திருக்கண்ணமங்கை





	


	



























	




 




	








 




2:39:37 PM         Saturday, May 16, 2026

திருக்கண்ணமங்கை

திருக்கண்ணமங்கை
திருக்கண்ணமங்கை திருக்கண்ணமங்கை திருக்கண்ணமங்கை திருக்கண்ணமங்கை திருக்கண்ணமங்கை திருக்கண்ணமங்கை திருக்கண்ணமங்கை திருக்கண்ணமங்கை
Product Code: திருக்கண்ணமங்கை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                             திருக்கண்ணமங்கை - பக்தவத்சலப்பெருமாள் கோயில்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் கோயில் குடவாசல் வட்டத்தில் உள்ளது. திருவாரூர் இரயில் நிலையத்திலிருந்து 4 மைல் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 25 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

மூலவர் : பக்தவத்சலப் பெருமாள் (பக்தராவிப் பெருமாள் ) 

தாயார் : அபிஷேகவல்லி

தல விருட்சம் : மகிழம்

தீர்த்தங்கள் : தர்சண புஷ்கரணி தீர்த்தம்

மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்

தல சிறப்புகள் : இக்கோவில் 108 திவ்யதேசங்களில் இத்தலம் 16வது திவ்ய தேசமாகும். பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். பக்தவத்சலப் பெருமாள், கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். பிரமாண்டமான பேரழகு பொருந்திய திருவுருவம். சிவபெருமான் நான்கு உருவமெடுத்து இத்தலத்து நான்கு திக்குகளையும் காத்து வருவதாக ஐதீகமுண்டு. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளின் சீடரான திருகண்ணமங்கைஆண்டான் வாழ்ந்து வழிபாடு நடத்திய இடம். ஆதலால் அவருடைய பெயரால் திருகண்ணமங்கை என்று அழைக்கப்படுகிறது. பாற்கடலில் இருந்து தோன்றிய திருமகள் திருமாலை நோக்கி தவம் இருந்து அவரை கணவராக அடைந்த தலம். திருமகளாகிய லட்சுமி வழிபட்ட இடம் ஆதலால் லட்சுமி வனம் என்று அழைக்கப்படுகிறது. திருமால் பாற்கடலை விட்டு வெளியே இத்தலத்திற்கு வந்து திருமகளை மணம் புரிந்ததால் பெரும்புறக்கடல் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். திருமால், திருமகள் திருமணம் நடைபெற்ற இத்தலம் கிருஷ்ண மங்கள சேத்திரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

இறைவனின் திருமணத்தை காண தேவர்கள் தேனீக்கள் வடிவில் இத்தலத்திற்கு வந்தனர். நித்தமும் திருமணக்கோலத்தைக் காணும் பொருட்டு தேனீக்கள் வடிவில் இத்தலத்தில் இன்றும் தங்கியுள்ளனர் என்பது இத்தல சிறப்பாகும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கி வழிபட மோட்சம் கிட்டும். இத்தலத்தில் திருமால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு விரைந்து வருதால் இவர் பத்தராவி என்றுஅழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தை தரிசனம் செய்த உடனே சந்திரனின் சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலத்தீர்த்தம் தர்ஷன புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. 

தல வரலாறு : மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான். திருமணக் கோலம் தினசரி காண முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர்.

ஆதியில் பிருகு முனிவருக்கு மகளாக அவதரித்தாள் திருமகள். அதுவும் திருப்பாற்கடலில் தோன்றியதுபோல் இத்தலத்தின் திருக்குளத்தில் தோன்றிய பிராட்டியை பார்க்க எல்லா தேவர்களும் கூடினார்கள். ஸ்தோத்திரங்கள் கூறி தொழுதார்கள். ஐராவதம் தங்கக் கலசத்தில் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்தது. அத்தீர்த்தம் இத்திருக்குளத்திலும் பரவியது. அதனாலேயே தாயார் அபிஷேகவல்லி எனும் திருநாமம் பூண்டாள். கிருஷ்ண மங்கா என்றே பிருகு மகரிஷி அழைத்தார். அதுவே திருக்கண்ணமங்கை என்றாகி, தாயாரின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது.

தன் மகளை பகவானுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டுமே, எப்படி வருவாரோ என்று பிருகு அவ்வப்போது கவலையோடு இருப்பார். பகவான் பக்தவத்சலன் எனும் திவ்யமான நாமத்தோடு வந்து கிருஷ்ண மங்கையை கரம் பிடித்தார். மங்களமான திருமகள் இங்கு மங்களமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள். லட்சுமி தவமியற்றியதால் லட்சுமி வனம் என்றும் திருமணம் நடைபெற்றதால் கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம் என்றழைக்கப்படுகிறது. திருமணத்தைக் காண தேவர்கள் குவிந்ததோடு எப்போதும் இக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டுமென தேனீக்களாக உருவெடுத்து கூடு கட்டி அதிலிருந்தபடியே பார்த்து மகிழ்கிறார்கள். இன்றும் தாயார் சந்நதியின் வடபுறத்திலுள்ள மதிலின் சாளரத்திற்கு அருகில் தேன் கூடு உள்ளது.

கோவில் அமைப்பு : பரந்த வளாகத்தில் அமைந்துள்ள இக்கோவில், 5 அடுக்கு இராஜ கோபுரம் கொண்டுள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து பலிபீடம், கொடி மரம் ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் ஆழ்வார்கள் சன்னதி, அபிஷேகவல்லித்தாயார் சன்னதி, வசந்த மண்டபம், ஆண்டாள் சன்னதி, ஹயக்ரீவப்பெருமாள் சன்னதி, மணவாளமாமுனிகள் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன் பட்சிராசன் சன்னதி உள்ளது. சாலையின் எதிர்ப்புறம் கோயிலுக்கு எதிரே அனுமார் சன்னதி உள்ளது.

திருமணத்தடை உள்ளவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள், நல்ல காரியம் நடக்க வேண்டுபவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் இத்தலஇறைவன் அருளுவார். வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர். சித்ரா பௌர்ணமித் திருவிழா இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழா.

காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி  முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×