கோவனூர் - சிவகங்கை





	


	



























	




 




	








 




11:17:15 AM         Monday, April 20, 2026

கோவனூர் - சிவகங்கை

கோவனூர் - சிவகங்கை
கோவனூர் - சிவகங்கை கோவனூர் - சிவகங்கை கோவனூர் - சிவகங்கை கோவனூர் - சிவகங்கை கோவனூர் - சிவகங்கை கோவனூர் - சிவகங்கை கோவனூர் - சிவகங்கை கோவனூர் - சிவகங்கை
Product Code: கோவனூர் - சிவகங்கை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                          கோவனூர், சுப்பிரமணியர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 7 கி.மீ தூரத்தில் பில்லூர் கிராமம் உள்ளது. பில்லூரிலிருந்து தெற்கே 2 கி.மீ. நடந்து சென்றால் கோவனூர் முருகன் கோயிலை அடையலாம். 

மூலவர்  : சுப்பிரமணியர்

அம்மன் : வள்ளி, தெய்வானை 

சித்த மருத்துவ பயிற்சியாளர்களுக்கும், வழிபாட்டுக்கு சித்த மருந்துகளைப் பயன்படுத்துபவர்களுக்கும் இது புனிதமான இடம்.

தல வரலாறு : அகத்தியர் ஒரு முறை திருப்புவனம் சென்று பூவனநாதரை வழிபாடு செய்த பின் கானப்பேர் காளீசரைத் தரிசிக்கும் நோக்கத்தோடு வந்து கொண்டிருந்தார். அப்போது மாலைநேரமாகி விட்டது. எனவே பூஜை செய்வதற்காக தியானித்து ஒரு ஊற்றை தோற்றுவித்தார். அதிலிருந்து தனது கமண்டலத்தில் நீர் தேக்கி வழிபாடு செய்ய தொடங்கினார். அப்படி வழிபாடு செய்யும் போது கமண்டலத்திலிருந்த நீர் அருகிலிருந்த செடி மீது பட்டு பூநீராக பெருகியது. இதனை சேகரிப்பதற்காகத்தான் சித்தர்களும், சித்த வைத்தியர்களும் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் அதிகாலை 6 மணிக்குள் இங்கு வந்து முருகனை தரிசித்து விட்டு பூநீர் சேகரித்து செல்கின்றனர். அகத்திய முனிவர் இத்தலத்தில் அமர்ந்து வழிபாடு செய்த இடத்தின் தெய்வீகத்தன்மையை உணர்ந்து, தனது இஷ்ட தெய்வமும், குரு முதல்வரும் ஆன சுப்பிரமணியரை வள்ளி, தெய்வானையுடன் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பாண்டிய மன்னனைக்கொண்டு மூல மூர்த்தி பிரதிஷ்டையும், கோயிலும் கட்ட ஏற்பாடு செய்தார். மயில் மண்டபத்தில் உள்ள மயிலானது வித்தியாசமாக பாம்பை வாயில் கவ்வி பிடித்திருக்கும். 

கோவானூரில் சாத்தப்பன் என்ற சிறுவன் இருந்தான். இவனுக்கு சிறுவயதிலிருந்தே இறையுணர்வு அதிகம். ஒரு நாள் இவன் காட்டில் திரிந்து கொண்டிருந்த போது, தாகம் மிகுந்த முனிவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவினான். அந்த முனிவர்களும் இந்த சிறுவனுள் ஆழ்ந்து கிடந்த இறையுணர்வை வெளிக்கொண்டு வர உபதேசம் செய்து சென்றார்கள். இந்த சிறுவன் பிற்காலத்தில் இக்கோயிலே கதி என கிடந்தான். பின் பல தலங்களுக்கு சென்று சாத்தப்பஞானி என எல்லோராலும் போற்றப்பட்டார். இவர் தான் சிவகங்கை சீமை தோன்ற காரணமாக இருந்தவர். சிவகங்கை மன்னர்களின் ராஜகுருவாகவும் இருந்தார். 

மயில் மண்டபம் கருவறைக்கு முன்னால் உள்ளது. கோபுரத்திற்கு அருகிலுள்ள நுழைவாயிலின் வடக்கே இடும்பன் ஆலயம் உள்ளது. இறைவன் காசி விஸ்வநாத அன்னை விசாலட்சி மற்றும் விநாயகர் ஆகியோருடன் தனித்தனி ஆலயங்களிலிருந்து பக்தர்களை அருள்பாலிக்கிறார். கோவனூர் தலத்துக்கு மூன்று திசைகளிலும் குண்டுமணி அம்மன், சுந்தரவள்ளி அம்மன், ராக்காச்சி அம்மன் ஆகிய மூவர் காவல் தெய்வங்களாகத் திகழ்கின்றனர். இவற்றுள் கோயிலுக்கு நேர்கிழக்கில் ஒரு கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் குண்டுமணி அம்மன் கோயில்தான் மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் குண்டுமணி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சித்ரா பௌர்ணமியன்று இங்கே நடைபெறும் விழா மிகவும் பிரபலம். அன்றுதான் சித்தர்கள் சூட்சும வடிவில் கோவனூர் கோயிலுக்கு வந்து முருகப் பெருமானை வழிபடுகின்றனர். சித்ரா பௌர்ணமியில் மட்டுமல்லாமல், மாசிமகம், பங்குனி உத்திரம் போன்ற நாள்களிலும் சித்தர்கள் இங்கே வந்து வழிபாடு செய்வதாக ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது. பின்னர் குண்டுமணி அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு, அங்கே கிடைக்கும் பூநீரைப் பருகுவதாகச் சொல்கிறார்கள். அன்றைய தினம் சித்த வைத்தியர்களும் கோயிலுக்கு வந்து பூநீர் சேகரித்துச் செல்வதை இன்றைக்கும் நாம் காணலாம்.

இந்த கோயில் ஒரு நாளைக்கு ஒரு முறை பூஜை மட்டுமே கொண்டு செயல்படுகிறது. கந்த சஷ்டி,   பங்கூனி உத்திரம், திரு கார்த்திகை ஆகியவை கோவிலில் கொண்டாடப்படும் பண்டிகைகள். கோவனூரில் உள்ள முருகன் கோயில் விபூதிப் பிரசாதம் அளவற்ற மகிமை கொண்டது. திருச்செந்தூரில் தருவதுபோலவே இங்கும் இலை விபூதி பிரசாதமாகத் தரப்படுகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். 

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : காரைக்கால்

அருகிலுள்ள ரயில் நிலையம் :  திருநாகேஸ்வரம், கும்பகோணம் 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×