மோட்ச துவாரகை
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள ‘ஓசா’ துறைமுகத்திற்கு அருகே கோமதி புண்ணிய நதிக்கரையோரம் அமைந்துள்ளது. துவாரகைகளுடன் ஜோதிர்லிங்கத் தலமான சோமநாதத்தில் அமைந்துள்ள, பஞ்ச துவாரகையில் முதலாவது மோட்ச துவாரகையே. இதனை வைகுண்டம் செல்ல நுழைவாயில் என்கிறார்கள்.
பஞ்ச துவாரகை : துவாரகை குஜராத் மாநிலத்தின் தேவபூமி. ஸ்ரீகிருஷ்ணர் புதிதாக அமைத்தது. முக்தி தரும் ஏழு நகரங்களில் துவாரகை நகரம் ஒன்று. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான துவாரகை மடம் இங்கு அமைந்துள்ளது. கோமதி ஆற்றின் கரையில் துவாரகை நகரம் அமைந்துள்ளது. துவாரகை என்றால், கோமதி, பேட் துவாரகையை குறிக்கும். எனினும், கிருஷ்ணர் பிறந்த இடம், வசித்த இடம், வளர்ந்த இடம், லீலைகள் புரிந்த இடம், ஆட்சி செய்த இடம் என்று பல இடங்கள் உள்ளன. ஸ்ரீ கிருஷ்ணரின் தொடர்புடைய இடங்களாக ஐந்து துவாரகைகள் விளங்குகின்றன. துவாரகைக்கு நிகரான பெருமைகள் கொண்ட டாகோர் துவாரகை, கோமதி துவாரகை, பேட் துவாரகை, மூலத் துவாரகை, மோட்ச துவாரகை, சேர்த்து ‘பஞ்ச துவாரகைகள்’ என்றழைக்கப்படுகின்றது. பிற்காலத்தில் ரிஷிகளின் சாபத்தினால் யாதவர்களின் வம்சமே அழிவுற்றது. துவாரகாவின் பெரும் பகுதி கடலின் எழுச்சியால் மூழ்கியது. தற்போது புனித யாத்ரீகத் தலமாக போற்றப்படும் ஆதி துவாரகையின் நிழலாக ஐந்து துவாரகைகள் விளங்குகின்றன.
தலச் சிறப்புகள் : இடது கையால் கோவர்த்தனகிரியைச் சுமந்தபடியும், வலது கையை இடுப்பில் ஒய்யாரமாக வைத்தபடியும் அழகு தரிசனம் தருகிறார் ஸ்ரீநாத்ஜி. கறுப்பு சலவைக்கல்லில் வடிக்கப்பட்ட இந்த விக்கிரகத்தில் இரண்டு பசுக்கள், இரண்டு மயில்கள், பாம்பு மற்றும் கிளி ஆகியனவும் உள்ளன. இங்கே, எம்பெருமாளை குழந்தைக் கண்ணனாகவே பாவித்து, வணங்குகின்றனர். எனவே, ஒவ்வொரு முறையும் 30 நிமிடங்கள் மட்டுமே தரிசனம் தருகிறார்.
இங்குள்ள கிருஷ்ணரை துவாரகநாத்ஜி, கல்யாண நாராயணர் என்றும் போற்றுகிறார்கள். இங்குள்ள மூலவர் சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களோடு சேவை சாதிக்கிறார். காலையில் திருப்பள்ளியெழுச்சி முதல் சயனம் வரை இங்கு சகல நிகழ்ச்சிகளும் நடைபெறும். மணிக்கொருமுறை அலங்காரம் செய்வார்கள். பாமா, ருக்மிணி, ராதைக்கும் சந்நதிகள் உண்டு. இங்கு சுதாமா என்கிற குசேலருக்கும் தனிக் கோயில் உள்ளது.
இங்கே, பாலகா தீர்த்தம் என்பது வெகு பிரசித்தம். வேராவல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், பாலுபூர் எனும் கிராமத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இங்குதான், கண்ணன் தனது அவதா ரத்தை முடித்துக் கொண்டு மீண்டும் வைகுந்தம் எழுந்தருளினாராம். இங்கு பால குண்டம் எனும் குளமும், அருகில் பத்மகுண்டமும் அமைந்துள்ளது. இதனை 'மோட்ச பீபல்’ என்கின்றனர். இங்கே, வைகுண்டம் செல்லக் காத்திருக்கும் நிலையில் காட்சி தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர். இத்தலத்தின் ஆலமரத்தை “பிராச்சி பிப்லா“ என்றுஅழைக்கி ன்றனர். ஒரு தடவை ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களைத் தேடிக்கொண்டு இத்தலம் வந்த போது இம்மரத்தினடியில் அமர்ந்து உத்தவருக்கு பாகவதத்தின் இரகசியார்த்தங்களை உபதேசித்தாராம். இந்த ஆலமரம் "மோக்ஷவாலி பீபல் பேட் "அதாவது "முக்தியளிக்கும் ஆலமரம்" என்றும் அழைக்கப்படுகின்றது.
