மடிப்பாக்கம் - சென்னை





	


	



























	




 




	








 




12:10:54 AM         Tuesday, April 21, 2026

மடிப்பாக்கம் - சென்னை

மடிப்பாக்கம் - சென்னை
மடிப்பாக்கம் - சென்னை மடிப்பாக்கம் - சென்னை மடிப்பாக்கம் - சென்னை மடிப்பாக்கம் - சென்னை மடிப்பாக்கம் - சென்னை மடிப்பாக்கம் - சென்னை மடிப்பாக்கம் - சென்னை மடிப்பாக்கம் - சென்னை மடிப்பாக்கம் - சென்னை
Product Code: மடிப்பாக்கம் - சென்னை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                         மடிப்பாக்கம், கல்யாண கந்தசுவாமி
 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், சென்னையில் பரங்கிமலை மற்றும் வேளச்சேரி பகுதிகளுக்கு அருகில்
 மடிப்பாக்கம் கல்யாண கந்தசுவாமி உள்ளது.
 
மூலவர்  : கல்யாண கந்தசுவாமி
 
அம்மன் : வள்ளி, தெய்வானை 

பாடியோர் :   அருணகிரிநாதர்

தலச் சிறப்புகள் : நுழைவுவாயிலில் கொடிமரமும், மயில் வாகனமும் அமைந்திருக்க கருவறையில் கல்யாண கந்தசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிக்கிறார். கருவறையின் தெற்கில் கருணை கணபதி, வடக்கில் செவ்வாய் பகவான் இருவரும் துவார பாலகர்களைப்போல வீற்றிருக்கிறார்கள். கோஷ்டங்களில் குருபகவானும், ஜெயதுர்க்காவும் திருவருள் பாலிக்கின்றனர். இவர்கள் தவிர ராமர், சீதை, லட்சுமணர், அபீதகுசலாம்பிகை சமேத அருணாசலேஸ்வரர், நவகிரகங்கள் ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருள்கின்றனர். முருகனின் ஆறெழுத்து மந்திரமான சரவணபவ எனும் எழுத்துகளே இங்கு கருவறைக்குச் செல்லும் படிக்கட்டுகளாக உள்ளன.

இப்பகுதியைச் சேர்ந்த முருகபக்தர்கள் அடிக்கடி கந்தகோட்டம், திருப்போரூருக்கு சென்று கந்தசுவாமியை தரிசித்து வந்தனர். ஒருகால கட்டத்தில் அவர்கள் கந்தசுவாமியை இப்பகுதியிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினர். அதன் அடிப்படையில் இந்த ஆலயத்தை உருவாக்கினார். முதலில் விநாயகர் மட்டுமே இங்கு அருள்புரிந்து வந்தார். இதன் பிறகே முருகப்பெருமானுக்கு சன்னதி அமைத்து கும்பாபிஷேகம் செய்து கோயில் கட்டினர். இங்கு நாம் முருகனை தரிசிக்க ஆறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த படிகளுக்கு படிபூஜையும் நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் மற்றும் கந்தசஷ்டியன்று நடைபெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தில் முருகனுக்கு அணிவித்த மாலையை வாங்கி திருமணம் ஆகாதவர்கள் அணிந்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுகிறது. இங்கே முருகன் திருமணக் கோலத்தில் வீற்றிருப்பதால், கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை.
 
தல வரலாறு : பரம்பொருள், புருஷ வடிவில், மாயா சம்பந்தத்தால் தேவிகளை ஏற்கும்போது மாயை இரண்டு அம்சங்களாக உதிக்கிறாள். இந்த இரு அம்சங்களே சிவனுக்கு பார்வதி-கங்கையாகவும், திருமாலுக்கு ஸ்ரீதேவி-பூதேவியாகவும், நான்முகனுக்கு சாவித்ரி-சரஸ்வதியாகவும், விநாயகனுக்கு சித்தி-புத்தியாகவும் அருள்வது போல் முருகப் பெருமானுக்கு தேவசேனா-வள்ளி எனத் துணை நிற்கின்றன என கந்தபுராணம் கூறுகிறது. அதன்படி கருவறையில் தன் நாயகியரான வள்ளி, தேவசேனாவுடன் அழகே உருவாய், அருளே வடிவாய் முருகப் பெருமான் திருவருள்புரிகிறார். மிகுந்த வரப்ரசாதியாக அவர் பக்தர்களால் போற்றப்படுகிறார். முன்பொரு சமயம் நாரதர் கூறிய திருமுருகனின் லீலா விநோதங்களைக் கேட்டு அகமகிழ்ந்த நாரணன் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் பெருக்க, அவர்தம் கண்ணீரிலிருந்து உதித்த இரு பெண்களும் முருகனைக் கணவராய் அடைய அவரிடம் வரம் கேட்டனர்.
 
