பந்தளம் - கேரளா





	


	



























	




 




	








 




2:53:54 PM         Saturday, June 27, 2026

பந்தளம் - கேரளா

பந்தளம் - கேரளா
பந்தளம் - கேரளா பந்தளம் - கேரளா பந்தளம் - கேரளா பந்தளம் - கேரளா பந்தளம் - கேரளா பந்தளம் - கேரளா பந்தளம் - கேரளா பந்தளம் - கேரளா பந்தளம் - கேரளா பந்தளம் - கேரளா பந்தளம் - கேரளா பந்தளம் - கேரளா பந்தளம் - கேரளா பந்தளம் - கேரளா பந்தளம் - கேரளா பந்தளம் - கேரளா
Product Code: பந்தளம் - கேரளா
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                                  பந்தளம்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவின் கேரள மாநிலத்தின், திருவனந்தபுரத்திலிருந்து கேரளத்தின் வடபகுதிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பந்தளம், செங்கனூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 14 கி.மீ. சென்றால் பந்தளத்தை அடையலாம். அச்சன்கோயில் நதிக்கரையில் அழகிய இயற்கைச் சூழலில் ஐயப்பனின் குறிப்பிடத்தக்க புனிதத் தலங்களில் ஒன்றான வலிய கோயிக்கால் ஆலயமும், அதனையொட்டி பந்தள அரண்மனையும் உள்ளன. இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி அய்யப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன. காட்டில் பாலகனாக கண்டெடுக்கப்பட்ட ஐயப்பன் மன்னரான ராஜசேகரனால் 12 வயது வரையிலும பந்தளம் அரண்மனையில் தான் வளர்க்கப்பட்டார். 

தல சிறப்புகள் : சபரிமலைக்குப் பக்தர்கள் வரும் காலங்களில் இந்த பந்தளத்தில் உள்ள வலியக்கோயிக்கல் என்னும் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இது அச்சன் கோவில் ஆற்றங்கரைக்கு அருகில் இருக்கிறது. சிவ-விஷ்னுவின் அம்சமான ஐயப்பன் குழந்தைவடிவில் பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றலான பந்தள மன்னரான ராஜசேகரன் கண்களில் அகப்பட்டு, தன் அரண்மனைக்கு கொண்டு சென்று வளர்த்த இடமே பந்தளம். சுவாமி ஐயப்பன் சிவவிஷ்ணு அம்சமானபோதிலும், ராஜவம்சத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு ராஜவாழ்க்கை பிடிக்கலை. தனக்கு இளவரசு பட்டம் சூட்டுவது அன்னைக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சதும், அதையே சாக்காய் வைத்து  சபரிமலைக்கு போய் தங்கிக்கிட்டார். ஆனாலும், தந்தையின் ஆசைக்காக வருசத்தில் ஒருநாள் மட்டும் இளவரசன் கோலம் சூடிக்கொல்வதாக தன் தந்தைக்கு வாக்களித்தார். அந்த சம்பிரதாயம் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. பந்தள மன்னர் ராஜசேகரன்,  ஐயப்பனுக்காக சுத்த தங்கத்தினாலான ஆபரணங்களை செய்து வைத்திருந்தார். அந்த ஆபரணங்கள் இன்றும் கேரளத்தில் உள்ள பந்தளம் அரண்மனையில் இருக்கிறது. ஐயப்பன் பந்தளம் அரண்மனை இரண்டு ஒட்டு வீடுகள்தான். அங்குதான் எல்லோரும் பார்க்கத்துடிக்கும் ஐயப்பனின் ஆபரணங்கள் இப்போதும் இருக்கிறது. 

தல வரலாறு : பந்தளம் அரச மரபு கொல்லம் ஆண்டில், மலையாள நாட்டின் பந்தளம் பகுதியை ஆண்ட, மதுரை பாண்டிய அரச குடும்பத்தின் ஒரு கிளையினர் ஆவார். தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைத்தலைவர் மாலிக் கபூர், தென்னாட்டின் மீதான படையெடுப்புகளின் போது, 24 ஏப்ரல் 1311 அன்று மதுரை பாண்டிய நாட்டைத் தாக்கி யானைகள், குதிரைகள் உள்ளிட்ட தங்க கருவூலங்களுடன் தில்லி திரும்பினான்.[2அப்போது பாண்டிய நாட்டின் பட்டத்திற்கு போட்டியிட்டுக் கொண்டிருந்த இளவரசர்களான சுந்தரபாண்டியன் மற்றும் வீரபாண்டியன் குடும்பத்தினர், மாலிக் காபூர் படைகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக, தற்கால மலையாள நாட்டின் கோட்டயம் மலைப்பகுதிகளில் ஒளிந்து கொண்டனர். அவர்களின் ஒரு பிரிவின் வழித்தோன்றல்கள் கோட்டயம் பகுதியில் பூஞ்சார் அரசை நிறுவினர். மற்றொரு பிரிவினரான செம்பழனூர் என்பவர்கள், மலையாள நாட்டின் மலைகளில் அலைந்து திரிந்து இறுதியாக தற்கால பத்தனம்திட்டா மாவட்டத்தில் பந்தள அரசை நிறுவினர்.

