வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர்





	


	



























	




 




	








 




12:14:53 AM         Sunday, May 31, 2026

வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர்

வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர்
வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர்
Product Code: வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                               வல்லக்கோட்டை முருகன் கோவில்
 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 12 கி.மீ தொலைவில் உள்ளது. 
 
சுவாமி : சுப்ரமணியசுவாமி, கோடையாண்டவர்
 
அம்பாள் : வள்ளி தெய்வயானை 
 
தல தீர்த்தம் :   வஜ்ர தீர்த்தம்
 
தல விருட்சம் : பாதிரி மரம் 
 
பாடியோர் :   அருணகிரிநாதர்
 
தல சிறப்புக்கள் : வல்லக்கோட்டை முருகன் கோவில் 1200 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது. இக்கோயிலின் மூலவர்  திருவுருவம் ஏழு அடி உயரம் உள்ளது. முருகனுக்கு எதிரே இரண்டு மயில்கள் உள்ளன. இந்தியாவில் அமைந்துள்ள முருகன் திருவுருவச்சிலைகளில் இதுவே உயரமானதாகும். முருகனின் இரு புறங்களில் வள்ளி, தெய்வானை உள்ளனர். கருவறையைத் தவிர கோயில் சுற்றுகையில் கணபதி, உற்சவ திருவுருவம், சண்முகர் மற்றும் அம்மனுக்கு சன்னதிகள் உள்ளன.

தல வரலாறு : துர்வாச முணிவரின் ஆலோசனையின்படி தன் ராஜ்யத்தை திரும்ப பெறுவதற்காக பகரீதன் இந்த கோவிலை கட்டியதாக புராணம் கூறுகிறது. வல்லான் என்கிற அரக்கன் தேவர்களை சித்திரவதை செய்ததாகவும், முருகப்பெருமான் அவனை வீழ்த்தி இவ்விடத்தில் அமைதியை நிலைநாட்டியதாகவும், அவரை பெருமைபடுத்தும்படி இந்த கோவில் கட்டப்பட்டதாகவும் மற்றும் ஒரு புராணச் செய்தியும் கூறப்படுகிறது. அருணகிரிநாதர் திருப்போரூர் தலத்தை தரிசித்துவிட்டு காலை திருத்தணி செல்ல நினைத்து உறங்க அவர் கனவில் வல்லக் கோட்டையினை மறந்தாயே என முருகன் நினைவுறுத்த காலையில் எழுந்து வல்லக் கோட்டைவந்து முருகனை நினைந்து பாடல் பாடினார்.
 
இலஞ்சி என்னும் தேசத்தில் சங்கொண்டபுரம் என்னும் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். இந்த மன்னனை காண  நாரத முனிவர் வந்தார். ஆணவம் பிடித்த மன்னனோ நாரதரை கண்டு கொள்ளவே இல்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அருகிலிருந்த வனத்திற்கு சென்றார். அங்கு கோரன் என்ற அரக்கன் பலநாடுகளை வென்று வெற்றிக்களிப்பில் வந்து கொண்டிருந்தான். அவனை கண்ட நாரதர், பகீரதனின் ஆணவத்தை அடக்க இவன் தான் சரியான ஆள் என முடிவெடுத்தார். பின்  அவனிடம் தானே வலிய செறு, கோரன நீ பல நாடுகளை வெற்றி கொண்டிருந்தாலும் இந்த இலஞ்சி நாட்டை வென்றால்  தான் உனது திக் விஜயம் நிறைவுபெறும், என்று தனக்கே உரித்தான பாணியில் கூறினார். அசுரன் இலஞ்சி நாட்டின் மீது போர் தொடுத்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத மன்னன் மிரண்டு விட்டான். பகீரதனை போரில்  வென்றான் அசுரன். நாடு நகரம் இழந்த பகீரதன் காட்டில் அலைந்து நாரதரிடம் மன்னிப்பு கேட்டு தனக்கு நல்ல வழி காட்டச் சொல்ல அவர் துர்வாசரை சந்திக்கச் சொன்னார். பகீரதனும் அந்த அடர்ந்த காட்டில் நீண்ட காலம் மிகுந்த சிரமப்பட்டான். பின் ஒரு வழியாக திர்வாச முனிவரை தேடிக் கண்டு  பிடுத்து அவரடம் தன் நிலையைக் கூறி நாட்டல் மீட்க வழி கேட்டு மன்றாடினான், துர்வாசர் அவனிடம், வெள்ளிக்கிழமைகளில்  விரதம் இருந்து இங்குள்ள பாதிரி மரத்தடியில் உள்ள முருகனை வழிபட்டால் உனது குறைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும்  என்று கூறிச்சென்றார். இவனும் துர்வாசர் கூறியபடி முருகனை வழிப்பட்டான். சிறிது காலம் கழித்து முருகனுக்கு அவனே ஒரு  கோயிலும் கட்டி வள்ளி, தெய்வானையுடன் பிரதிஷ்டை செய்தான். கோடையாண்டவர் வள்ளி, தெய்வானை. வல்லன் என்ற அசுரன் தேவர்களை கொடுமை படுத்த அவர்கள் முருகனிடம் முறையிட முருகன் அசுரனை வதம் செய்தார். அவன் வேண்டுகோளுக்கிணங்க அவன் பெயரில் வல்லவன் கோட்டை என்று திகளும் என அருள் வல்லவன் கோட்டை மருவி வல்லக்கோட்டை ஆனது.
 
வஜ்ர தீர்த்தம் என்னும் தொட்டி இந்த கோவிலில் இருக்கிறது, இது இந்திர தேவனுடைய வஜ்ராயுதத்தினால் உருவாக்கப்பட்டது என்றும் நம்பப்படுகின்றது. சுப்ரமணிய ஸ்வாமியை வழிபடுவதற்காக இந்திரன் இந்த தொட்டியை பயன்படுத்தியதாகவும் கூறுகின்றனர். காமாக்ஷி மற்றும் ராமர் ஸ்ரீ ஆஞ்சனேயரை தழுவியபடி இருக்கும் சிற்பவேலைப்பாடுகளும் ஆர்த மண்டபத்தின் தூண்களில் உள்ளன. கோயிலும் குளமும் கொள்ளை அழகுடன் திகழ்கிறது. சிறிய ஆலயம்தான் என்றாலும் புராதனப் பெருமையுடன் அமைந்து உள்ள வல்லக்கோட்டை முருகப்பெருமானைத் தரிசித்தால், எடுத்த காரியம் யாவும் வெற்றி தரும். 
 
திருமணத் தடைகள் நீங்கி விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம். முருகப்பெருமானுக்கு உரிய செவ்வாய்க் கிழமையிலும் சஷ்டி திதியிலும், கார்த்திகை நட்சத்திர நாளிலும் இங்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். இங்கே ஆடிக்கிருத்திகை அமர்க்களமாக நடைபெறும். கிருத்திகை விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து, முருகப்பெருமானுக்கு பால் குடம் எடுத்தும் காவடிகள் எடுத்தும் வருவார்கள். வியாழன் இரவு தங்கி தீர்த்தத்தில் குளித்து வெள்ளி வழிபாடு சிறப்பு.
 
காலை 5.30 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
 
அருகிலுள்ள விமானதளம் : சென்னை 
 
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
 
பேருந்து வசதி : உண்டு
 
தங்கும் வசதி : இல்லை
 
உணவு வசதி : இல்லை
 
 
Mail this page Printable view
×
×
×
×
×
×
×