அமுதவல்லி, சுந்தரவல்லி எனும் அந்த இருவரையும் பூவுலகில் தவம் புரியப் பணித்தார் பரந்தாமன். அவ்வாறே தவம் புரிந்த அவர்களின் முன் தோன்றிய முருகன், ‘அமுதவல்லி தேவேந்திரன் மகளாக இந்திரலோகத்தில் தேவசேனா எனும் பெயருடன் வளரவும், சுந்தரவல்லி பூமியில் வேடுவர் குலத்தில் வள்ளியாக வளர்ந்திடவும், தக்க காலத்தில் தாம் அவர்களை மணம் புரிவதாகவும்’ வாக்குறுதி அளித்தான். காலம் கனிந்தது. சூரபத்மனை இரு கூறாக்கி சேவலாகவும், மயிலாகவும் மாற்றி அசுரனுக்கே அருளி தேவலோகத்தைக் காத்த கருணாமூர்த்தியான முருகப் பெருமானின் வீரதீர பராக்ரமத்தால் மனமகிழ்ந்த தேவேந்திரன், தன் மகளான தெய்வானையை முருகப் பெருமானுக்கு மணமுடித்துத் தந்தார். அதேபோன்று தினைப்புனம் காத்த வள்ளியை வேடனாய், வேங்கை மரமாய் மாறி, விநாயகர் ஆசிபெற மறந்ததால் இடர்பட்டு, பிறகு அவரை வேண்டிக்கொள்ள யானையின் உருவினராகவே வந்தார் கணநாதன். யானையைக் கண்டு பயந்த வள்ளிநாயகி, முருகனை கட்டி அணைக்க முருகப் பெருமானின் திருவருளை உணர்ந்து வள்ளிநாயகியை அவருக்கு மணமுடிக்க முடிவெடுத்தான் வேடுவர்குல ராஜனான நம்பிராஜன். அதன்படி முருகப்பெருமான் எப்போதும் காதலுடன் தன்னையே நோக்கும் புள்ளிமானாகிய அந்த வள்ளி மானை மணந்தான். தேவசேனை தேவலோகத்து மந்தாரமாலை, முத்துமாலை போன்றவற்றை அணிந்த மார்பினள். முருகனின் இடப்புறம் அமர்ந்து அருள்பவள். வள்ளி தாமரைமலர் ஏந்தி, அலங்கார ரூபிணியாக, மாணிக்க மகுடங்கள் துலங்க, இடப்புறம் வீற்றிருப்பவள்.
 
இத்தலத்தில் அங்காரகனுக்கு தில பத்ம தானம் எனும் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. இத்தல அங்காரகனின் பாதங்களில் செவ்வாய்க்கிழமையன்று எள்ளையும் தாமரையையும் சமர்ப்பித்து மனமுருக பிரார்த்தனை செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். பங்குனி உத்திரம் மற்றும் கந்த சஷ்டியன்று முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது. அப்போது முருகப்பெருமான் அணிந்திருந்த மாலையை திருமணமாக வேண்டிய கன்னியரும், காளையரும் பிரசாதமாக வாங்கி அணிந்துகொள்ள அவர்களுக்குத் திருமணம் விரைவில் நிச்சயமாகிறது. எனவே, இத்தல முருகன் கல்யாண கந்தசுவாமி என போற்றப்படுகிறார். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் முருகனுக்கு பால்குடம் எடுத்து, அலகு குத்தியும் அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
 
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி  வரை திறந்திருக்கும்.. 
 
அருகிலுள்ள விமானதளம் : சென்னை 
 
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்னை பரங்கிமலை, வேளச்சேரி
 
பேருந்து வசதி : உண்டு
 
தங்கும் வசதி : உண்டு
 
உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×