ஆண்டவர்மலை - ஈரோடு





	


	



























	




 




	








 




7:10:26 PM         Monday, April 20, 2026

ஆண்டவர்மலை - ஈரோடு

ஆண்டவர்மலை - ஈரோடு
ஆண்டவர்மலை - ஈரோடு ஆண்டவர்மலை - ஈரோடு ஆண்டவர்மலை - ஈரோடு
Product Code: ஆண்டவர்மலை - ஈரோடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                ஆண்டவர் மலை, பால தண்டாயுதபாணி 
 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கொருமடுவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.  சத்தியமங்கலம், கோபியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
 
மூலவர் : பால தண்டாயுதபாணி
 
கோபியில் பச்சைமலை, பவளமலை, ஆண்டவர்மலை என மூன்று குன்றுகள் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளது. பச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும், பவளமலை குன்றில் முத்துக்குமார சுவாமியாகவும், ஆண்டவர்மலை குன்றில் பால தண்டாயுதபாணி சுவாமியாகவும் முருகன் கோயில் திகழ்கிறது. 

தலச் சிறப்புகள் : முருகப்பெருமான் விரும்பிக் குடியேறியத் தலம், பழனியைப் போல மேற்கு நோக்கிய சன்னிதி அமைந்த கோவில், மூன்று கிருத்திகைக்குள் திருமண வரம் அருளும் நம்பிக்கை தெய்வம், பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறும் பார்வதி சுயம்வர யாகம் நடைபெறும் ஆலயம். சுமார் இரண்டடி உயரத்தில் வலது கையால் தண்டம் ஊன்றி, இடது கையை இடுப்பில் வைத்து அருளாசி வழங்கும் கோலம், நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதற்கு இவர் சாட்சியாக விளங்குகிறார். 

தல வரலாறு : ஆதார மூலக்கோயிலின் கால அளவை நிர்ணய படுத்த முடியாத அளவிற்கு ஆண்டவர் மலை முருகன் கோயில் பழமை வாய்ந்தது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்குன்றில் குடிகொண்ட முருக பெருமானைப் போற்றி வணங்கி பூசாரி சித்தர் என்பவர் பக்தர்களுக்கு அருள்வாக்கு கொடுத்து வந்தார். அதன் பின்னர் குப்பணசித்தர் என்பவர் காற்று ஆதாரத்துடன் பல காலங்கள் அருள் பாலித்து வந்தார். கடந்த 1980ம் ஆண்டு கோயில் திருப்பணிகள் துவங்கப்பட்டது. தொடர்ந்து பத்து வருடங்களாக கோயில் திருப்பணிகள் நடந்து 1990ம் வருடம் நிறைவு பெற்றது. ஆண்டாண்டு காலங்களாக ஆன்றோரும், சான்றோரும் வழி வழியாய் வழிபடும் அற்புதத் தலமாக கோபிசெட்டிபாளையம் ஆண்டவர் மலை முருகன் கோயில் திகழ்கிறது. 
 
கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது. அந்த சமயத்தில் இரண்டு யானைகள் அங்குள்ள நீர்நிலையில் தண்ணீர் பருக வந்தன. ‘யானைகளால் சிலைகள் சேதமடைந்தால் எப்படி கும்பாபிஷேகம் நடத்துவது?’ என்று ஊர்மக்கள் பயந்தனர். அப்போது ஒரு பக்தர் “முருகா, முருகா” என கோஷமிட யானைகள் அங்கிருந்து அகன்று, காட்டிற்குள் ஓடி மறைந்த அதிசயமும் இந்த ஆலயத்தில் நடந்திருக்கிறது. கிழக்கு நோக்கிய விநாயகர் சன்னிதி எதிரே மேற்கு நோக்கிய பால தண்டாயுதபாணி சுவாமி சன்னிதி அமைந்துள்ளன. இது தவிர சிவன், பார்வதி, ஏகபாத மூர்த்தி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு, காலபைரவர், நவக்கிரக சன்னிதிகள் அமைந்துள்ளன. குலதெய்வமான செல்வநாயகிக்குத் தனி சன்னிதி உள்ளது. கல்லால மரத்தின் அடியில் தட்சிணாமூர்த்தி தென்முகமாக அமைந்துள்ளார். மேற்கு பார்த்த முருகன் சன்னிதி மிகவும் அபூர்வமானது. பழனி, கோபி பச்சை மலை, மயிலை கபாலீஸ்வரர் கோவில் என குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே காணப்படும் அமைப்பு ஆகும் இது.
 
இப்பகுதி, மலைவாழ் மக்களின் விருப்ப தெய்வமாக பாலதண்டாயுதபாணி திகழ்கின்றார். வியாபார நிமித்தமாக இந்தப் பகுதிக்கு வந்த முருக பக்தர் ஒருவர் கிருத்திகை நாளன்று, தள்ளிப்போகும் தன் மகளின் திரு மணத்திற்கு வேண்டிக்கொள்ள கைமேல் பலன் கிடைத்தது. மனம் மகிழ்ந்த அவர், திருப் பணிக்கு பெரும் தொகையினைத் தந்து, தன் நன்றியை தெரிவித்திருக்கிறார். இந்த ஆலயத்தில் கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு, பித்ருக்கள் சாப விமோசனம் பெற பித்ருக்களுக்கான தனி ஆலயம் உள்ளது. திருமணத் தடைபட்டவர்கள், கிருத்திகை நாளன்று நேரில் வந்து மனமுருக வேண்டிக் கொண்டால், மூன்று கிருத்திகைக்குள் திருமணம் நடந்து முடிவதாக இவ்வூர் பக்தர்கள் உறுதிபட கூறுகின்றனர்.
 
அமாவாசை, மாதக் கிருத்திகை, சஷ்டி, தைப்பூசம், பங்குனி, உத்திரம் ஆகிய சிறப்புமிக்க திருவிழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தினமும் மூன்று கால பூஜைகள் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு செய்யப்படுகிறது. நோயுற்றவர்கள் கோயில் மண்டபத்தில் தங்கி, தரிசித்து வழிபாடு செய்கின்றனர். இதன்மூலம் குணம் பெற்றுச் செல்பவர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி நலம்பெறுகின்றனர். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
 
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
 
அருகிலுள்ள விமானதளம் :  கோயம்புத்தூர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் : ஈரோடு சத்தியமங்கலம்

பேருந்து வசதி : உண்டு
 
தங்கும் வசதி : உண்டு
 
உணவு வசதி : உண்டு
 
 
 
 
 
Mail this page Printable view
×
×
×
×
×
×
×