நாகர்கோவில்





	


	



























	




 




	








 




5:52:39 PM         Thursday, June 25, 2026

நாகர்கோவில்

நாகர்கோவில்
நாகர்கோவில் நாகர்கோவில் நாகர்கோவில் நாகர்கோவில் நாகர்கோவில் நாகர்கோவில் நாகர்கோவில் நாகர்கோவில் நாகர்கோவில் நாகர்கோவில் நாகர்கோவில் நாகர்கோவில் நாகர்கோவில்
Product Code: நாகர்கோவில்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                           நாகராஜா கோவில்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாட்டில்,  கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் உள்ளது. இக்கோயிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது. இது கேரள பாரம்பரியக் கோவில் ஆகும். 

சுவாமி : நாகராஜர்

மூர்த்தி : அனந்த கிருஷ்ணன், சுப்ரமணிய சுவாமி, துர்க்கையம்மன், ஸ்ரீ தர்ம சாஸ்தா

தீர்த்தம் : நாகதீர்த்தம்

தலவிருட்சம் : ஓடவள்ளி

தலச் சிறப்புகள் : இந்தியாவில் பாம்பையே மூலவராகக் கொண்ட ஒரே கோயில் நாகர்கோவில் நாகராஜா கோயில் தான்.  மற்ற கோயில்களில் நாகராஜா சிலைகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கும். நாக பிரதிஷ்டையும், சர்ப்பக்காவும் கேரளாவிற்கு உரிய சிறப்பம்சங்களாகும்.  

மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் சுயம்புவாக தோன்றி அருள்பாலிக்கிறார். இந்த கோவிலைச் சுற்றி ஏராளமான பாம்புச் சிலைகள் உள்ளன. இக்கோவில் ஒரு நாகதோஷ பரிகார தலம்.   இக்கோவிலுக்கு வெளியில் உள்ள தல விருட்சத்தை சுற்றி நாக சிலைகள் உள்ளன. இந்த  தலத்தில் மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது.   கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது.  மூலவர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாக இருக்கும். மூலவர் இங்கு தண்ணீரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்தான் இக்கோயிலின் முக்கிய பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இந்த மணலானது ஆடி மாதம் முதல்  மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல்  ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருக்கிறது.  இந்த தலத்தில் உள்ள  துர்க்கை சிலை, இங்கு உள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது.  அதனால் அன்னை "தீர்த்த துர்க்கை"  என்று அழைக்கப்படுகிறாள். துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை  அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம்  ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள்  உடனே அகலும்.

தல வரலாறு : பொதுமக்கள் ஆவணிமாதத்தில் இச்சிலைகளுக்குப் பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர். இக்கோவிலில் அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு ஆண்டு தோறும் சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தக்காட்டில் புல் அறுக்கும்  பெண் ஒருத்தி, மாட்டிற்குப் புல் அறுக்கும் போது, அவள் கையில் இருந்த அரிவாள் ஐந்து  தலைநாகம் ஒன்றின் தலையில் பட்டு ரத்தம் பீறிட்டது.  இதைக்கண்டு பயந்து நடுங்கிய அப்பெண்,  பக்கத்தில் உள்ள கிராம மக்களை அழைத்து வந்தாள்.  அவர்கள் கூட்டமாக வந்து பார்க்கும்போது,  அந்த ஐந்து தலைநாகம் சிலையாக காணப்பட்டது.  கிராம மக்கள், ஒரு சிறிய தென்னங்கீற்றால்  வேயப்பட்ட கூரைக்கோவில் கட்டி வழிபட்டு வந்தனர்.  நாளடைவில் அக்கம் பக்கத்து கிராம மக்கள்  கூட்டம் கூட்டமாக வந்து, நாகராஜரை தரிசித்துச் சென்றதில், ஆலயம் மிகப் பிரபலமாயிற்று. தமிழகத்துக் கோவில்களில் வேறு எங்கும் காணப்படாத தனிச்சிறப்பு, ஆலயத்தின்  மூலஸ்தானத்தின் மேல்கூரைத் தென்னை ஓலையால் வேயப்பட்டதாகும். இந்த கூரையில் ஒரு பாம்பு காவல் புரிவதாக நம்பப்படுகிறது. இந்த ஓலைக்கூரை மாற்றி கட்டும் போது ஒரு பாம்பு வருவது வழக்கமாக உள்ளது.  