சோழர்கள் திருவிதாங்கூர் அரசை முற்றுகையிட்ட போது, பாண்டியர்களின் வழித்தோன்றல்கள், கோன்னியை விட்டு, பந்தளத்தில் கொல்லம் ஆண்டு 370ல் (கிபி 1194) அரசமைத்தனர். வேணாடு ஆட்சியாளர் பந்தள அரசை நிறுவ உதவி செய்தார்.  திருவிதாங்கூர் அரச ஆவணங்களின் படி, பந்தள அரசு, திருவிதாங்கூருடன் நெருங்கிய நட்பு பாராட்டினார். 1000 ச.கி.மீ பரப்பளவு கொண்ட பந்தள இராச்சியத்தில் கோன்னி, ஆரியங்காவு, குளத்துப்புழை, அச்சன்கோவில், தென்காசி மற்றும் சபரிமலையின் மலைக்காட்டுப் பகுதிகள் கொண்டது. கொல்லம் ஆண்டு 969ல் திப்புசுல்தான் திருவிதாங்கூர் அரசின் மலபார் பகுதிகளை கைப்பற்றினார். திப்புசுல்தானுக்கு போர் ஈட்டுத்தொகை செலுத்துவதற்கு, பந்தள அரசரிடம் ரூ. 2,20,000 திருவிதாங்கூர் மன்னர் கேட்டார். சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களிடம் வரி வசூலித்து போர் ஈட்டுத் தொகையை தவணை முறையில் பந்தள அரசர் கட்டினார். பின்னர் பந்தள அரசை திருவிதாங்கூர் இராச்சியத்துடன் 1820ல் இணைக்கப்பட்டது. பந்தளம் அரச குடும்பத்தினர்களும், வழித்தோன்றல்களுக்கும் திருவிதாங் கூர் இராச்சியம் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கியது. அது முதல் சபரிமலை அய்யப்பன் கோயில் நிர்வாகத்தையும் திருவிதாங்கூர் இராச்சியத்தினரே மேற்பார்வையிட்டனர். தற்போது சபரிமலை கோயில் நிர்வாகம் கேரள அரசின் தேவஸ்தான குழுவிடம் உள்ளது.

புராணங்களின் படி மாலொருபாகனுக்குப் பிறந்தவர் அய்யப்பன். பந்தள நாட்டு மன்னர் இராஜசேகரன் காட்டில் வேட்டையாடச் செல்லும் போது பம்பை ஆற்றின்அ கரையில் கண்டெடுத்த அய்யப்பன் எனும் அக்குழந்தையை காட்டிலிருந்து அரண்மனைக்கு கொண்டு வந்து மணிகண்டன் எனப்பெயரிட்டு வளர்த்தார். குருகுலத்தில் கல்வி முடித்த மணிகண்டனுக்கு பட்டத்து இளவரசு சூட்டப்பட்டது. இதனை அறிந்த முதலமைச்சர் மற்றும் பட்டத்து ராணி, அய்யப்பனுக்கு மணி முடி சூடாதிருக்க திட்டம் தீட்டினர்கள். அதன்படி ராணிக்கு ஏற்பட்ட வயிற்று வலி நீங்க புலிப் பால் கொண்டு வர, அய்யப்பனுக்கு ஆனையிடப்பட்டது. புலிப்பால் தேடி காட்டிற்குச் சென்ற மணிகண்டன், காட்டில் திரிந்து கொண்டிருந்த மகிஷி எனும் அரக்கியைக் கொன்று, புலிகள் மற்றும் அதன் குட்டிகளுடன் அரண்மனை நோக்கி வந்தார். இக்காட்சியைக் கண்ட மக்களும், அரண்மனை குடும்பத்தினரும் மணிகண்டனை பார்த்து அய்யனே, அப்பனே எனத் துதித்தனர். இதனால் மணிகண்டனுக்கு அய்யப்பன் எனப் பெயராயிற்று. பின்னர் அரச வாழ்வை துறந்த அய்யப்பன் சபரிமலையில் பிரம்ம்ச்சாரியாக தவக்கோலத்தில் அமர்ந்தார். ஆண்டுதோறும் சபரிமலை மகர ஜோதி அன்று, பந்தளம் அரண்மனையிலிருந்து, அய்யப்பனுக்கு அணிவிக்க, தங்க நகைகளை மூன்று மரப்பெட்டிகளில் எடுத்துச் செல்லப்படும். 

