மண்மலை - செங்கம்





	


	



























	




 




	








 




3:51:22 PM         Tuesday, May 26, 2026

மண்மலை - செங்கம்

மண்மலை - செங்கம்
மண்மலை - செங்கம் மண்மலை - செங்கம் மண்மலை - செங்கம் மண்மலை - செங்கம் மண்மலை - செங்கம் மண்மலை - செங்கம் மண்மலை - செங்கம் மண்மலை - செங்கம்
Product Code: மண்மலை - செங்கம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                          சுப்பிரமணியர் திருக்கோயில், செங்கம்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா வில்வாரணி என்னும் ஊரில் கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இதேபோல் வேலூரில் இருந்து போளூரில் இறங்கி அங்கிருந்து 16 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. பஸ், ஆட்டோ வசதி அதிகளவு உள்ளது.

மூலவர்  : சுப்ரமணியர்

தலச் சிறப்புகள் :  சிவன் தான் லிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால், சிவனும் முருகனும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு இங்கு மூலவரின் பெயர் சுப்பிரமணியர், சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.  நெருப்பு சிவன். அதிலுள்ள வெப்பம் உமாதேவி, நெருப்பின் நிறம் கணபதி, அதன் ஒளி முருகன். இவையாவும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை என்றும், லிங்க வடிவில் முருகன் தோன்றியதால், சிவனே முருகன், முருகனே சிவன் என்றும் இந்த கோயில் மூலம் உணர முடிகிறது. ஒவ்வொரு கிருத்திகையன்றும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும் இங்கு வந்து முருகனை வழிபடுவதாகவும் நம்பிக்கை உள்ளது.

தல வரலாறு : பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இருந்த கோயில் குருக்கள் ஒருவர் பல கோயில்களுக்கு பூஜை செய்து வந்தார். வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு குதிரையில் சென்று வருவார். அவர், தன் சக குருக்கள் ஒருவருடன் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகையன்று திருத்தணி சென்று முருகனை வழிபடுவார். ஒரு ஆண்டில் சில காரணங்களால் அங்கு செல்ல இருவருக்கும் தடங்கல் ஏற்பட்டது. இதனால் மனம் நொந்த அவர்கள் அன்றிரவு உறங்கும் போது, இருவர் கனவிலும் தோன்றிய முருகன், “”நான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளியுள்ளேன். எனக்கு அந்த இடத்தில் கோயில் கட்டி கிருத்திகை நட்சத்திரங்களில் வழிபாடு செய்யுங்கள்,” என கூறினார். மறுநாள் முருகன் குறிப்பிட்ட மலையில் சுயம்புவைத் தேடினர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி லிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது. குருக்களைக் கண்டதும் நாகம் லிங்கத்திற்கு குடைபிடித்த நிலையில் சிலையாகி விட்டது. குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து லிங்கத்தை முருகனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது. நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால், நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது.

1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலில் முருகன் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.  சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இத்தலத்தை பற்றி காஞ்சிபுராணம், அருணாச்சல புராணதில் கூறப்பட்டுள்ளது வேல் விளையாட்டில் வல்லவனான முருகபெருமான் எய்த அம்பு பருவதமலைமீது பாய்ந்தது அப்போது அங்கு தவமிருந்த சப்த ரிஷிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன. அதனால் பெருக்கெடுத்த உதிரம் ஆறாக பெருக்கெடுத்து மலையில் இருந்து வழிந்தோடியது. உதிரம் பெருக்கெடுத்து ஆறாக பாய்ந்ததால் இன்றைய செய்யாற்றுக்கு சிவப்பு நதி, செய்நதி எனும் பெயரும் உண்டு. சப்த ரிஷிகளின் தலைகளை கொய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்ம கத்திதோஷம் பிடித்தது பிரம்ம குமாரர்களின் தலையை துண்டித்த சாப விமோஷனத்தின் வழியை பார்வதி தேவியின் முருகப்ருமனுக்கு உபதேசித்தார் பிரம்மகத்தி தோசம் நிவர்த்தி அடைய செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் பூஜித்தால் தோஷம் நிவர்த்தியாகும் என பார்வதிதேவி கூறினர். அந்த உபதேசத்தை முருகப்பெருமான் ஏற்று செய்நதியின் வலதுகரையில் வில்வாரணி மலையில் குடிகொண்டு காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், குருவிமலை, பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடதுகரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு, ஓரந்தவாடி, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, மோட்டுப்பாளையம், பழங்கோயில், மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இன்றளவும் இந்த 14 இடங்களிலும் முருகன் வழிபட்ட சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன.

முருகப்பெருமானே பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் பூஜித்து முருகப்பெருமானுக்கு பிரம்மஹத்தி தோசம் நிவர்த்தியடைந்தது. அந்த 14 சிவாலயங்களையும் முருகப்பெருமானை சிவனடியார் தொடர்ந்து சிரத்தையுடன் பூஜித்து வந்தார். அவருக்கு உதவியாக பூசாரி ஒருவரும் சிவகைங்கறியம் செய்து வந்தார். இவர்கள் இருவரும் வருடாவருடம் ஆடிக்கிருத்திகை திருநாள் அன்று திருத்தணி சென்று முருகபெருமானை வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.ஆனால் சில காரணங்களால் ஒரு வருடம் திருத்தணி சென்று வழிபட முடியாமல் போனது இதனால் இருவரும் மிகுந்த மன வருத்தத்துடன் முருகா இந்தவருடம் உன்னை தரிசிக்கும் பாக்கியத்தை கொடுக்கவில்லையே எங்களை ஏன் சோதிக்கிறாய் என்ற புலம்பியபடி அவர்களது இல்லத்தில் உறங்கினர் அன்று இரவு அவர்கள் இருவரின் கனவில் ஒரே நேரத்தில் முருகப்பெருமான் தோன்றி நான் உங்கள் அருகிலேயே இருக்கின்றேன் என்னை ஏன் அங்கு சென்று தேடுகிறாய் நட்சத்திரகிரி எனும் குன்றில் நடுமலையில் நடுநாயகமாக சுயம்பு ரூபமாக சிவசுப்பிரமணிய ஐக்கிய பாவத்தில் சிவசுப்பிரமண்யராக ஞானமே வடிவாக இருக்கின்றேன். நான் தம்பதி சமேதராக அமர்ந்து நித்ய சிவபபூஜை செய்கின்றேன் சூரியன், சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும், நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கின்றன நட்சத்திரகிரி குன்றின் அடிவாரத்தில் இருக்கக்கூடிய சந்திரபுஷ்கரணி சுனையில் இருக்கும் சிவசர்ப்பம் வழிகாட்ட என்னை வந்து நீ சேருவாயாக. உன் மூலமாக இவ்வுலகிற்கு ஒரு தனிச்சிறப்புமிக்க ஆலயமாக உருவாகும் என முருகப்பெருமான் திருவருள் புரிந்தார்.

இந்த நட்சத்திரகிரி கோயிலில் சித்திரை பிறப்பு பால்குட அபிஷேகம், ஆடிக்கிருத்திகை பெருவிழா, கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், தைக்கிருத்திகை, பங்குனி உத்திர பிரம்மோற்சவம், மாதாந்திர கிருத்திகை விஷேசமானவை. கிருத்திகைதோறும் நட்சத்திரகிரியை வலம் வருவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஜாதகரீதியாக ராகு, கேது தோஷமுள்ளவர்கள் இந்த முருகனை வழிபட்டு துன்பம் நீங்கி இன்ப வாழ்வு பெறுவர் என்பது நம்பிக்கை. சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.ஆடி கிருத்திகை மற்றும் இதர கிருத்திகை நாட்கள் இங்கு விழாக்கோலம் தான். பங்குனி உத்திரம் பத்து நாள் நடக்கிறது. ஐந்தாம் நாளில் முருகன் மலையில் இருந்து கீழிறங்கும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் நாளில் தேரோட்டம் நடக்கிறது.

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவண்ணாமலை

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×