உதய மார்த்தாண்டவர்மா மன்னர், இக்கோவிலை புதுப்பித்து கொண்டிருந்தபோது, ஒரு நாள் மன்னர் கனவில் நாகராஜர் தோன்றி, ஓலைக்கூரையாலான இருப்பிடத்தையே நான் மிகவும்  விரும்புகிறேன். முதன் முதலில் அக்கூரையினடியில் தான் வாசம் செய்தேன்.  ஆதலால் அதை  மாற்ற வேண்டாம் என்று கூறியதால் இன்றும் மூலஸ்தானத்தின் மேல்கூரைத் தென்னை ஓலையால் வேயப்பட்டு உள்ளது.

கோவில் அமைப்பு : இத்திருக்கோயில் கிழக்கு பார்த்து இருந்தாலும் தெற்கு திசையில் உள்ள கோபுரவாசல் வழியே பக்தர்கள் தரிசனத்துக்கு செல்வது வழக்கமாக இருக்கிறது. நாகராஜா திருக்கோயில் கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை சமணக் கோயிலாக இருந்தது. ஆரம்பகாலத்தில் நாகராஜா என்னும் தர்ணேந்திரன் இக்கோயிலின் முக்கிய தெய்வமாக இருந்தது. ஐநூறு ஆண்டுகளுக்கு முன் சமண தெய்வமாகவும் பாமர தெய்வமாகவும் இக்கோயிலில் இருந்திருக்கிறது. ஆதிஷேசன் ஆயிரம் தலையுடைய நாகராஜனுக்கு இணையான தெய்வம் திருமாலை தாங்கும் ஆதிசேஷன். இதனால் இக்கோயில் வைணவக் கோயில் ஆனது. திருக்கோயிலின் வாயிலில் இரண்டு பெரிய 5 தலை நாகங்களின் சிலை நம்மை வரவேற்கின்றன. இத்திருத்தலத்தின் கருவறையில் 5 தலை நாகத்தின் உருவச் சிலையே மூலவரான நாகராஜ தெய்வமாக வழிப்படப்படுகிறது. 

கி.பி.1516 முதல் 1535 வரை நெல்லை மாவட்டம் களக்காட்டை தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்த மன்னர் பூதலவீர உதயமார்த்தாண்டன். இவர் தீராத சரும வியாதியால் அவதிப்பட்டு வந்தார். ஜோதிடர்கள் அவரது ஜாதகத்தை ஆராய்ந்து இந்த நோய் நாகதோஷத்தால் உண்டானது என்றும்  நாகராஜா கோயிலில் வழிபடால் இந்த வியாதி தீரும் என கூறினர். அப்போது நாகர்கோவில் நாகராஜாவை வழிபட்டப் பின்னர், அவருடைய வலப் பக்கத்திலுள்ள சன்னிதானத்தில் வாயு ரூபியாக எழுந்தருளியுள்ள சிவனை தரிசிக்கின்றனர். அனந்தக்கிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலின் தூண்களில் சமண சமயத்தின் தீர்த்தங்கர்களான பார்சுவ நாதரும், மகா வீரரும் தவக்கோலத்திலுள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவாயில் நேபாள பெளத்த விகாரை நினைவூட்டும் வண்ணம் உள்ளதென கூறுகின்றனர். 

ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. இந்தக் கோவிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணர் சன்னிதிக்கு எதிரேயே கொடி மரம் இருக்கிறது. தை மாதத்தில் அனந்த கிருஷ்ணருக்கே பிரம்மோற்சவமும் நடக்கிறது. அப்போது அனந்தகிருஷ்ணர் திருத்தேரில் எழுந்தருள்வார். தைமாத ஆயில்ய தினத்தன்று ஆராட்டு வைபவமும் நடைபெறும். ஆமைக் கொடி பெருமாள் கோவில்களில் கொடி மரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சன்னிதியின் கொடி மரத்தில் ஆமை இருப்பதாக  கூறப்படுகிறது. விழாக்களில் வாகனமாகவும் ஆமையே இருக்கிறது. இந்த கோயிலின் உள்ளே செல்லும் போது உள்வாசலின் இருபுறமும் அமைந்திருக்கும் ஐந்து தலை நாகத்தின் படம் எடுக்கும் வடிவிலான சிலை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இவை தர்னேந்திரன் என்ற நாகராஜன் என்றும், பத்மாவதி என்ற நாகராணி எனவும் நம்பப்படுகிறது.  

கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர். இப்படி நாக வழிபாட்டுக்காக பல கோயில்கள் இருந்தாலும் நாகர்கோவில் நாகராஜா கோயில் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. இந்த கோயிலின் பெயரை கொண்டுதான் மாவட்ட தலைநகரான நாகர்கோவில் விளங்குகிறது. மிக பழமையான இந்த கோயில் எப்போது யாரால் கட்டப்பட்டது என்பது பற்றி தகவல் இல்லை. 

இவ் ஆலயத்தின் வடக்கே பிரசித்திபெற்ற நாகர்கோவில் கண்ணகை அம்மன்,நரசிங்க வைரவர், வீரபர்திரர்ஆலயங்களும். மணல்மேடுகளும் நாவல் மரங்களும் தெற்கே வயல் நிலங்களும், பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியும்,தொண்டமானாறு கடல்நீர் ஏரியும்,கிழக்கே சுடலைப்பிட்டி பிள்ளையார். குடாரப்பு முருகையா ஆலயங்களும் வயல் நிலங்களும், மணல்மேடுகளும்,பனை,தென்னை மரங்களும் மேற்கே பெரியதம்பிரான், நாச்சிமார் ஆலயங்களும் வயல் நிலங்களும், பனை,தென்னை மரங்களும் அம்பன் கிராமமும் உண்டு. இத்தலத்திற்கு அருகாமையில் ஐந்து வகையான தீர்த்தங்கள் உண்டு. இவற்றில் பெண்டுகள் கேணி சக்தி தீர்த்தமெனவும், உப்புக்கேணி சமுத்திர தீர்த்தம் எனவும், நாககேணி நாகேஸ்வரப்பெருமான் தீர்த்தமாடும் நாக தீர்த்தமெனவும், திருவெம்பா காலத்தில் நடராசர் தீர்த்தமாடும் சம்புக்கேணி சிவதீர்த்தம் எனவும், மார்கழிக்கேணி தனுதீர்த்தம் அல்லது பிண்டதீர்த்தம் எனவும் கூறப்படுகின்றது.

பொதுமக்கள் ஆவணிமாதத்தில் இச்சிலைகளுக்குப் பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர். இக்கோவிலில் அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு ஆண்டு தோறும் சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும்  பெண்கள் இங்கு நாகருக்கு பால் அபிஷேகம் நடத்துகின்றனர்.  பால் பாயாச வழிபாடு இங்குள்ள முக்கிய வழிபாடு ஆகும். பால், உப்பு, நல்லமிளகு, மரப்பொம்மைகள் போன்றவற்றையும் பக்தர்கள் இங்கு காணிக்கையாக வழங்குகின்றனர்.  ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பெண்கள் கூட்டம் அலை மோதும். ஆண்டு தோறும் தை மாதம் பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. எல்லா மாதமும் ஆயில்ய நாளில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை விழாவும், கந்தசஷ்டி விழாவும் இங்கு நடக்கும் இதர முக்கிய விழாக்களாகும்.. இப்புற்று மண் பல வியாதிகளைக் குணப்படுத்துவதாக நம்புகின்றனர். 

பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையது. குழந்தை இல்லாதவர்கள் நாகத்தை சிலை வடிவில் அமைத்து ஆறுமாதம் தண்ணீரிலும் ஆறுமாதம் நெய்யிலும் வைத்து பூஜை செய்து அரசமரத்தில் வைத்து வழிபடுவார்கள். சிவ ஆலயங்களில் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த விழா சிவராத்திரி ஆகும். இந்த நாகராஜா கோவிலிலும் அந்த புண்ணிய தினம் முக்கிய விழாவாக கருதப்படுகிறது. நாகராஜா பிரதிஷ்டை, சிவாகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. பூஜைகளும் அதன்படி சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புற்றை மூன்று முறை வலம் வந்து அம்மனை வழிபடுவது போல் வேண்டினால் எண்ணியவை நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். மகப்பேறு வேண்டியும், பிரசவம் இடையூறு இன்றி நடைபெற வேண்டியும் வழிபடுகின்றனர். கேது திசை நடப்பவர்கள் புற்று வழிபாடு செய்து நோய் வராமல் தடுக்க வேண்டுவார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் அத்தோஷம் நீங்கப் புற்று வழிபாடு செய்வார்கள். தொழு நோய் நீங்கவும் புற்று வழிபாடு செய்யப்படுகிறது.

காலை 4.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை மாலை 5.00 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும்.

 

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம் 

அருகிலுள்ள ரயில் நிலையம் : நாகர்கோயில்  

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×