பக்தர்கள் புடைச்சூழ வருசத்தில் ஒருநாள், தை முதல்நாளில் மகரஜோதி தெரியுமன்று, பந்தளத்திலிருந்து,  அந்த ஆபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும். இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விசயங்கள் மூணு இருக்கு. ஆபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு செல்லும்போது ஐயப்பனின் தந்தை ஸ்தானத்தில் பந்தளம் ராஜக்குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பிரதிநிதியாக மலைக்கு அனுப்பி வைக்கப்படுவார்.  ஐயப்பனின் ஆபரணங்கள் மூன்று பெட்டிகளில் இருக்கும்.  அதை தேர்வு செய்யப்பட்ட மூன்று பேர் மட்டுமே மலைக்கு சுமந்து செல்வர். 

பந்தளத்திலிருந்து மலைக்கு செல்ல மூன்று நாட்களாகும். அவர்கள் அந்த ஆபரணப்பெட்டிகளை மூன்று நாட்களும் தலையில் சுமந்தே செல்வர்கள்.  சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும், பந்தளத்திற்கு வந்து அங்குள்ள ஆலயத்தில் பிரார்த்தனை செய்தபின்னர் அரண்மனையில் உள்ள திருஆபரணத்தை பக்தியுடன் தரிசித்துச் செல்வார்கள். கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த திருஆபரணம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். மகரஜோதிக்காக பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணப்பெட்டி ஊர்வலம்  புறப்படும் நேரத்திலிருந்து, சபரிமலை ஐயப்பன் ஆலயத்தைச் சென்றடையும் நேரம் வரை மட்டும் வானத்தில் ஒரு கழுகு தோன்றி, திருஆபரணம் செல்லும் பாதையில் பறந்தபடி இருக்கும். இது இன்றுவரை ஆண்டுதோறும் நடந்து வரும் ஒரு அதிசய நிகழ்வு.

பந்தளம் ராஜக்குடும்பத்தை சேர்ந்தவர்தான் ஐயப்பன். ஆனாலும், பந்தள ராஜக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் சபரிமலைக்கு  அடிக்கடி போகமாட்டாங்க. ஆண்டுக்கு ஒருமுறை மகரஜோதியன்னிக்கு மட்டுமே போவாங்க. காரணம், தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதை செலுத்த எழுந்து நிற்க வேண்டியது வரும். அதனால் தவம் கலையும். எனவே ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் போதும் என ஐயப்பன் தன் குடும்பத்தை கேட்டுக்கொண்டதாக வரலாறு. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். பெட்டியை மலைக்கு கொண்டுச் செல்ல அந்த குறிப்பிட்ட நாள் அன்று அனைத்தும் தயாராக இருந்தாலும் வானத்தில் கருடன் தெரிந்தப்பின்தான் அவர்கள் மலைக்கு கிளம்புவாங்க. இதுவரை ஒரு ஆண்டுகூட கருடன் வராமல் இருந்ததில்லை. பெட்டியை மலைக்கு கொண்டு செல்வதும் நிற்கவில்லை.

ஐயப்பன் சபரிமலைக்கு சென்றபின், பந்தள மகாராஜா ராஜசேகரின் மகனான குணசேகரன், தன் அன்னையின் ஆசைப்படி அரியணை ஏறாமல் ,மணிமகுடத்தை மறுத்து நாட்டைவிட்டு வெளியேறி,  பல இடங்களுக்கு சென்று கடைசியில் சித்தூர் வந்தடைந்து அங்கயே இருந்து தங்கிட்டார்.  தமிழ்நாட்டில் அதிக மக்கள் வந்து சாஸ்தாவை வணங்கும் கோவில், சாஸ்தா வேல் வைத்திருக்கும்  கோவில்,  சாஸ்தாவிற்கு தேர்த்திருவிழா நடைப்பெறும் கோவில் ஐயப்பன் அவதாரத்தோடு தொடர்புடைய தமிழகத்தில் இருக்கும் கோவில் சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவில் ஆகும்.  பல ஜாதியினருக்கும் குலதெய்வமாக விளங்கும் கோவில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் திருவிழா நடைபெரும் கோவில்.

சித்தூர் தென்கரை மாகாராஜர் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதக்கடைசி வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு கோவில் அர்ச்சகர் குளித்து ஈரத்துணியுடன் கோவிலில் நுழைந்தவுடன் கோவில் கதவை சாத்தி விட்டு அவர் மட்டும் தனியாக தளவாய் மாடனுக்கு பூஜை செய்வார். பின்னர் கதவை திறந்தவுடன் பக்தர்கள் தளவாய் மாடனை வழிபடுவார்கள் அடுத்த நாள் அதாவது சனிக்கிழமை அன்று காலையில் தென் கரை மகாராஜாவிற்கு இரண்டு முறை அபிஷேகம் நடைபெறும் பின்பு பக்தற்களுக்கு அருமையான பாயாசத்தூடன் அன்னதானம் நடைபெறும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் :  செங்கனூர் 
பேருந்து வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×