பால சுப்பிரமண்யா, உரவப்பாறா
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் கேரள மாநில இடுக்கி மாவட்டம் தொடுபுழாவுக்கு அருகில் உள்ள ஒலமட்டம் என்ற இடத்தில் உள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
தல சிறப்புகள் : ஸ்ரீ பால சுப்பிரமணிய சுவாமி கோயில் 'மலையாளப் பழனி' என்று அறியப்படுகிறது. இக்கோயிலில் முருகன் 'பால சுப்பிரமணியன்' வடிவத்தில் உள்ளார். இங்குள்ள சிலை ஒரு சுயம்பு என்று புராணக்கதை கூறுகிறது. மகாபாரதத்தில் புகழ்பெற்ற மாவீரர்களான பாண்டவர்கள், அவர்களது மனைவி திரோபதியுடன் பன்னிரண்டு ஆண்டு வனவாசத்தின்போது இங்கு தங்கியிருந்தனர் எனப்படுகிறது. இங்கு உள்ள மூன்று பாறைகளானது பாண்டவர்கள் சமையல் செய்ய அடுப்புக்காக பயன்படுத்திய கற்கள் என்று நம்பப்படுகிறது. இவர்கள் இங்கு இருக்கும்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது என்றும், அப்போது பீமன் கடினமான பாறையின் மீது தனது கால்களை வலுவாக தேய்த்து, ஒரு நீரூற்றை உருவாக்கினான். பாறைகளிலிருந்து கீழே பாயும் 'அபிஷேகதீர்த்தம்' என்பதிலிருந்து இந்த கோவிலுக்கு பெயர் வந்தது என்று நம்புகிறார்கள்.
கோயிலின் தைப்பூசம் மிக முக்கியமான திருவிழா நடத்தப்படுகிறது. உப்பு மற்றும் மிளகு ஆகியவை தெய்வத்திற்கு இரண்டு முக்கியமான பிரசாதங்கள் ஆகும்
காலை 5.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின்
அருகிலுள்ள ரயில் நிலையம் : தொடுபுழா
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு