திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்)





	


	



























	




 




	








 




8:22:29 AM         Friday, May 01, 2026

திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்)

திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்)
திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்) திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்) திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்) திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்) திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்) திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்) திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்) திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்) திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்) திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்) திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்) திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்) திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்) திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்) திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்)
Product Code: திருமுஷ்ணம் (ஸ்ரீமுஷ்ணம்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
 
                                                                            பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம்
 
திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அணைக்கரை மீன்சுருட்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியே வடலூர் செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் சோழதரம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து சுமார் 12 கி,மீ துரத்தில் விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
 
மூலவர் : ஸ்ரீ பூவராகன்
 
உற்சவர் : ஸ்ரீயக்ஞவராகன்
 
தாயார் : அம்புஜவல்லி
 
தல விருட்சம் : அரசமரம்
 
தீர்த்தம் : நித்யபுஷ்கரணி
 
இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள். நாங்குநேரி, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும். 
 
திருத்தல சிறப்புகள் : திருப்பதி - திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்கும் முன்பு, அவருக்குக் கோவில் கொண்டு எழுந்தருள இடமளித்த சந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் அருகில் தனிக் கோவிலில் நின்றருள் புரியும் ஆதிவராகப் பெருமாளைச் சேவிக்க வேண்டுமென்று சொல்வார்கள். திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி தருகிறார்.
 
திருமலை, காஞ்சி, திருக்கோவிலூர், ஒப்பிலியப்பன் கோவில் போன்ற தலங்களில் நெடுமாலாகக் காட்சி தருபவர் இங்கே சிறிய மூர்த்தியாக அருள்கிறார். மேற்கு நோக்கியபடி வராகரின் திருமேனி இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. எனவே தினமும் திருமஞ்சனம்  செய்யப்படுகிறது. பிரம்மன் யாகத்தில் இருந்து தோன்றியதால் ‘யக்ஞவராகர்’ என்ற பெயருடன் உற்சவர் திகழ்கிறார். இவருடன் திரு மகள், நிலமகள் ஆகியோர் உடனிருந்து பேரருள் புரிகின்றனர்.
 
கோயில் அமைப்பு : நெடிந்துயர்ந்து மேற்கு நோக்கிய ஏழு நிலைகளுடன் ஒன்பது கலசங்களுடன் வண்ணமயமான ராஜகோபுரம் இந்த ஆலயத்தை அலங்கரிக்கிறது. அதனைக் கடந்து உள்ளே சென்றால் சிற்ப அழகு மிளிரும் கருங்கல் தூண்களுடன் பெரிய ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அங்குள்ள கருடாழ்வாரை தரிசித்து விட்டு உள்ளே சென்றால், மூலவரின் கருவறையை தரிசனம் செய்யலாம். கருவறையின் முன்பாக ஜெய, விஜயர்கள் துவாரபாலகர்களாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கருவறையின் உள்ளே பூவராக மூர்த்தி வீற்றிருந்து சேவை சாதிக்கிறார். இவர் வீற்றிருக்கும் விமானம், ‘பாவன விமானம்’ என்று அழைக்கப்படுகிறது.
 
பெருமாள் சன்னிதிக்கு வடக்குச் சுற்றில், பாவை பாடிய ஆண்டாள் சன்னிதியும், பரமபத வாசல் கோபுரம் அருகே மகேஸ்வரி, சாமுண்டி வராகி போன்ற சப்த மாதர்கள் கோவிலும் உள்ளன. இவர்களை வேண்டிக் கொண்டு அருகே இருக்கும் வேப்ப மரத்தடியில், குழந்தை அம்மன் சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவோரும் உண்டு. உடையவர் சன்னிதி, சேனை முதலியார் சன்னிதி, வேதாந்த தேசிகர் சன்னிதி ஆகியவை திருச் சுற்றில் உள்ளன. தெற்குப் பக்கத்தில் தனிச் சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக் கிறார். அருகே உள்ள வளையமாதேவி என்ற ஊரில் கார்த்திகாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தலப் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டவர்தான் அம்புஜவல்லித் தாயார். இத்தலத்து சுவாமியையும், தாயாரையும் வணங்கினால், திருமண வரம், குழந்தைப்பேறு கிடைக்கும். பகை அச்சம் விலகும். காரியத்தடைகள் நீங்கும் என்பது கண்கூடு. இந்த ஆலயத்தின் மகிமை பற்றி கந்தபுராணம், பிரமாண்ட புராணம், விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
 
 
தல வரலாறு : மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என்பது புராண வரலாறு. தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்குகிறது. அங்கே பிரகன் நாயகி சமேத நித்தீஸ்வரர் வீற்றிருக்கும், பழங்கால சிவாலயம் ஒன்றும் இருக்கிறது. பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ்கரணியில் நீராடி, அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகரை உள்ளன்புடன் உருகி வழிபட வேண்டும். பின்னர் ஆலயத்தில் சந்தான கிருஷ்ண மூர்த்தத்தை, கைகளில் வாங்கி மடியில் வைத்து வணங்கினால், மழலை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
 
திரு என்ற அடைமொழி இருந்தும் ஆழ்வார்களால் பாடப்பெறாத தலம் இது. பெரிய சாது சந்யாசிகளுடன் தொடர்புடையது இத்தலம். காஞ்சி காமகோடி பீடத்தின் 25-ஆவது சங்கராசார்யார் இந்த ஊரில் அவதரித்தார். அஹோபில மடத்தின் மூன்றாவது பட்டத்து அழகிய சிங்கர் இவ்வூரில் சமாதி அடைந்தார். மத்வாசார்யார் தண்ட தீர்த்தத்தை இவ்வூரில் தோற்றுவித்தார். இங்கு நடக்கும் விழாவுக்கு கர்நாடகத்தில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். திருமுட்டத்திலும் விருத்தாசலம் சிவன் கோவிலிலும்  வாசல் அருகில் உள்ள சிறிய நாட்டிய சிலைகள் சிதம்பரம் 108 நடன கரணங்களை நினைவு படுத்துவதோடு இரண்டும் ஒரே சிற்பி கட்டியவை என்பதையும் காட்டி நிற்கிறது. நாயக்கர்,  புலிகடிமால் மன்னர்களின் பேராதரவு பெற்ற இக்கோயில் அவர்களுடைய கால கட்டிடக் கலையை காட்டுகின்றன. எல்லா நாயக்கர் கோவில்களிலும் உள்ளதைப் போலவே ஆயிரம் கால் மண்டபம் 16 கால் மண்டபம் ஆகியனவும் உண்டு. வேப்பமரத்தடியில் அமர்ந்திருக்கும் சப்த மாதர் சந்நிதியும், அரச மரமும் குழந்தைப் பேறு இல்லாதோருக்கு வரமளிக்கும் இடமாகக் காட்சி தருகிறது. கோரைக் கிழங்கால் செய்யப்பட்ட லட்டு இந்தக் கோவிலின் சிறப்புப் பிரசாதம்- ஒவ்வொரு கோவிலிலும் ஒரு விநோதமான, சிறப்பான பிரசாதம்-  இருப்பது இந்து மதக் கோவில்களின் சிறப்பு அம்சம்.
 
தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். 
 
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை & புதுச்சேரி  
 
அருகிலுள்ள ரயில் நிலையம் : காட்டுமன்னார் கோவில் 
 
பேருந்து வசதி  : உண்டு 
 
தங்கும் வசதி : உண்டு
 
உணவு வசதி : உண்டு
 
 
 
Mail this page Printable view
×
×
×
×
×
×
×