில் உள்ளவை விஷ்ணுவின் அம்சமாக இருந்து பெயர், புகழ், பெருமை ஆகியவற்றை அளிக்கும். உண்மையான சாளக்கிராம கல்லுடன் பால் அல்லது அரிசியை குறிப்பிட்ட நேரம் வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியிருக்கும்.
அருகில் உள்ள விமான நிலையம் : காத்மாண்டு
அருகிலுள்ள ரயில் நிலையம் : ஜனக்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு