சுப்பிரமணிய சுவாமி கோயில் - ஹரிப்பாடு 





	


	



























	




 




	








 




4:30:25 AM         Friday, May 01, 2026

சுப்பிரமணிய சுவாமி கோயில் - ஹரிப்பாடு

சுப்பிரமணிய சுவாமி கோயில் - ஹரிப்பாடு
சுப்பிரமணிய சுவாமி கோயில் - ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் - ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் - ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் - ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் - ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் - ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் - ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் - ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் - ஹரிப்பாடு
Product Code: சுப்பிரமணிய சுவாமி கோயில் - ஹரிப்பாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                          சுப்பிரமணிய சுவாமி கோயில், ஹரிப்பாடு 

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் கேரள மாநிலத்தின், ஆலப்புழையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் 22 கி.மீ தொலைவில் உள்ளது.  ஹரிப்பாடு  ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆலப்புழையிலிருந்து ஹரிப்பாடு செல்ல அதிகமான பேருந்து வசதிகள் இருக்கின்றன. 

தல சிறப்புகள் : கோயிலின் முதன்மைத் தெய்வமாக முருகன் நான்கு கைகளுடன் கிழக்கு நோக்கி உள்ளார். ஒரு கையில் வேலை ஏந்தியும், மற்றொரு கையில் வஜ்ராயுத்தைக் கொண்டும், ஒரு கையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அபய முத்திரையுடனும், மற்றொரு கையை தொடைமீது வைத்தும் இருக்கிறார்.  சிலையின் உயரம் சுமார் எட்டு அடியில் பிரம்மாண்டமாக உள்ளது. இந்த சிலைக்குள் விஷ்ணு, சிவன், பிரம்மா ஆகியோர் இருப்பதாக ஐதீகம். இந்த ஆலயம் கேரளாவின் தென்பழனி என்று போற்றப்படுகிறது.
 
தல வரலாறு : ஈசன் நெற்றிக் கண்ணில் இருந்து வெளியேறிய நெருப்புப் பொறிகளில் இருந்து தோன்றியவர் முருகப்பெருமான். இவர் சிறுவனாக இருந்தபோதே, தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் தொல்லைகளைக் கொடுத்து வந்த சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் எனும் மூன்று அசுரர்களையும் அழித்து வெற்றிவேலனாக வலம் வந்தார். சூரர்களை வதம் செய்தபிறகு பூலோகத்தை தன்னுடைய மயிலில் வலம் வந்த முருகப்பெருமானை, ஓரிடத்தில் மகாவிஷ்ணு வரவேற்றார். அப்போது முருகப்பெருமானை வாழ்த்திப் பாடல்களும் பாடினார். பின்னர் மகாவிஷ்ணு கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த இடத்திலேயே முருகப்பெருமான் கோவில் கொண்டார். மகாவிஷ்ணு முருகப்பெருமானை வரவேற்றுப் பாடிய பாடல்கள் ‘ஹரிப்பாடல்கள்’ என்றும், அவர் பாடிய இந்த இடத்திற்கு ‘ஹரிப்பாடு’ என்றும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
முன்னொரு காலத்தில் முருகப்பெருமான் சிலை ஒன்றை வைத்து, பரசுராமர் பூஜை செய்து வழிபட்டு வந்தார். அதன்பிறகு அந்தச்சிலையை ஏதோ ஒரு காரணத்தால் கந்தநல்லூரில் உள்ள கோவிந்தமட்டம் உப்பங்கழியில் விட்டுச் சென்றுள்ளார். அந்தச்சிலை பிற்காலத்தில் காயம்குளம் ஏரிப்பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கிறது. காயம்குளம் ஏரிப்பகுதியில் முருகன் சிலை இருப்பது குறித்த தகவல், அப்போதைய  ஹரிப்பாடு நில உடைமையாளர்கள் அனைவருக்கும், ஒரே நேரத்தில் கனவாகத் தோன்றியிருக்கிறது. அதனையடுத்து அவர்கள், காயம்குளம் ஏரிப்பகுதிக்குச் சென்று அந்தச் சிலையைத் தேடியிருக்கின்றனர். அந்தத் தேடுதல் வேட்டையில் நெல்புரவுக் கடவு என்னும் இடத்தில் அந்தச் சிலை கிடைத்திருக்கிறது.
 
அந்தச் சிலையை நிரந்தரமான இடமொன்றில் வைக்கும் வரை, அருகிலிருந்த ஓரிடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்தச்சிலை அருகில் இருந்த கிறித்தவக் குடும்பம் ஒன்றுக்குச் சொந்தமான இடத்தில் இருந்த ஆலமரம் ஒன்றின் கீழ் வைக்கப்பட்டது. பின்னர் தற்போதுள்ள இடத்தில் புதிதாக ஆலயம் கட்டப்பட்டு,  முருகர் சிலையை நிறுவினர். புதியதாக கட்டப்பட்ட ஹரிப்பாடு கோவிலுக்கு முருகர் சிலையை எடுத்துச் செல்வதற்கு முன்பாக, ஆலமரத்தின் அடியில் இருந்த அந்த சிலைக்குச் சிறிது நேரம் வழிபாடு செய்யப்பட்டது. இப்படி வழிபாடு செய்யப்பட்ட இடத்திலும் ஒரு சிறிய கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை மலையாளத்தில் அரை நாழிகை அம்பலம் என்கின்றனர்.
 
கோவில் அமைப்பு : கேரளாவில் ஹரிப்பாடு கோவில், நான்கு கோபுரங்களுடன் வட்ட வடிவக் கருவறையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. கலியுகத்திற்கு முன்பே இந்த கோயில் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இதுவே கேரளத்தின் மிகப் பெரிய முருகன் கோயிலாகும். மேலும் இங்கு உள்ள கொடிக்கம்பமும் மிக உயர்ந்தது ஆகும். இந்த கோயில் குளம் கேரளாவின் மிகப்பெரிய கோயில் குளங்களில் ஒன்றாகும், இது சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கோயிலின் கிழக்குப் பக்கத்தில் தங்கக் கொடி மரம் உள்ளது.  கோயில் வளாகத்தில் ஒரு கூத்தம்பலம் உள்ளது முருகனின் வாகானமான மயில்கள் பாதுகாக்கப்பட்டு கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள முருகப்பெருமான் ‘சுப்பிரமணிய சுவாமி’ என்று அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் முருகப்பெருமான் தனித்து காணப்படுகிறார். இந்த ஆலயம் திரு மணத்திற்கு முன்பாக அமைந்தது என்பதால், இங்கு வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிலைகள் அமையவில்லை கோவில் வளாகத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணர், தர்மசாஸ்தா, யட்சி, குருதிக்காமன், பஞ்சமி போன்றவர்களுக்கான சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
 
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திர நாளிலும், முருகப்பெருமானுக்குரிய பிற நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இது தவிர ஆவணிப் பெருவிழா, மார்கழிப் பெருவிழா,  சித்திரைப் பெருவிழா என்று பத்து நாட்கள் கொண்ட திருவிழாக்கள் நடத்தப் பெறுகின்றன. திருக்கார்த்திகை தீபத்திருநாள், வைகாசி மாதத்தில் சிலை நிறுவப்பட்ட நாள், கந்தாஷ்டமி, நவராத்திரி, தைப்பூசம் போன்ற விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இக்கோவிலில் வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு கிடைத்தல், கல்வியில் மேன்மை போன்றவை கிடைக்கும் என்கின்றனர். 
 
தினமும் காலை 4.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்து இருக்கும். 

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் 

அருகிலுள்ள ரயில் நிலையம் : ஹரிப்பாடு  

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×