திருமுருகன்பூண்டி - திருப்பூர்





	


	



























	




 




	








 




10:37:45 PM         Monday, April 20, 2026

திருமுருகன்பூண்டி - திருப்பூர்

திருமுருகன்பூண்டி - திருப்பூர்
திருமுருகன்பூண்டி - திருப்பூர் திருமுருகன்பூண்டி - திருப்பூர் திருமுருகன்பூண்டி - திருப்பூர் திருமுருகன்பூண்டி - திருப்பூர் திருமுருகன்பூண்டி - திருப்பூர் திருமுருகன்பூண்டி - திருப்பூர் திருமுருகன்பூண்டி - திருப்பூர் திருமுருகன்பூண்டி - திருப்பூர் திருமுருகன்பூண்டி - திருப்பூர் திருமுருகன்பூண்டி - திருப்பூர் திருமுருகன்பூண்டி - திருப்பூர் திருமுருகன்பூண்டி - திருப்பூர் திருமுருகன்பூண்டி - திருப்பூர்
Product Code: திருமுருகன்பூண்டி - திருப்பூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                 திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோயில்


திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்,  திருப்பூர் மாவட்டத்தில் கோவை-திருப்பூர் நெடுஞ்சாலையில் அவிநாசியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.  

மூலவர் : முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி

அம்பாள் :  ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை (முயங்குபூண்முலையம்மை), ஆவுடைநாயகி, மங்களாம்பிகை

தல விருட்சம்  : வில்வம், மாதவி(குருக்கத்தி)

தீர்த்தம் : பிரமதீர்த்தம், ஞானதீர்த்தம், சுப்பிரமணியதீர்த்தம். ஷண்முக தீர்த்தம்

தலச் சிறப்புகள் : முருகன் வழிபட்டதற்கு அடையாளமாக முருகன் சன்னிதியின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு லிங்கம் உள்ளது. இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை. அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாகத் தொன்நம்பிக்கை உள்ளது. சுந்தரர் பொருட்களைப் பறிகொடுத்த இடமான கூப்பிடு விநாயகர் கோவில் அவினாசிக்கு அருகில் அமைந்துள்ளது.

சுவாமியும் அம்பாளும் மேற்கு பார்த்த சந்நிதிகள். மூலவர் அம்பாள் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கி உள்ளது. பதினாறுகால் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்பால் வேடுவர் உருவமும் சுந்தரர் உருவங்கள் இரண்டும் (ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலையிலும், மற்றொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்) உள்ளன. சித்தபிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்கு வந்து தங்கியிருந்து நீராடி வழிபடுவதை காணலாம். பிரமதாண்டவ நடராசர் சந்நிதிக்கு சற்று தொலைவில் மாலாதரன் எனும் வேட மன்னன் வழிபட்ட மாதவனேஸ்வரர் கோயில் உள்ளது. எங்கும் இல்லாத புதுமையாக கோயிலின் முன் மண்டபத்தின் மேல், பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடிய தலபுராணம் உள்ளது.

தல வரலாறு : இந்த கோயில் 9 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. கோயிலின் தோற்றம் பழங்காலத்தில் வேரூன்றியுள்ளது. திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலத்திற்கு துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டுவந்தார் என்பது தொன்நம்பிக்கை. இக்கோயிலில் வீரராஜேந்திரன், கோனேரின்மை கொண்டான், குலோத்துங்க சோழ தேவன், விக்கிரம சோழதேவன், வீர நஞ்சையராய உடையார் ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன.

பரிசில் பொருட்களுடன் கூப்பிடு விநாயகர் கோவிலில் இரவைக் கழித்த சுந்தரரிடமிருந்த பொருட்களைத் தன் பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பிக் கொள்ளையடிக்கச் செய்தார். தன் உதவியை நாடிய சுந்தரரருக்கு சிவன் குடிகொண்டிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டி உதவினார் விநாயகர். சுந்தரரரும் அவ்விடம் சென்று அங்கிருந்த சிவனைத் திட்டிப் பாட அவரது பாடலில் மகிழ்ந்த சிவன் அவரது பொருட்களைத் திருப்பியளித்து ஆசி வழங்கியதாக மரபுவரலாறு உள்ளது. முருகனால் வழிபடப்பட்டதால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முதன்மைக் கடவுளான சிவன் முருகநாதேசுவரர் எனப் பெயர்பெற்றார் என்ற மரபு வரலாறும் வழக்கத்தில் உள்ளது. துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவி குருக்கத்தி மரத்தை இங்கு கொண்டு வந்தார் என்பர். ஆதலால் இதற்கு மாதவிவனம் என்றும் பெயர். 

முருகப்பெருமான் அரக்கன் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ளும் பொருட்டு இந்த தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்று கூறப்படுகிறது. இத்தலத்து விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயரில் காட்சி தருகிறார். சுந்தரரின் பரிசுப் பொருள்கள் சிவபெருமானால் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு விநாயகர் சுந்தரரைக் கூப்பிட்டு பொருள் இருக்கும் இடத்தைக் காட்டி அருளியதால் அவர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார். அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர். இதற்கு மாதவி வனம் என்ற பெயரும் உண்டு. முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம். முருகப்பெருமான் விரும்பி வந்து சிவவழிபாடு செய்த பெருமைக்கு உரியது. ஸ்ரீ மங்களாம்பிகையுடன் ஸ்ரீ மாதவனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலத்துக்கு,  இன்னும் பல  பெருமைகள் உண்டு.

தன் நண்பரான சேரமான்பெருமாள் தந்த பெருஞ்செல்வத்துடன் இவ்வழியே பயணித்துக் கொண்டிருந்தாராம் சுந்தரமூர்த்தி நாயனார். அவருடைய தெள்ளுதமிழ் பாடல்களைக் கேட்க விரும்பிய இறைவன், தமது திருவிளையாடலைத் துவக்கினார். வேடன் வடிவில் வந்து செல்வங்களை அபகரித்துச் சென்றார். இதனால் ஆத்திரமும் ஆதங்கமும் கொண்ட சுந்தரர், இந்தத் தலத்தின் கோயிலுக்கு வந்து பாடல்கள் பாடி இறைவனிடம் முறையிட, அவர் பறிகொடுத்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தன என்கிறது தல புராணம்.

கோவில் அமைப்பு : முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. சுவாமி, அம்மன் சன்னிதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் நடுவில் சண்முகதீர்த்தம், இடப்புறத்தில் ஞானதீர்த்தம்,வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. திருமுருகநாதர் கோயில் மேற்கு திசையை நோக்கி உள்ளது. இந்த கோயிலில் மற்ற கோயில்களைப் போல நுழைவு கோபுரம் இல்லை. கோயிலுக்கு வெளியே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கருங்கல் தீபஸ்தம்பம் உள்ளது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் உயர்ந்த மதில் சுவர்களை உடையதாய் 2 பிரகாரங்களுடன் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. 

கோயிலின் மூலவர் சிவலிங்க வடிவில் மேற்கு நோக்கி தரிசனம் தருகிறார். உட்பிரகாரத்தில் நிருதி விநாயகர், சண்முகர், துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், நவகிரக சந்நிதிகள் உள்ளன. மூலவர் சந்நிதியின் வலப்பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் முருகன் ஆறு முகங்களுடன் காட்சி தருகிறார். இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் ஆவுடைநாயகியின் சந்நிதி அமைந்துள்ளது.  மாதவனேசுவரர் கோயில் வளாகத்தில் கேது ஸ்தலம் அமைந்துள்ளது, கேது கிரகம் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்கின்றனர். சேரமான் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருள்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்த சமயகுரவர்களில் ஒருவரான சுந்தரர் திருமுருகன்பூண்டி அருகே வரும் போது சிவபெருமான் தன் பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி சுந்தரரின் பரிசுப்பொருட்களை கொள்ளையடித்து வரச்செய்தார். கவலை அடைந்த சுந்தரர் திருமுருகன்பூண்டி சென்று இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார்.

இறைவன் நேரில் தோன்றி கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை மீண்டும் சுந்தரரிடம் ஒப்படைத்தார். இதனை விளக்கும் வகையில் இக்கோயில் மண்டபத்தில் வில் ஏந்தி வேட்டுவன் கோலத்தில் சிவபெருமான் சிற்பமும் பரிசுப் பொருட்களை பறிகொடுத்த நிலையில் சுந்தரர் கவலையுடனும், ஈசனால் பரிசுப்பொருட்களை திரும்ப பெறப்பட்ட நிலையில் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன. இழந்த பொருளை மீண்டும் பெற்றிட பரிகாரத் தலமாக திருமுருகன் பூண்டி தலம் விளங்குகிறது.

கோயிலில் மாசிமாதம் பெருந்திருவிழா நடக்கிறது. கார்த்திகை, சஷ்டி, விசாகம், பிரதோஷ, ஆடி அமாவாசை மற்றும் தமிழ் முதல் திங்கள் ருத்ராபிஷேகம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம் ஆகிய முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்

அருகிலுள்ள ரயில் நிலையம் :  திருப்பூர்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×