தல வரலாறு : மஹா பாரதப் போருக்குக் பிறகு கௌரவர்களுக்கு பாண்டவர்கள் இத்தலத்தில்தான் நீத்தார் காரியம் செய்தனர். எனவே பித்ரு தர்ப்பணம் அளிப்பதற்கு உகந்த தலம். கயா செல்ல முடியாதவர்கள் இத்தலத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அது கயா சென்றதற்கு சமம். இங்கு நீத்தார் காரியம் செய்வதும் மிகவும் எளிது. ஒரு தாமிர சொம்பில் தண்ணீர் வைத்துக் கொண்டு சங்கல்பம் செய்து வைக்கின்றனர். பின்னர் அத்தண்ணீரை ஆலமரத்தின் மேல் ஊற்றச் சொல்கின்றனர். அவ்வளவுதான் முன்னோர்கள் அனைவரும் மோட்சம் அடைகின்றனர்.
பாரதப்போரில் தன் மைந்தர்கள் நூற்றுவரும் மடிய ஸ்ரீகிருஷ்ணரே காரணம் என்று அவர் மேல் கோபம் கொண்ட காந்தாரி, போருக்குப்பின் ஸ்ரீகிருஷ்ணர் அவளைக் காணச் சென்ற போது, என் மக்கள் அனைவரும் மாள காரணமாக இருந்த நீயும் உனது யாதவ குலமும் அது போலவே அழியட்டும் என்று சாபம் கொடுத்தாள். யாதவர்களும் தர்மத்தை கைவிட்டு, குடியிலும், கேளிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு சமயம் முனிவர் துவாரகை வந்த போது யாதவர்கள் விளையாட்டாக, ஆண் ஒருவனுக்கு கர்ப்பிணிப் பெண் போல வேடம் அணிவித்து அவனை முனிவர் முன் நிறுத்தி, இவளுக்கு எக்குழந்தை பிறக்கும் என்று கேட்டு கிண்டல் செய்தனர். உண்மையை உணர்ந்த முனிவர் இவன் ஒரு இரும்பு உலக்கையை பெற்றெடுப்பான் அதனால் உங்கள் யாதவ குலம் முற்றிலுமாக அழியட்டும் என்று சாபம் கொடுத்தார். பூபாரத்தைக் குறைக்க ஸ்ரீகிருஷ்ணர் தனது யாதவ குலத்தை தன்னுடன் அழைத்துச் செல்ல ஆடிய நாடகம். முனிவரின் சாபத்திற்கேற்ப அந்த ஆண் பிள்ளை ஒரு இரும்பு அம்மிக்குழவியை பெற்றெடுத்தான். அம்மியாக இருந்தால்தானே தமக்கு தீங்குண்டாகும் என்று கருதிய யாதவர்கள் அதை தூள், தூளாக பொடி செய்து கடலில் கரைத்தனர். இறுதியாக இருந்த ஒரு பெரிய இரும்புத்துண்டினை அப்படியே கடலில் வீசி விட்டனர்.
இவர்கள் கடலில் கரைத்த தூள்கள் எல்லாம் பிரபாச தீர்த்தக்கரையில் ஒதுங்கின அவை அக்கரையில் வளர்ந்த கோரைப் புற்களுக்கு உரமாயின. இறுதியாக இருந்த இரும்புத்துண்டை விழுங்கிய மீன், ஜரா என்ற ஒரு வேடனின் கையில் வந்து சேர்ந்தது, அவனும் அம்மீனின் வயிற்றில் கிடைத்த அந்த இரும்புத்துண்டை தனது ஒரு அம்பின் கூர் முணையாக அமைத்துக் கொண்டான். வைகுண்டம் செல்ல வேண்டிய நாளில் யாதவர்கள் அனைவருடன் ஸ்ரீகிருஷ்ணர் பிரபாச தீர்த்தம் வந்தார். குடி போதை அதிகமாக யாதவர்களிடையே பேதம் அதிகமாகி சண்டையாக மாறியது. அவர்கள் கடற்கரையில் வளர்ந்திருந்த கோரைப்புல்லை பிடுங்கி ஒருவருடன் சண்டையிட ஆரம்பித்தனர். முனிவரின் சாபத்தினால் அப்புற்களே வாளாக மாற, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு யாதவர்கள் அனைவரும் மாண்டனர்.
காட்டில் சென்று ஸ்ரீகிருஷ்ணரும் ஒரு பிரம்மாண்டமான ஆலமரத்தினடியில் ஒரு காலின் மேல் ஒரு காலை வைத்து யோக நித்திரையில் ஆழ்ந்தார். தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஸ்ரீகிருஷ்ணரின் இடது பாத பெருவிரல் ஒரு மானைப் போல தோன்ற தூரத்திலிருந்தே ஜரா என்ற அந்த வேடன் அம்பெய்தான். ஸ்ரீகிருஷ்ணரும் பூலோகத்தில் தன்னுடைய திவ்ய மேனியை விடுத்து வைகுண்டம் ஏகினார். பலராமரும் அருகில் உள்ள ஒரு குகையில் தனது மேனியை விடுத்து ஆதிசேஷன் ரூபத்தில் வைகுண்டம் சென்றார். இவ்வாறு காந்தாரி மற்றும் முனிவரின் சாபத்தினால் யாதவ குலம் முற்றிலுமாக அழிந்தது.
அர்ச்சுனன் சுவாமியின் திருமேனிக்கு அந்திம சம்ஸ்காரம் செய்தானாம். மேல் பாகம் அப்படியே எரியாமல் கடலில் மிதந்து ஜெகந்நாதம் அடைந்தது, அதை ஆதிவாசிகள் இன்றும் நல்நாராயணன் என்று வழிபட்டுவருகின்றனர் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது. இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணர் யோக நித்திரையில் இருந்து அம்படி பட்ட இடமே முக்தி துவாரகை. அந்த ஆலமரம் இன்றும் உள்ளது, நன்றாக பாராமரிக்கப்பட்டு வருகின்றது. அதனடியில் ஸ்ரீகிருஷ்ணர் சங்கு சக்கர கதாதாரியாக ஒரு காலை ஒரு காலின் மேல் போட்ட கோலத்தில் உள்ள சுதை சிற்பத்தை அமைத்துள்ளனர். அறியாமல் அம்பெய்த ஜரா மண்டியிட்டு பகவானை வணங்குகின்றான். அதனடியில் விஷ்ணு பாதமும் அமைத்துள்ளனர். தவழும் கோல பாலகிருஷ்ணரையும் சேவிக்கின்றோம். விஷ்ணு பாதத்தில் மலர் தூவி பக்தர்கள் வழிபடுகின்றனர். அன்பர்கள் அருகில் உள்ள பலராமர் வைகுண்டம் சென்ற குகையையும் சென்று சேவிக்கின்றனர். இத்தீர்த்தத்திற்கு அருகில் பிரம்மகுமாரிகளின் சிவலிங்க வடிவ கலைக்கூடம் அமைந்துள்ளது.
துவக்கத்தில் பிருந்தாவனத்தில் எழுந்தருளியிருந்த இந்த இறைவனை, வைணவ ஆச்சார்யர்களில் முக்கிய மானவரான ஸ்ரீமந்நாதமுனிகள் பிருந்தாவனத்தில் யோக நிலையில் இருந்தபோது, பூஜித்து வந்ததாகச் சொல்வர். இதையடுத்து, அந்நியப் படையெடுப்பின்போது, கோஸ்வாமி தாவோஜி என்பவர், ராணாராஜ்சிங்கின் உதவியுடன் பெருமாளின் விக்கிரகத்தை மாட்டு வண்டியில் எடுத்துக்கொண்டு இந்த ஊருக்கு வந்தாராம். அப்போது, சக்கரம் மண்ணில் புதைந்து வண்டி நகர மறுக்கவே, இந்த இடமே இறைவனுக்கு விருப்பம் போலும் என உணர்ந்த தாவோஜி, அங்கேயே விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தாராம்.
குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. பால கிருஷ்ணராக இங்கு கிருஷ்ணர் காட்சியளிக்கிறார். இவர், ஸ்ரீவல்ல பாச்சார்யார் எனும் மகானின் பூஜைக்குரிய மூர்த்தியாவார். இங்கு தினமும் எட்டு வேளை வழிபாடுகள் நடைபெறுகின்றன. கரும்புப் பளிங்குக் கல்லில் அர்ச்சாவதாரமாக அருள்கிறார். இந்திரனால் ஏவப்பட்ட மழையிலிருந்து காப்பதற்காக கோவர்த்தன கிரியை தூக்கிப் பிடித்தபடி நிற்கும் கோலம். ஸ்ரீநாத்ஜி என்றழைக்கின்றனர். இக்கோலத்தையே வல்லபர் எல்லோரையும் வணங்கச் செய்தார்.
அருச்சுனன் தீர்த்த யாத்திரையின் போது ஸ்ரீகிருஷ்ணரை பிரபாச பட்டினத்தில் சந்தித்து, சுபத்திரையை மணந்தார். ஸ்ரீகிருஷ்ணர் தனது அவதார முடிவின் போது இங்குள்ள பிரபாச பட்டினத்திற்கு தங்கியிருந்த காலத்தில், வேடுவனின் கனையால் காலில் தாக்கப்பட்டார் என பாகவத புராணம் கூறுகிறது. புராணத்தில் இத்தலத்தை சுதாமபுரி என்றழைத்தார்கள். இது ஐந்து மாடிகளைக் கொண்டது. அறுபது அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இந்த மாடிகளைத் தாங்குகின்றன. இந்தியாவின் ஏழு தொன்மையான நகரங்களில் இதுவும் ஒன்று. நாத துவாரா’ என்றால், நாதன் இருக்கு மிடத்தின் வாயில், அல்லது நாதனிடம் நம்மை அழைத்துச் செல்லும் வாயில் என்று பொருள். ராஜஸ்தானில், உதய் பூருக்கு வடக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது.
அருகிலுள்ள விமான நிலையம் : ஜாம்நகர், அகமதாபாத், போர்பந்தர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : துவாரகை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை