சிவகிரி -திருநெல்வேலி





	


	



























	




 




	








 




11:48:41 AM         Monday, April 20, 2026

சிவகிரி -திருநெல்வேலி

சிவகிரி -திருநெல்வேலி
சிவகிரி -திருநெல்வேலி சிவகிரி -திருநெல்வேலி சிவகிரி -திருநெல்வேலி சிவகிரி -திருநெல்வேலி சிவகிரி -திருநெல்வேலி சிவகிரி -திருநெல்வேலி சிவகிரி -திருநெல்வேலி சிவகிரி -திருநெல்வேலி சிவகிரி -திருநெல்வேலி
Product Code: சிவகிரி -திருநெல்வேலி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                         பாலசுப்பிரமணியசுவாமி, சிவகிரி
 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், திருநெல்வேலி குற்றாலம் செல்லும் சாலையில் மேற்கே 16 கி.மீ தொலைவில் உள்ளது.
 
மூலவர்  : பாலசுப்ரமணியர்
 
உற்சவர் : முத்துகுமாரர் 
 
தல தீர்த்தம் : சரவண பொய்கை
 
தலச் சிறப்புகள் : இங்குள்ள பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் ஆகும். முருகன் தனது ஜடா முடியை கிரீடம் போல் சுற்றி வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது பாதத்தில் நவகிரக தகடு வைக்கபட்டுள்ளது. கிரக தோஷ உள்ளவர்கள் முருகனை வழிபட தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. திருசெந்தூர் முறையிலே இங்கு பூஜை செய்யப்படுகிறது.
 
அகத்தியருக்கு முருகன் காட்சி தந்த இடத்தில பாத மண்டபம் உள்ளது. முருகனின் பாதமும் அருகில் லிங்கமும் உள்ளது. கோயில் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பைரவர், சண்டிகேஸ்வரி, நவக்கிரகம், சனிக்கிரகம், துர்கை, இடும்பன் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. குன்றின் மத்தியில் காளியம்மன் உள்ளது. காலை மாலை சுயராட்சை பூஜையின் போது இவளுக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.
 
தல வரலாறு : முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்துவிட்டு,தெய்வானையை மணந்து கொள்ள திருப்பரங்குன்றம் திரும்பினார். அப்போது முருகனின் தரிசனம் காண விரும்பிய அகத்தியர் இத்தலத்திலுள்ள குன்றில் தவம் செய்து கொண்டிருந்தார். அவரது வேண்டுதல்படி இங்கேயே எழுந்தருளினார். பிற்காலத்தில் இங்கு முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சூரபத்மனை போரிட்டு அழித்த முருகன் இங்கு பால வடிவில் காட்சி தருவதால், “பாலசுப்பிரமணியர்” என்று அழைக்கப்படுகிறார். இவரது பாதத்தில் நவக்கிரகங்களின் உருவம் பொறித்த தகடு வைக்கப்பட்டுள்ளது. கிரக தோஷம்தோஷம் உள்ளவர்கள் அந்த கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாளில் முருகனை வழிபட தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. சுற்றிலும் தண்ணீர், மலைகள் சூழ அமைந்த அழகிய தலம் இது. கோயில் அமைந்துள்ள குன்று "சக்தி மலை' எனப்படுகிறது. இதற்கு இடப்புறத்தில் "சிவன் மலை' உள்ளது. அதாவது சிவன், அம்பாளுக்கு நடுவே முருகன் "சோமாஸ்கந்த' வடிவில் இங்கு கோயில் கொண்டிருக்கிறார். முருகன் சன்னதிக்கு வலப்புறம் சுந்தரேசுவரர், இடப்புறம் மீனாட்சியம்மனுக்கும் சன்னதி இருக்கிறது. 
 
கந்த சஷ்டி 7 நாட்கள் நடைபெறும். அனால் இக்கோவிலில் 11 நாட்கள் நடைபெறுகிறது. 11ம் நாளன்று முருகனுக்கு தங்க கிரீடம் அணிவித்து செங்கோல் கொடுத்து மகுடாபிஷேகம் செய்கின்றனர். இந்த திருவிழா பிரசித்தி பெற்றது. வைகாசி விசாகம், சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், தைப்பூசம்,  கிருத்திகை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. 

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருவனந்தபுரம்  

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி, தென்காசி

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×