நியூமோள்டன் வேல்முருகன் திருக்கோயில்
திருத்தல இருப்பிடம் : இலண்டனுக்கு அருகில் உள்ள சுர்ரே பகுதியை அடுத்த நியூமோள்டனில் அமைந்துள்ள சிறிய ஆலயமாகும்.
தமிழகத்தில் அமைந்துள்ள முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகை மலையின் கோயிலை போன்றே இவ்வாலயமும் அமைதியும், மனதிற்கு ஆறுதலும் தரும் சூழலில் அமைந்துள்ளது. கோயிலின் அமைப்பு, சிற்ப வேலைப்பாடு, பக்தர்கள் வழிபாடு உள்ளிட்ட பலவிதங்களில் தமிழகத்தின் திருத்தணிகை மலை முருகன் கோயிலை ஒத்திருக்கிறது.
2003ம் ஆண்டு சுர்ரே நகரின் புறநகர் பகுதியில் தற்காலிக ஆலயமாக அமைக்கப்பட்டது. பின்னர் ஆலய நிர்வாகிகளின் கடின உழைப்பு மற்றும் முருகப் பெருமானின் திருவருளால் நியூமோள்டன் பகுதியில் ஆலயத்திற்கான நிரந்த இடம் வாங்கப்பட்டு, ஆலயம் எழுப்பப்பட்டது. ஏராளமான பக்தர்களின் உதவியால் தற்போதுள்ள ஆலயம் கட்டப்பட்ட 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.
காலை 9.00 மணி முதல் பகல் 2.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.