தோவாளை - நாகர்கோவில்





	


	



























	




 




	








 




12:12:20 AM         Tuesday, April 21, 2026

தோவாளை - நாகர்கோவில்

தோவாளை - நாகர்கோவில்
தோவாளை - நாகர்கோவில் தோவாளை - நாகர்கோவில் தோவாளை - நாகர்கோவில் தோவாளை - நாகர்கோவில் தோவாளை - நாகர்கோவில் தோவாளை - நாகர்கோவில் தோவாளை - நாகர்கோவில் தோவாளை - நாகர்கோவில் தோவாளை - நாகர்கோவில் தோவாளை - நாகர்கோவில் தோவாளை - நாகர்கோவில்
Product Code: தோவாளை - நாகர்கோவில்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                        தோவாளை, சுப்பிரமணிய சுவாமி 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் திருநெல்வேலி நாகர்கோவில் நெடுஞ்சாலையின் அருகே ஆரல்வாய்மொழி மற்றும் வெள்ளமடம் ஆகிய இரு ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது.  நாகர்கோயிலிலிருந்து 14 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 22 கி.மீ தூரத்திலும் உள்ளது.

மூலவர் : சுப்பிரமணிய சுவாமி  ( திருமலை அமரர் பதிகாத நயினார் )

தலச் சிறப்புகள் : முருகன் பால சுப்ரமணியனாக மலையின் உச்சிலும், பாலா கிருஷ்ணர் மலையின் அடிவாரத்திலும் நின்று அருள் புரிவது சிறப்பு.  இந்த ஊரில் அமைந்துள்ள மலையில் முருகன் கோயில் மற்றும் கருடகிரி சிவபெருமான் கோயில் அமைந்துள்ளது. அது மட்டுமின்றி தோவாளை செக்கர்கிரி மலையில் முனிவர்கள் வழிபட்டு வந்துள்ளனர். தோவாளை செக்கர்கிரி மலையில் இக்கோயில் அமைந்துள்ளது.  இந்த கோயில் குமாரசாமி அல்லது முருக பகவான் ஆகியோரின் அழகிய சிலையை காணலாம். முருகன் அருபடை வீடு  ஓவியங்களை கோவில் சுவர்களுக்குள் காணலாம்.

108 படிகள் ஏறி சென்றால் குமரன் கோவிலை அடையலாம். இரண்டு பிரகாரங்கள் கொண்ட சிறிய கோவில். கருவறை கோவில் முன் உள்ள தூணில் வீரமகேந்திரர் விநாயகர், ண்டி கோலத்தில் முருகன் உள்ளனர். இந்த கோவில் 15 அல்லது16 ம் நூற்றாண்டில் தோன்றிருக்கும் என்றும் தோவாளைக்கு எதிர்வில்லி சோழபுரம் என்ற பெரும் உண்டு. 

இக்கோவிலின் முக்கிய திருவிழாவாக சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்படும் சூரசம்ஹார திருவிழாவில் தோவாளை சூரசம்ஹாரம் மிகப்பெரிய மற்றும் திரளான மக்கள் மத்தியில் நடைபெறும் திருவிழாவாகும். ஒவ்வொரு வருடமும் சுப்பிரமணிய சுவாமி விதவிதமான அலங்காரத்தில் சூரனை வதம் செய்வார். அடுத்தபடியாக காவடி கட்டுதல் திருவிழாவாக நடைபெறுகிறது. இக்கோயிலில் இருந்து திருச்செந்தூர் முருகனுக்கு காவடி கட்டி பக்தர்கள் செல்கிறார்கள். ஆடி மாத கடைசி வெள்ளிகிழமை மலர் முழக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00  மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருவனந்தபுரம் 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  தோவாளை  

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்லை 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×