8.பொல்லாப் பிள்ளையார்- தமிழ்நாடு





	


	



























	




 




	








 




4:40:58 PM         Wednesday, April 29, 2026

8.பொல்லாப் பிள்ளையார்- தமிழ்நாடு

8.பொல்லாப் பிள்ளையார்- தமிழ்நாடு
8.பொல்லாப் பிள்ளையார்- தமிழ்நாடு 8.பொல்லாப் பிள்ளையார்- தமிழ்நாடு 8.பொல்லாப் பிள்ளையார்- தமிழ்நாடு 8.பொல்லாப் பிள்ளையார்- தமிழ்நாடு 8.பொல்லாப் பிள்ளையார்- தமிழ்நாடு 8.பொல்லாப் பிள்ளையார்- தமிழ்நாடு 8.பொல்லாப் பிள்ளையார்- தமிழ்நாடு 8.பொல்லாப் பிள்ளையார்- தமிழ்நாடு 8.பொல்லாப் பிள்ளையார்- தமிழ்நாடு 8.பொல்லாப் பிள்ளையார்- தமிழ்நாடு 8.பொல்லாப் பிள்ளையார்- தமிழ்நாடு
Product Code: 8.பொல்லாப் பிள்ளையார்- தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருநாரையூர்- சௌந்தரநாதர் கோயில்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்  திருநாரையூர் என்னும் திருத்தலம், சிதம்பரம் & திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் – காட்டுமன்னார் கோவில் இடையே சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ தொலைவிலும், காட்டுமன்னார் கோவிலி லிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இறைவர் திருப்பெயர் : சௌந்தரநாதர்

இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி

தல மரம் : புன்னாகம்

தீர்த்தம் : காருண்ய தீர்த்தம்

பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர்

தலச் சிறப்புகள் :.  நாரை பூஜித்ததால் தலத்திற்கு இப்பெயர். தேவாரத் திருமுறைகள் தில்லை கனகசபையின் ஒரு அறையில் இருந்ததை நம்பியாண்டார் நம்பி மூலமாக வெளிப்படுத்திய பொல்லாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் தலம். நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த தலம். திருநாரையூர் திருத்தலம் தேவாரப் பாடல் பெற்ற, சோழ நாட்டுக் காவிரியின் வடகரைத் தலங்களில் 33-வது திருத்தலமாக விளங்குகின்றது.

இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர், ஆதலாலும் பொல்லாத பிள்ளையார் என்று அழைக்கலாம். எல்லா ஊரிலும் பெரும் தொப்பையுடன் இருக்கும் பிள்ளையார், இங்கே ஒட்டிய வயிறுடன் காட்சியளிப்பது அதிசயமான ஒன்று. பொல்லாப் பிள்ளையார் சன்னதி மிகச் சிறப்பு.(பொள்ளா என்பது பொல்லா என்றாயிற்று. பொள்ளா என்பது உளி முதலியவற்றால் செய்யப்படாதது. சுயம்பு மூர்த்தி.) கி.பி.11ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுகள் நான்கு உள்ளன. முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி விநாயகரின் ஆறாவது படை வீடாகும். பொல்லாப்பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு:  தவசிரேஷ்டரான துர்வாச முனிவர் ஒரு சமயம் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அச்சமயம், ஆகாய மார்க்கமாக கந்தர்வர்கள் சிலர் பறந்து சென்றார்கள். அவர்களில் தேவதத்தன் என்னும் கந்தர்வன் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு கொட்டைகளைக் கீழே போட, அவை மகரிஷி துர்வாச முனிவரின் மேல் விழுந்து முனிவரின் தவம் கலைந்தது. கண் திறந்த முனிவர் மிகுந்த சினம் கொண்டு அந்த கந்தர்வனைச் சபித்தார். பழக் கொட்டையைப் பறவைபோல் உதிர்த்த நீ நாரையாய்ப் போகக் கடவது! எனச் சாபமிட்டார். முனிவரின் சாபம் உடனடியாகப் பலித்துவிட்டது. கந்தர்வன் நாரையாக உருமாறினான். நாரை தன் பாவத்துக்கு விமோசனம் வேண்ட, முனிவரே வழி சொன்னார்: இங்கே இருக்கும் பெருமானுக்குத் தினமும் கங்கை நீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தால், உனக்குச் சாப விமோசனம் கிடைக்கும் என வழிகூறி அருளினார். நாரையும் அப்படியே செய்து இறைவனைப் பூசித்து வந்தது. ஒரு நாள், இறைவனின் சோதனையால் காசியிலிருந்து கங்கை நீர் கொண்டு வரும்போது பெரும் மழை பெய்து, கடும் புயலும் வீசியது. அதனால், நாரை பறக்க முடியாமல் தவித்தது. அதன் சிறகுகள் ஒவ்வொன்றாகக் காற்றில் பிய்ந்து விழுந்தன.

அவ்வாறு சிறகுகள் விழுந்த இடம் சிறகிழந்த நல்லூர் என்று வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊர் இப்போதும் திருநாரையூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவனின் திருநாமம் ஞானபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. சிறகுகளே இல்லாத நாரை தவழ்ந்து வந்து சிவனை வழிப்பட்டு மோட்சம் பெற்றது. அதனால் இந்த ஊர் திருநாரையூர் என்று அழைக்கப்படுகிறது. நாரைக்கு அருள் செய்த இத்தலத்து இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் சுயம்பிரகாசர் எனவும் வழங்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு:  மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவகிரகம், சனி பகவான், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர். சௌந்தரேஸ்வரரின் சந்நிதிக்குத் தென்மேற்குத் திசையில் தனிச் சந்நிதியில் பொல்லாப் பிள்ளையார் தரிசனம் தருகிறார். அவரது உண்மைத் திருநாமம் பொள்ளாப் பிள்ளையார் என்பதே. பொள்ளாத என்றால் உளியால் செதுக்கப்படாத அல்லது கல்லைப் பொளியாமல் தோன்றிய என்று அர்த்தம். இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாகத் தானே தோன்றிய காரணத்தால் பொள்ளாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். அதுவே தற்போது மருவி பொல்லாப்பிள்ளையார் என வழங்கப்படுகிறது.

சுப்பிரமணியருக்கு எவ்வாறு அறுபடை வீடுகள் உள்ளனவோ, அதுபோலவே விநாயகருக்கும் உண்டு. அதில் முதன்மையானது திருநாரையூர் மற்ற விநாயகர் தலங்கள் திருவண்ணாமலை, திருக்கடவூர், மதுரை, திருமுதுகுன்றம், காசி ஆகியவையாகும். பொள்ளாப் பிள்ளயார் இல்லாவிட்டால் தேவாரப் பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்காது.

பொள்ளாப் பிள்ளையார் சந்நிதியில் பக்தியுடன் தினமும் பூசித்து வந்தார், ஆதிசைவர் மரபில் தோன்றிய அனந்தேசர். இவரின் துணைவியார் கல்யாணி அம்மையார். இவர்களது புதல்வன் நம்பி. தினந்தோறும் நைவேத்தியத்தைக் கோயிலில் விநியோகித்தே திரும்புவார் அனந்தேசர். பிரசாதம் கேட்கும் தன் புதல்வன் நம்பியிடம் பிள்ளையார் சாப்பிட்டுவிட்டார் எனப் பதில் சொல்வார் தந்தை. ஒருமுறை தந்தை வெளியூர் போக, சிறுவன் நம்பி பக்தியுடன் பூசை செய்துவிட்டு, தாயார் கொடுத்த நைவேத்தியத்தைப் பிள்ளையார் முன் வைத்து விநாயகப் பெருமானை சாப்பிடும்படி வேண்டினான்! பிள்ளையார் சாப்பிடவில்லை. மன்றாடினான். தான் ஏதோ தவறு செய்துவிட்டதால்தான் பிள்ளயார் உணவை ஏற்க மறுக்கிறார் என்று எண்ணி வேதனையுடன் விழுந்து, புரண்டு அரற்றினான். தலையைக் கல்லில் முட்டி, மோதி அழுதான்.

தும்பிக்கை நாதன் நம்பியைத் தம் திருக்கரத்தால் தாங்கித் தடுத்தருளி நம்பி பொறு எனக் கூறித் துதிக்கையை வலப்புறமாக நீட்டிச் சாப்பிட்டார். மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பிய நம்பி, விஷயத்தைத் தாயாரிடம் சொன்னான். எப்படி நம்புவாள் அவள்? மறுநாள் நம்பியின் தந்தை மறைந்திருந்து பார்க்க மீண்டும் அதே அற்புதம் நடைபெற்றது. நம்பி சமர்பித்த நைவேத்தியத்தைத் தும்பிக்கைப் பிரான் ஏற்று உண்ட காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்தார் அனந்தேசர்.

நம்பியாண்டார் நம்பியின் சிறப்புகள் இராஜராஜ சோழனின் காதுகளுக்கு எட்டியது. சைவத் திருமுறைகளின் இருப்பிடம் தேடி அவற்றைத் தொகுக்கும் மாபெரும் பணியை முடித்துவிடவேண்டும் என்ற அவனது நெடுநாளைய ஆசைக்கு பொள்ளாப் பிள்ளையாரின் ஆசி வேண்டி வந்தான். திருமுறை இருக்கும் இடம் காட்டி அருள வேண்டும் என்று இராஜராஜனும், நம்பியும் வேண்ட, தில்லை நடராஜர் ஆலயத்தின் தென்மேற்கு மண்டபத்தில் சுவடிகள் கிடைக்கும் எனத் தெய்வவாக்கு ஒலித்தது. (இன்றும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள்பிரகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது). கோவிலுக்கு வெளியே சற்று தூரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி அவதரித்து வசித்து வந்த பவித்ரமான இடத்தில் தற்போது சிறிய மண்டபத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி சிற்ப வடிவில் நமக்கு அருள்பாலிக்கின்றார். 

சங்கடஹர சதுர்த்தியன்று பொள்ளாப் பிள்ளையாருக்கு விசேஷப் பூசைகள் நடைபெறும். மேலும் அன்று இரவு வானில் இருக்கும் சந்திரனுக்காக பொள்ளாப் பிள்ளையார் சந்நிதிக்கு வெளியே ஒரு குத்துவிளக்கு ஏற்றி, நிலாவை நோக்கி தீபாராதனை காட்டுவார்கள். இதைத் தரிசித்தபின்புதான் பக்தர்கள் தங்கள் விரதத்தை நிறைவு செய்வார்கள்.

தரிசன நேரம் :  கோவில் தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்து இருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி  ( 114 )

அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்  ( 8 )

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×